Sunday, July 31, 2011

ஃபத்வா உத்தரவு அல்ல – வழிகாட்டுதல் மட்டுமே: தேவ்பந்த்

முஸாஃபர்நகர்:தாங்கள் வெளியிடும் ஃபத்வாக்கள் (மார்க்க தீர்ப்புகள்) வலுக்கட்டாயமாக திணிக்கும் நோக்கில் வெளியிடப்படுதில்லை எனவும், அவை வழிகாட்டுதல் மட்டுமே எனவும் தாருல் உலூம் தேவ்பந்தின் ஃபத்வா பிரிவு தலைவர் முஃப்தி ஹபீபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) என்பது கட்டளையல்ல. எந்தவொரு நபரும் அதனை ஏற்றுக்கொள்ளவும், நிராகரிக்கவும் சுதந்திரம் உண்டு. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்தது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து தேவ்பந்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முஹம்மது வஸ்தான்வியை பதவியிலிருந்து நீக்கியது ஜனநாயகரீதியிலான வாக்கெடுப்பு மூலமாகும்.

தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மக்கள் வெள்ளம்

 
110218_tahrir_rally2_photoblog600கெய்ரோ:எகிப்தின் மக்கள் எழுச்சியின் மையமாக திகழும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் விசாரணையை துரிதப்படுத்துதல், மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், சிவிலியன்கள் மீதான விசாரணையை நிறுத்துதல், நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்தை உறுதிச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று திரண்டனர்.

துருக்கி:ராணுவ தளபதியாகும் நஜ்தத் ஒஸல்

அங்காரா:துருக்கியின் ராணுவ தலைமை தளபதியான இஸ்ஹாக் கொஸானர் ராஜினாமா செய்த சூழலில் ஜெனரல் நஜ்தத் ஒஸல் புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

அதிபர் அப்துல்லாஹ் குல் நஜ்தத்தை தளபதியாக நியமிப்பதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளார். இதுத் தொடர்பாக காரியங்களை விவாதிப்பதற்கு அப்துல்லாஹ் குல்லும் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும் சந்திப்பை நடத்தினர்.

லிபியா:எதிர்ப்பாளர்கள் ராணுவ தளபதியின் கொலையின் பின்னணியில் எதிர்ப்புக் குழு

 
Abdul-Fatah-Younis-007திரிபோலி:லிபியாவில் முஅம்மர் கத்தாஃபியின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் ராணுவ தளபதி அப்துல் ஃபதா யூனுஸின் கொலையின் பின்னணியில் எதிர்ப்புக்குழு செயல்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்ப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இஸ்லாமிய போராளி பிரிவான உபைத் இப்னு ஜராஹ் ப்ரிகேடர் என பெங்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிர்ப்பாளர்கள் குழுவின் எண்ணைய்த்துறை அமைச்சர் அலி துர்ஹூனி தெரிவித்துள்ளார்.

நார்வே:ப்ரெவிக்கின் சியோனிஷ தொடர்பை மறைக்க மேற்கத்திய ஊடகங்கள் முயற்சி

 
indexலண்டன்:நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் 92 நபர்களை கூட்டுப்படுகொலை செய்த ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கின் சியோனிஷ தொடர்பு வெளிவராமல் இருக்க ப்ரெவிக்கை வலதுசாரி பழமைவாதி என மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலுடன் தொடர்புடைய கிறிஸ்தவ சியோனிஷ பயங்கரவாதிதான் ப்ரெவிக் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை எனவும், அவர் பல முறை இஸ்ரேலுக்கு சென்றுள்ளார் எனவும் பிரபல ஆய்வாளர் பீட்டர் ஐர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகத்தான் மேற்கத்திய ஊடகங்கள் ப்ரெவிக்கை வலதுசாரி பழமைவாதி என சித்தரித்தன.

பீகார்:நான்காயிரத்திற்கு அதிகமான எஸ்.சி-எஸ்.டி வழக்குகள் தேக்கம்

பாட்னா:பீகார் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான 4311 வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

வழக்குகள் கவனத்தில் கொள்ளப்படாமல் ஆமை வேகத்தில் நகர்த்துவதுதான் இவ்வளவு வழக்குகள் தேங்கிக்கிடக்க காரணம் என அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் பதிலாகும்.

1989-ஆம் ஆண்டிலிருந்து துவங்கும் இவ்வழக்குகள் போலீஸ் ஸ்டேசனில் கோப்புகளில் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினர், பழங்குடியினர் கமிஷன் தலைவர் புத்தசிங் பீகார் மாநிலத்திற்கு வருகைத்தந்தார். வழக்குகள் குவிந்துக்கிடப்பதை மிகவும் முக்கியத்துவத்துடன் பரிசீலிப்பதாக அவர் அப்பொழுது தெரிவித்தார்.

