ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீரில் தீவிரவாத செயல்பாடுகளை வலுப்படுத்த பணம் சேகரித்தார் என்ற குற்றம் சாட்டி ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின்(ஜெ.கெ.எல்.எஃப்) தலைவர் முஹம்மது யாஸீன் மாலிக் மீது நீதிமன்றம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்(பொடா) அடிப்படையில் குற்றம் சும்த்தியுள்ளது.
தீவிரவாத பணிகளுக்காக மாலிக் ஒரு லட்சம் அமெரிக்க டாலரை சேகரித்தார் என்பது குற்றச்சாட்டு. வழக்கில் முன்பு கைதான இதர இரண்டு நபர்களின் வாக்குமூலங்கள், சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாலிக் மீது பொடா சுமத்தப்பட்டுள்ளது.
பொடா 2003 ஆம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், இச்சம்பவம் அதற்கு நடந்தது என்பதால் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில் விசாரணை தேவை என்று மாநில அரசின் வழக்குரைஞர் வாதிட்டார். 2002-ஆம் ஆண்டு ஜே.கே.எல்.எஃப் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில், முன்னர் தயார் செய்த திட்டத்தின் அடிப்படையில் காட்மாண்டுவில் இருந்து பணத்தை சேகரிக்க முஷ்தாக் அஹ்மத் தர், ஷமீமா ஆகியோரிடம் மாலிக் பொறுப்பை ஒப்படைத்தார் என்பது வழக்காகும். ஆனால், இவ்வழக்கு அடிப்படையற்றது என்று ஜே.கெ.எல்.எஃப் செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment