Saturday, February 25, 2012

ம.பி. பத்திரிகையாளர் கொலை: குழந்தையை கடத்திய கும்பலுக்கு தொடர்பு?

MP scribe's murder linked to abduction
போபால்:குடும்பத்துடன் கொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திரிகா ராய் ஒரு குழந்தையை கடத்திச் சென்ற கும்பலை பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கொலையில் முடிந்ததாக மத்திய பிரதேச போலீஸ் கூறுகிறது.

அண்மையில் பி.டபிள்யூ.டி பொறியாளரான ஹேமந்த் ஜாரியாவின் மகனை கடத்திச் சென்ற கும்பலை சந்திரிகாராய்க்கு தெரியும். ராய் அந்த கும்பலை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இம்முயற்சி கொலையில் முடிந்துள்ளது என்று ம.பி போலீஸ் கூறுகிறது.

எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் இந்தியா: ஒபாமா

Obama
வாஷிங்டன்:இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் அதிகரித்ததுதான் விலை உயர்வுக்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் எண்ணெயின் விலை உயர்வுக்கு மேற்கண்ட 3 நாடுகளும்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பாரக் ஒபாமா, மேற்காசியாவின் ஸ்திரமற்ற நிலையும், ஈரான் பிரச்சனையும் விலை உயர்வுக்கு ஆக்கமளித்துள்ளது என்று தெரிவித்தார்.

ஈரான்:பாராளுமன்ற தேர்தல் துவங்கியது!

Campaigning began in Iran on Thursday for parliamentary elections
டெஹ்ரான்:அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஈரான் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன. அதிபர் அஹ்மத் நஜாதின் மக்கள் ஆதரவு மதிப்பீடு செய்யப்படும் என கருதப்படும் இந்த தேர்தலில் 3400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் வலுவான நிலைப்பாட்டை மேற்கொண்ட அஹ்மத் நஜாதிற்கு ஆதரவு கூடும் என்று கருதப்படுகிறது.

யூத தம்பதியர் இந்தியாவை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவு!

CAW2XHWV
கொச்சி:விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கிய யூத புரோகிதர் என கருதப்படும் ஷெனோர் ஸல்மான் மற்றும் அவரது மனைவி யோஃபா ஷெனோய் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்றும், உளவுத்துறை அதிகாரிகள் இவர்களுக்கு எதிராக அறிக்கையை அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.

யூத தம்பதியர் விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று மாவட்ட ஆட்சியர் பி.எ.ஷேக் பரீத் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி எஸ்.ஸிரி ஜகன் உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அனுமதியளித்தார்.

கர்நாடகா:முதல்வர் பதவி கிடையாது – எடியூரப்பாவின் ஆசையில் மண்!

yediruppa
பெங்களூர்:முதல்வர் பதவிக்காக பகீரத முயற்சியில் ஈடுபட்ட எடியூரப்பாவின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இம்மாதம் 27-ஆம் தேதிக்குள் மீண்டும் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று எடியூரப்பா இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், பலன் இல்லை. கட்சியின் மத்திய தலைமை எடியூரப்பாவுக்கு பெப்பே காட்டிவிட்டது. அவரது கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க மேலிடம், முதல்வர் டி.வி.சதானந்தாகவுடாவை தற்போது மாற்ற தேவையில்லை என்றும், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எடியூரப்பா, தான் குற்றவாளியில்லை என்பதை நிரூபிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சிரியா எதிர்ப்பாளர்களுக்கு ஹமாஸ் ஆதரவு!

Hamas’s prime minister in Gaza, Ismail Haniya
கெய்ரோ:சிரியாவில் ஏகாதிபத்தியவாதி பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த நிலையில் ஃபலஸ்தீன் போராட்ட இயக்கமும், சிரியா மற்றும் ஈரானின் நீண்டகால நண்பரான ஹமாஸ் தனது மெளனத்தை கலைத்துள்ளது.