கண்டமால் கலவரம்:39 பேரை நீதிமன்றம் விடுவித்தது

 
kandamalஃபுல்பானி(ஒரிஸ்ஸா):2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த கண்டமால் கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 39 பேரை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனக்கூறி விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி கூடுதல் செசன்ஸ் நீதிபதி எஸ்.கெ.தாஷ் விடுவிக்க உத்தரவிட்டார்.

சுப்ரமணீய சுவாமியின் சர்ச்சைக்குரிய கட்டுரை: இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை – சிறுபான்மை கமிஷன்

 
headerபுதுடெல்லி:முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்ளிட்ட மிக கடுமையான வகுப்புவாத வெறித்தனத்துடன் அரசியல் கோமாளியும், தற்போதைய வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலின் பிரச்சாரகருமான சுப்ரமணிய சுவாமி எழுதிய கட்டுரை தொடர்பாக வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி பரிசோதனை நடத்தப்படும் என தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 19-ஆம் தேதி கூடிய கமிஷனின் கூட்டத்தில் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரைக் குறித்து ஆய்வுச் செய்யப்பட்டது. இதுக் குறித்து வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறியதாவது:

ஜெ.வின் அரசியல் விளையாட்டு துவக்கம்: தி.மு.க தலைவர்கள் கைது

 
2005060705390101சேலம்:தமிழகத்தில் வீசிய முந்தைய தி.மு.க அரசு மீதான கடுமையான அதிருப்தி அலையில் ஆட்சியை பிடித்தது செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு. இதனைத் தொடர்ந்து முந்தைய தி.மு.க அரசின் பல்வேறு திட்டங்களையும் முடக்கிய ஜெ.அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பெற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவைத்து  கடந்த 2 மாத காலமாக மாணவர்களின் படிப்பை வீணாக்கிவருகிறார். மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்து அவர்களது நல்வாழ்வுக்குரிய பணிகளை ஆற்றாமல் இலவசங்களை குறித்த அறிவுப்புகளை தொடர்ந்து அரசிய எதிரியான தி.மு.க தலைவர்களை கைதுச் செய்யும் படலத்தை துவக்கியுள்ளார்.

கடந்தமுறை முதல்வர் பதவியில் இருக்கும் வேளையில் முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியை நள்ளிரவில் கைதுச்செய்து நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போதும் தனது அரசியல் சித்து விளையாட்டை துவக்கியுள்ளார் ஜெயலலிதா. இதற்காக சிறப்பு போலீஸ் பிரிவுகளை உருவாக்கியுள்ளார் அவர்.

Saturday, July 30, 2011

‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

 
jayalalithaசென்னை:மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசின் இந்த சட்ட மசோதா மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஜனநாயக விரோதமான இந்த சட்ட மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா:பெல்லாரி சுரங்கங்களை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவு

 
BELLARY_MINING_737342eபுதுடெல்லி:கர்நாடக மாநிலத்தின் பெல்லாரியிலுள்ள இரும்புச் சுரங்கங்கள் அனைத்தையும் தற்காலிகமாக மூடுவதற்கு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பெல்லாரியில் 10,868 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இரும்புச் சுரங்கங்களுக்கு தடை விதித்தது.

பெல்லாரியிலுள்ள சுரங்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு, சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.கபாடியா உத்தரவிட்டார்.

ஃபேஷன் விஷயங்கள் குறித்து முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்ட இந்திய ஊடகங்கள் மீது பாக். அமைச்சர் ஹினா கோபம்!

லாகூர்:தனது தோற்றத்தின் மீது அதிக அளவில் கவனம் செலுத்திய இந்திய ஊடகங்கள் மீது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 இந்தியப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சரான ஹினா ரப்பானி, டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.

Friday, July 29, 2011

பாஜக மேலிட உத்தரவு பதவி விலகுகிறார் எடியூரப்பா

 
yediurappa 1பெங்களூர்:பல ஆயிரம் கோடி சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார். அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது.

நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார். அவருடன், அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட சிலர் மட்டுமே வந்தனர்.