கெய்ரோவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் ஆற்றிய உரையில் ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா சிரியா எதிர்ப்பாளர்களுக்கு தனது ஆதரவை வெளியிட்டார்.

சென்னை என்கவுன்டர் குறித்த தமிழக போலீசாரின் கூற்றில் முரண்பாடு – விசாரணைக்கு நிதீஷ் குமார் உத்தரவு

imagesCAT5RXRL
பாட்னா:சென்னை வேளச்சேரியில் கடந்த வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் குறித்த தமிழக போலீசாரின் தகவல்கள் முரணாக இருப்பதால் அதுகுறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

என்கவுன்டரில் கொலைச் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது. மேலும் கொல்லப்பட்ட இளைஞர்கள் பணத்தை பீகாரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், பீகாருக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எகிப்து:அதிபர் தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்: கவலைக்கிடம்!

Abdel Moneim Abol Fotoh
கெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.

போலி என்கவுண்டர்:மோடி அரசின் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Encounter deaths Supreme Court pulls up Gujarat Govt
புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்த மோடி அரசின் நடவடிக்கையை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றத்திடம் கலந்தாலோசிக்காமல் இத்தகையதொரு தீர்மானம் எடுத்த மோடி அரசு மீது கடுமையான அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க-முஸ்லிம் லீக் கூட்டணி!

imagesCALXG0EU
நாக்பூர்:ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.கவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் கூட்டணி வைத்துள்ளன. நாக்பூர் மாநகராட்சியில் இந்த விசித்திரமான முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கையாக முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா அரசியல் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.

சென்னை என்கவுண்டர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

An image from the scene of the encounter
சென்னை:நேற்று முன்தினம் சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக 5 பேரை தமிழ்நாடு போலீஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி, சென்னை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கமிஷன்(என்.சி.ஹெச்.ஆர்.சி) நேற்று(வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.

வாராணசியில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர் லெனின் ரகுவன்ஷி மனித உரிமை கமிஷனுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மனித உரிமை கமிஷன் மேற்கொண்டுள்ளது.

விண்வெளித்துறை விஞ்ஞானி ரோடம் நரசிம்மா ராஜினாமா!

ISRO scientist Roddam Narasimha
புது டெல்லி:இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானி ரோடம் நரசிம்மா, விண்வெளி ஆராய்ச்சிக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

யாஸீன் மாலிக் மீது பொடா சட்டம் பாய்ந்தது!

yasin malik
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீரில் தீவிரவாத செயல்பாடுகளை வலுப்படுத்த பணம் சேகரித்தார் என்ற குற்றம் சாட்டி ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின்(ஜெ.கெ.எல்.எஃப்) தலைவர் முஹம்மது யாஸீன் மாலிக் மீது நீதிமன்றம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்(பொடா) அடிப்படையில் குற்றம் சும்த்தியுள்ளது.

தீவிரவாத பணிகளுக்காக மாலிக் ஒரு லட்சம் அமெரிக்க டாலரை சேகரித்தார் என்பது குற்றச்சாட்டு. வழக்கில் முன்பு கைதான இதர இரண்டு நபர்களின் வாக்குமூலங்கள், சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாலிக் மீது பொடா சுமத்தப்பட்டுள்ளது.

Friday, February 24, 2012

சிரியா:நிராயுதபாணிகளை கொலைச்செய்ய உத்தரவு – ஐ.நா குற்றச்சாட்டு

டமாஸ்கஸ்:சிரியாவில் நிராயுதபாணிகளான பெண்களையும், குழந்தைகளையும் தாக்குவதற்கு அந்நாட்டின் ராணுவ-போலீஸ் துறைகளின் மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவீச்சை நடத்தவும், காயமடைந்து சிகிட்சை பெறும் எதிர்ப்பாளர்களை தாக்கவும் போலீஸ்-ராணுவ மேலிடம் உத்தரவிட்டுள்ளது என்று ஐ.நா வின் சுதந்திர விசாரணை கமிஷன் அறிவித்துள்ளது. கொடூரமான தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை ரகசியமாக கண்டறிந்துள்ளதாகவும், இவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம் என்றும் ஐ.நா குழு கூறியுள்ளது.

ராம்லீலா:ராம்தேவுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம்!

Baba Ramdev and his followers from the Ramlila Maidan
டெல்லி:ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவின் ஊழக்கு எதிரான உண்ணாவிரத நாடகத்தின் போது நள்ளிரவில் போலீஸார் தடியடி நடத்தி கலைத்த  சம்பவத்தில் உச்சநீதிமன்றம், ராம் தேவிற்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவ் குழுவினர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4 ம் தேதி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்ட நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.

குஜராத்திற்கு கலவரம் புதிதல்ல: முஸ்லிம் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் மோடி!

modi
அஹ்மதாபாத்:குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல. நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சிறப்பு விசாரணக் குழுவிடம் கூறியுள்ளதாக எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து சில ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.

Wednesday, February 22, 2012

ஜே டே கொலை வழக்கு – துணை குற்றப்பத்திரிகையில் ஜிகினா வோரா பெயர்!

J Dey,Journalist Jigna Vora
மும்பை:ஆங்கில நாளிதழான ‘மிட் டே’ வின் க்ரைம் ரிப்போர்ட்டர் ஜோதிர்மய் டேவின் கொலை வழக்கு தொடர்பான துணை குற்றப்பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர் ஜிகினா வோராவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி மும்பை போவை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜே டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜே டேவை சோட்டா ராஜன் கும்பல் கொலைச் செய்ததாக மும்பை போலீஸ் கூறியது.

யெமனில் வாக்குப்பதிவு

Nobel peace laureate tawakul karman
ஸன்ஆ:யெமன் நாட்டில் புதிய அதிபராக தற்போதைய துணை அதிபர் அப்துற்றப் மன்சூர் ஹாதியை ஒருமனதாக தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

33 ஆண்டுகள் யெமனை ஆட்சிபுரிந்த ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகியபிறகு நடைபெறும் தேர்தலில் ஹாதியை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. ஆயினும் அதிகார ஒப்படைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்த அவருக்கு பெரும் மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஸன்ஆவிலும், இதர நகரங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் தேர்தலை ஆதரிக்கின்றன.

சம்ஜோதா:டெட்டனேட்டர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது – சாட்சி வாக்குமூலம்

Samjhauta,
புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் டெட்டனேட்டர் ஜார்கண்ட் மாநிலம் மிஹிஜாமில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தான் கண்டதாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தும்காவைச் சார்ந்த ரோஹித் ஜா என்பவர் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) யிடம் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திர குப்தாவும், ராம்ஜி கல்சங்க்ராவும் இணைந்து ராஞ்சியில் இருந்து டெட்டனேட்டரை வாங்கியதாக கூறியுள்ளார். ஜாவின் வாக்குமூலத்தை என்.ஐ.ஏ பதிவுச்செய்துள்ளது.

பாட்லா ஹவுஸ்:வகுப்புவாத தேடுதல் வேட்டையை எதிர்த்து போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணி!

புதுடெல்லி:டெல்லி போலீஸார் பாட்லா ஹவுஸில் வகுப்புவாத வெறியுடன் நடத்திவரும் தேடுதல் வேட்டையை நிறுத்த கோரி அகாடமிக் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணி நடத்தினர்.

பாட்லா ஹவுஸில் அண்மையில் நடந்த போலீஸாரின் நள்ளிரவு தேடுதல் நாடகம் நடந்த சூழலில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் இந்த கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

சஞ்சீவ் பட் மனு தள்ளுபடி

sanjeev
ஜாம்நகர்:போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக கூறப்படும் குற்றவாளி ஒருவரின் மரணம் தொடர்பான வழக்கில் குஜராத் மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனுவை மாவட்ட நீதிமன்றம் ஒன்று தள்ளுபடிச் செய்துள்ளது.

கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர்போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி உத்தரவிட்டார் என்று பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே பட் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.

காங்கிரஸ்-தேர்தல் கமிஷன் மோதல் தீவிரம்! அதிகாரத்தை பறிக்கும் நோக்கம் இல்லை – மத்திய அரசு!

புதுடெல்லி:காங்கிரஸ் கட்சிக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனிடம் இருந்து பறிக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை பறிப்பதற்கான முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவரது பேச்சுக்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்தது.

உ.பி:பா.ஜ.கவில் தலைவர்களுக்கு பஞ்சம் – திக்விஜய் சிங்

digvijay

கான்பூர்:உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில தேர்தல் களத்தில் மத்தியபிரதேசத்தைச் சார்ந்த உமா பாரதியை முதல்வர் பதவி வேட்பாளராக பா.ஜ.க களமிறக்கியிருப்பதை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, February 21, 2012

அத்னானின் உறுதிக்கு முன்னால் இஸ்ரேல் மண்டியிட்டது

Khader Adnan’s
டெல்அவீவ்:அரசு நிர்வாக சிறை (administrative detention) என்ற கருப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை இல்லாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி குற்றம் சுமத்தாமல் அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சகம் உறுதியளித்தது. இதனை அத்னானின் வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி: அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அடி – பேண்ஸ்

Nicholas Burns, Former Under Secretary of State for Political Affairs
வாஷிங்டன்:ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் இந்தியாவின் முடிவு அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அடி என்று முன்னாள் அமெரிக்க அரசியல் விவகார ஸ்டேட் அண்டர் செகரட்டரி நிக்கோலஸ் பேண்ஸ் கூறியுள்ளார்.

ஈரானை சர்வதேச தளத்தில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சி நடைபெறும் வேளையில் இந்தியாவின் தீர்மானம் நிராசையை ஏற்படுத்திவிட்டது என்று பேண்ஸ் ‘த டிப்ளமேட்’ என்ற மேக்சினில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுப் பாடம் (Home Work) செய்யவில்லை: பல மணிநேரம் இருட்டறையில் அடைக்கப்பட்ட சிறுவன் மரணம்!

traumatised_hryna_pnkj_271x181
சட்டீஷ்கர்:வீட்டுப் பாடங்களை செய்யவில்லை என்பதால் இருட்டறைக்குள் பல மணிநேரங்கள் அடைக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சிகிட்சை பலனளிக்காமல் இறந்து போனான்.

ராஜ்குல் அரசு பள்ளிக்கூடத்தில் கே.ஜி மாணவனாக பயின்று வந்தான் பங்கஜ். வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதால் ஆசிரியை பல மணிநேரங்கள் இருட்டறையில் தள்ளி பூட்டினார். இதனால் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிட்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான். இச்சம்பவம் நடந்து ஒரு மாத காலம் கழிந்த பிறகும் ஆசிரியை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை
லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர்.

 அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

கேரளா:முஸ்லிம் லீக்-சி.பி.எம் மோதல் – முஸ்லிம் இளைஞர் படுகொலை!

death-shukkoor
தளிப்பரம்பு(கேரளா):கேரள மாநிலம் தளிப்பரம்பில் பட்டுவம் அரியல் என்ற பகுதியில் நேற்று முன் தினம் உருவான சி.பி.எம்-முஸ்லிம் லீக் மோதல் மேலும் பல இடங்களுக்கு பரவியுள்ளது.முஸ்லிம் லீக் முன்னணி அமைப்பான எம்.எஸ்.எஃபின் உள்ளூர் தலைவரான அப்துல் ஷூக்கூர்(வயது 23) என்ற இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், முஸ்லிம் லீக்கிற்கும் இடையே மோதல் நிலவும் பட்டுவம் அரியல் என்ற பகுதிக்கு வருகை தந்த சி.பி.எம் கண்ணூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் மற்றும் டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் நடந்து சற்று இடைவெளியில் அப்பகுதியை சார்ந்த எம்.எஸ்.எஃப் அமைப்பின் உள்ளூர் தலைவர் அப்துல் ஷூக்கூரை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்தது.

தொடர் குண்டுவெடிப்பு:ஹரியானாவில் ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது!

Haryana blasts
பாட்டியாலா:ஹரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.

சாகர் என்ற ஆசாத், ஷாம் நிவாஸ், குர்ணாம்சிங், ப்ரவீண் சர்மா, ராஜேஷ்குமார் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுகள், மதரசாக்கள், இறைச்சி வெட்டுமிடங்கள் ஆகிய இடங்களில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பான வழக்குகளில் போலீஸ் கைது செய்துள்ளது.

மீனவர்கள் படுகொலை:இந்திய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியாது – இத்தாலி



Salvatore Girone (second from the right) and Latorre Massimiliano (pictured back left) in Kollam, Keralaரோம்/கேரளா:இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலிய கப்பல் காவலர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் “குறிப்பிடத்தக்க சட்ட ரீதியான வேறுபாடுகள்” இருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் கிலியோ டெர்ஸி கூறியுள்ளார்.

இத்தாலி கப்பலைச் சேர்ந்த இரு காவலர்களுக்கும் இந்தியச் சட்டத்திலிருந்து ‘பாதுகாப்பு’ உள்ளது. இப்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு எதுவும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே இல்லை’ என்று அவர் தெரிவித்தார்.

சங்கரன் கோவில்:தி.மு.க – அ.இ.அ.தி.மு.க நேரடி மோதல்

15-sankarankovil-map
சென்னை:சங்கரன்கோவில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் தி.மு.க-அ.இ.அ.தி.மு.க இடையேதான் நேரடி மோதல் நடைபெறும் என கருதப்படுகிறது.

சங்கரன்கோவில்(தனி) சட்டப்பேரவை இடைத்தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்குகிறது.

Monday, February 20, 2012

காதலர் தினம் – பண்பாட்டுச் சீரழிவும், எதிர்ப்பின் மனோ நிலையும்!

காதலர் தினம்
பொதுவாகவே வர்த்தக நோக்கில் வருடந்தோறும் சில தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சில தினங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. வர்த்தக நோக்கில் அனுஷ்டிக்கப்படும் தினங்களை குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவதும், கட்டுரைகளை எழுதுவதும் அந்த தினங்களுக்கு மேலும் செல்வாக்கையே பெற்றுத் தரும் என்பது எனது கருத்து.

காதலர் தின கொண்டாட்டத்தின் பின்னணியும் வர்த்தகமே. என்றாலும் கலாச்சார ரீதியான, பண்பாட்டை சீரழிக்கும் அம்சங்களும் இத்தினத்தையொட்டி நடைபெறுவது குறித்தும், காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாசிச ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் போலி நாடகங்களை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரை காதலர் தின கொண்டாட்டம் முடிந்த பிறகு எழுதப்படுகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் – இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

Britain warns Israel over military action against Iran
லண்டன்:ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது அறிவுப்பூர்வமானது அல்ல என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தலைபட்சமாக அத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகளிடம் கூறியதாக வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.

பிரான்சு, பிரிட்டன் – இனி எண்ணெய் இல்லை – ஈரான்!

Iran says it's cutting oil exports to France, Britain
டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பலத்த பதிலடியை கொடுக்கும் விதமாக பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை முற்றிலும் நிறுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இனி சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வழங்கமாட்டோம் என்றும், இதர பயனீட்டாளர்களை கண்டுபிடிப்போம் என்றும் ஈரானின் எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரஸா நிக்ஸாத் கூறியுள்ளார்.

கையூட்டுச் செய்தி:167 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்!

paid news
புதுடெல்லி:ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் தங்களின் செய்திகளை வெளியிட லஞ்சம் வழங்கிய 167 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகமான வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த பஞ்சாபில் 129 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 38 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணிப்பூரிலும், உத்தரகாண்டிலும் வேட்பாளர்கள் மீது இதுவரை புகார் கிடைக்கவில்லை. உள்ளூர் மொழி பத்திரிகைகள் மீதுதான் பெரும்பாலான புகார்கள் வந்துள்ளன.

கார் குண்டுவெடிப்பு:இந்தியாவின் மவுனம் – முன்னாள் சி.ஐ.ஏ அனலிஸ்ட் கவலை!

கார்குண்டுவெடிப்பு
புதுடெல்லி:இந்திய தலைநகரான டெல்லியில் நிகழ்ந்த இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமெரிக்க ரகசிய உளவு பிரிவு சேகரித்த தகவல்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குண்டுவெடிப்பில் ஈரான் தொடர்பு குறித்து குற்றம் சாட்டும் தகவல்களையும் அமெரிக்க உளவு பிரிவான சி.ஐ.ஏ இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாம். இவ்விபரங்களை இந்திய ரகசிய உளவு நிறுவனங்கள் உறுதிச் செய்துள்ளதாக இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட வட்டாரங்கள தெரிவிக்கின்றன.

மீனவர்கள் படுகொலை: இத்தாலியர்கள் கைது!

rala police arrest Italian naval guards
கொச்சி:2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலிய கப்பல் காவலாளிகள் இருவரை நீண்ட இழுபறியின் முடிவில் போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று மாலை 3.30 மணிக்கு இத்தாலி கப்பல் காவலாளிகளான மாஸிமிலியனோ, சல்வதோர் ஜிரோன் ஆகியோரை கேரளா மத்திய மண்டல ஐ.ஜி பத்மகுமாரின் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இன்று கொல்லம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். முதல் நோக்கு குற்றவாளி இல்லை என்ற போதிலும் கப்பல் கேப்டன் உம்பர்டோ விட்டலியோவை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்: எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் – திக்விஜய்சிங்

பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டர்
போபால்:டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என்ற தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது. சர்ச்சையை கிளப்ப தான் விரும்பவில்லை என்றும், ஆனால், சொந்த கருத்தை வாபஸ்பெறும் நபர் தான் அல்ல என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகம்:1117 குழந்தைகளுக்கு குடியுரிமை!

அபுதாபி:வெளிநாட்டினரை திருமணம் செய்த உள்நாட்டு பெண்களுக்கு பிறந்த 1117 குழந்தைகளுக்கு குடியுரிமையை வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குழந்தைகளுக்கு 18 வயதாகும் வேளையில் பூரண குடியுரிமை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.

நாடகங்களை நம்பாத கலைஞர்!

கலைஞர்
திருச்சி:அரசியல் நாடகங்களை தற்போது நான் நம்புவதில்லை என்று தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகள் திருமணவிழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வருகை தந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பிரச்சாரம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூய்மைப் பணி
நெல்லை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் (Healthy People Healthy Nation) என்ற முழக்கத்தோடு மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வருடம் பிப்ரவரி 10 முதல் 20  ஆம் தேதி வரை இப்பிரச்சாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இதனுடைய துவக்க விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.

Sunday, February 19, 2012

குழந்தைகளின் டாப்லெட் மோகம்!

குழந்தைகளின் டாப்லெட் மோகம்!
விரும்பிய விளையாட்டு சாதனங்களை வாங்கி தர பெற்றோரிடம் அடம்பிடிக்கும் குழந்தைகளின் காலம் மலையேற துவங்கிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் விளையாட்டுப் பொருட்கள் என்பது பழைய நினைவுகளாக மாறிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பெண் குழந்தைகள் என்றால் பொம்மைகள் மீதும், ஆண் குழந்தைகள் பந்துகள் மற்றும் வாகனங்கள் மீதும் தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்துவர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் நமது விருப்பங்களும் மாறுகிறது அல்லவா?

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது – அமெரிக்கா

கச்சா எண்ணெய்

வாஷிங்டன்:ஈரானிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வாங்ககூடாது என்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகியநாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான தடையை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை குறித்து மேற்கண்ட நாடுகளுக்கு புரிய வைத்துள்ளதாக அமெரிக்க அரசு துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரான் விவகாரம் தூதரக ரீதியாக தீர்வு காணமுடியும் என்று நம்புவதாக தெரிவித்த நூலங், இக்காரியத்தை முன்னர் அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் விளக்கியுள்ளார் என்றும், ஈரான் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாரகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காதர் அத்னானுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தி ஃபலஸ்தீனில் பிரம்மாண்ட பேரணி

Hamas Prime Minister Ismail Haniyeh joins thousands of Palestinians in a demo held in Gaza in solidarity with a Palestinian hunger striker on February 17, 2012
ராமல்லா:இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஃபலஸ்தீன் விடுதலைப் போராளி காதர் அத்னானுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தி ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் மேற்கு கரையிலும், ராமல்லாவிலும் பேரணிகள் நடத்தினர்.

விசாரணை இல்லாமல் இஸ்ரேலின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 33 வயதான காதர் அத்னான் 63 தினங்களாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேட்டோவின் ரகசியங்களை இஸ்ரேலுக்கு அளிக்க அனுமதிக்கமாட்டோம் – துருக்கி

NATO Secretary-General Anders Fogh Rasmussen (L) and Turkish Foreign Minister Ahmet Davutoglu at a news conference in Ankara, Turkey

அங்காரா:கிழக்கு துருக்கியில் குறிப்பிட்ட நேட்டோ ரேடார் வழியாக கிடைக்கும் ரகசியங்களை இஸ்ரேலிடம் அளிக்க அனுமதிக்கமாட்டோம் என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மது தாவூத் ஒக்லு கூறியுள்ளார்.

நேட்டோவின் வசதிகளை மூன்றாவது ஒரு நாடு, அதுவும் இஸ்ரேல் உபயோகிக்க அனுமதிக்கமாட்டோம் என்று நேட்டோவின் தலைவர் ஆண்டேர்ஸ் ஃபோக் ரஸ்மூஸனுடன் இணைந்து அங்காராவில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாவூத் ஒக்லு தெரிவித்தார்.

சம்ஜோதா:68 பேரை பலிவாங்கியதில் எனக்கு குற்ற உணர்வு இல்லை – ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி வாக்குமூலம்

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான்
புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நான்கு பேர் சேர்ந்து வெடிக்குண்டை வைத்ததாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டு சம்ஜோதா ரெயில் வைக்கப்பட்டது. 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்று சவுகான் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

மீண்டும் ஒரு போலி என்கவுண்டர் நாடகம்: போலீஸின் சதித்திட்டத்தை முறியடித்த பாட்லா ஹவுஸ் மக்கள்

போலீஸின் சதித்திட்டத்தை முறியடித்த பாட்லா ஹவுஸ் மக்கள்
புதுடெல்லி:போலி என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டு பீதி மாறாத பாட்லா ஹவுஸில் நிரபராதிகளான அப்பாவி இளைஞர்களை நள்ளிரவு ஆபரேசன் மூலம் கடத்த முயன்ற டெல்லி போலீசாரின் சதித்திட்டத்தை பொதுமக்கள் முறியடித்து ஜாமிஆ நகர் காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்து 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மாறிய இச்சம்பவத்தில் இருந்து தலை தப்புவதற்காக டெல்லி போலீஸ் தலைமை எட்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: மாநிலங்களின் கவலையை போக்குவோம் – காங்கிரஸ்

புதுடெல்லி:தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்.சி.டி.சி) குறித்து பல்வேறு மாநிலங்கள் கவலையை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையில் அவர்களின் சந்தேகங்களை போக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தேசிய தீவிரவாத தடுப்பு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி காரைக்காலில் நேற்று(சனிக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஸ்டாலின் @ 60 – கொண்டாட்டங்கள் இல்லை!

stalin
சென்னை:திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரும், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினுக்கு 60 வயது மார்ச் 1-ஆம் தேதி நிறைவுறுகிறது. இவ்வேளையில் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கட்சித் தொண்டர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Friday, February 10, 2012

குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி

gujarat-vapiஅஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மோடி அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.

மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது மனித உரிமை மீறல் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது குறித்து மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என ஆக்டிங் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியது.

ஜெ. உறவுக்காக சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விலக சிறப்பு வழக்கறிஞருக்கு பாஜக அரசு நெருக்கடி

B.V.Acharya
பெங்களூர்:தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் B.V.ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக ஒருவரே சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகிக்கக் கூடாது என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த இரு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே நீடிக்க முடியும் என கர்நாடக அரசு கூறியதையடுத்து தாம் இந்த முடிவை எடுத்ததாக B.V.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகள் கோரிக்கை

karnataka opposition protest
பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டப் பேரவையை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகளான காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜை சந்தித்து இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியல் சாசன சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவிய சூழலில் 356-வது பிரிவின் படி பா.ஜ.க அரசை கலைக்கவேண்டும். அத்துடன் சட்டப் பேரவையையும் கலைக்கவேண்டும் என அவர் கூறினார்.

பள்ளிக்கூடத்தில் மாணவன் வெறி: ஆசிரியை படுகொலை

CAFKEQUV

சென்னை:சென்னை பாரிமுனை பள்ளிக்கூட ஆசிரியை ஒருவரை மாணவன் பள்ளிக்கூடத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில் சென்னை ஏழுகிணறு பகுதியை சார்ந்த மாணவன் ஒருவன் 9-வது வகுப்பு பயின்று வருகிறான்.

இந்தியா – ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கு அழுத்தம்

india europe union
பிரஸ்ஸல்ஸ்:புதுடெல்லியில் நடக்கப் போகும் ஐரோப்பிய யூனியன் – இந்தியாவிற்கு இடையிலான strategic (மூலோபாய) கூட்டுறவிற்கான உச்சி மாநாடு நடக்கும் பொழுது ஐரோப்பிய கவுன்சில் மற்றும் கமிஷன்களின் தலைவர்கள் இந்தியாவுடனான பேச்சு வார்த்தைகளில் மனித உரிமைகள் பற்றிய பேச்சிற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) கூறியுள்ளது.

பிப்ரவரி 3ஆம் தேதியிட்ட கடிதத்தில் மனித உரிமை தொடர்பான பரிந்துரைகளை ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பிக்கும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவல் பர்ரோசோ விற்கும் மனித உரிமை கண்காணிப்பகம் அனுப்பியுள்ளது.

Thursday, February 9, 2012

சார்லஸ் டிக்கன்ஸ்

FILE PHOTO - Charles Dickens Museum Re-Opens: A Look Back At Charles Dickens
சார்லஸ் டிக்கன்ஸின் 200-வது நினைவு தினம் உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1812-ஆம் ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதி பிறந்த டிக்கன்ஸ் 1870-ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

டிக்கன்ஸின் வாழ்வும், எழுத்தும் ஆச்சரியமானது. அசாதரணமான எழுத்தாளர் என அவரை அழைக்கலாம். தான் வாழ்ந்த காலத்தின் ஆன்மாவுடன் டிக்கன்ஸ் சஞ்சரித்தார். அக்கால சூழலின் தலையும், வாலும், உள்ளும், புறமும் எல்லாம் டிக்கன்ஸிற்கு தெரியும். உலகம் முழுவதும் என்றும் நினைவுக்கூற தக்கவகையில் டிக்கன்ஸ் அக்காலக்கட்டத்தில் தனது வாசகர்களுக்காக எழுதினார்.

Dua For Gaza