Thursday, July 28, 2011

எடியூரப்பாவுக்கு எதிராக லோகாயுக்தா அறிக்கை

yediyurappaபெங்களூர்:சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கில் சிக்கிய கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கு எதிராக லோகாயுக்தா முதன்மை செயலாளர் எஸ்.வி.ரங்கநாத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது. 6000 பக்கங்களைக் கொண்ட லோகா யுக்தா அறிக்கையில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் எடியூரப்பாவின் பங்கு தெளிவாக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக லோகாயுக்தாவின் அறிக்கையை 2006-ஆம் ஆண்டே சமர்ப்பிக்க வேண்டுமென அரசு கோரிக்கை விடுத்திருந்தது என நீதிபதி சந்தோஷ்ஹெக்டே தெரிவித்துள்ளார். ’பெல்லாரி, சித்ரதுர்கா, தும்கூர் ஆகிய இடங்களில் சட்டவிரோத சுரங்கத்தொழில் நடத்துவதாக அறிக்கை கிடைத்துள்ளது. நாங்கள் இவ்விடங்களிலிருந்து பெருமளவில் இரும்புத்தாதை கைப்பற்றியிருந்தோம். ஆனால் பின்னர் இது எங்கள் வசம் இருந்து பறிபோய்விட்டது’ நீதிபதி ஹெக்டே கூறுகிறார்.

கஷ்மீர்:பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்த இந்தியா-பாக். ஒப்புதல்

pak4-270711புதுடெல்லி:தீவிரவாதத்தை இணைந்து எதிர்கொள்ளவும், கஷ்மீர் விவகாரத்தில் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா-பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இத்தீர்மானங்களை வெளியிட்டனர்.

ஸல்வாஜுதூம்:உச்சநீதிமன்ற உத்தரவு மாவோயிஸ்ட் வேட்டையை பாதிக்கும் – சிதம்பரத்தின் ஆதங்கம்

CHIDAMBARAM_ADDRESSI_10804fபுதுடெல்லி:ஸல்வாஜுதூம் படையை கலைத்துவிடவேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:

இப்பிரச்சனையில் புதிய சட்டத்தை அமுலாக்க சட்டீஷ்கர் அரசு முயற்சி எடுத்துவரும் சூழலில் ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு அழைப்புவிட மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.

பட்டினியால் சோமாலியாவில் 13 பேர் மரணம்

ss-110714-east-africa-01_grid-5x2மொகாதிஷு:சோமாலியாவில் நிலவும் கொடும் பட்டினியை குறித்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் வேளையில் 13 குழந்தைகள் பட்டினியால் மரணித்துள்ளனர்.

சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியும், பட்டினியும் நிலவுவது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும், ரெட்க்ராஸ் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்களுடன் சென்றனர்.

ஃபலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவியை அமெரிக்கா எதிர்க்கும்

7013054fc26100d73654dcf90879-grandeவாஷிங்டன்:பூரண ஐ.நா உறுப்பினர் பதவிக்கான ஃபலஸ்தீனின் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கும்.ஃபலஸ்தீனின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்பதால் இதனை எதிர்க்கப் போவதாக ஐ.நாவில் அமெரிக்க துணை தூதர் ரோஸ்மேரி டிகார்லொ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஐ.நா பொது அவைக்கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்காவால் ஆதரிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் ஃபலஸ்தீனின் தேவைக்கு ஒருபோதும் உதவிகரமாக இருக்காது.

தாலிபான் தாக்குதலில் காந்தஹார் மேயர் பலி

li-afghan-mayor-cp-01045507காந்தஹார்:ஆப்கானிஸ்தானில் மீண்டும் நடந்த தாலிபான் தாக்குதலில் மேயர் கொல்லப்பட்டார். தெற்கு ஆப்கானில் மிகவும் பிரபலமான நகரமான காந்தஹாரின் மேயரான குலாம் ஹைதர் ஹமீதி மரணித்துள்ளார்.

வீட்டில் உள்ளூர்வாசிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் தலைப்பாகையில் வெடிக்குண்டை ஒளித்து வைத்திருந்த நபர் பெரும் சப்தத்துடன் வெடித்து சிதறியதாக போலீஸ் தலைவர் அப்துற்றாஷிக் கூறுகிறார்.

Wednesday, July 27, 2011

ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா தலைமறைவு?

டேராடூன்:ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குருவும், ஹைடெக் உண்ணாவிரத பேர்வழியுமான பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் கல்வி சான்றிதழ்கள் போலி என சி.பி.ஐ கண்டறிந்ததை தொடர்ந்து அவர் மாயமானார்.
பாலகிருஷ்ணாவின் பாதுகாப்பு அதிகாரி ஜெயேந்திரசிங் அஸ்வால் காங்கல் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

நேற்று முன் தினம் பாலகிருஷ்ணாவுடன் பதஞ்சலி யோகா பீடத்திற்கு செல்வதற்காக அவருடைய திவ்யயோக் ஆசிரமத்திற்கு சென்ற அஸ்வாலிடம் தான் தனியாக வருவதாக கூறி அனுப்பியுள்ளார் பாலகிருஷ்ணா. ஆனால், மாலைவரை பாலகிருஷ்ணாவை காத்திருந்த அஸ்வால் மீண்டு அவரை காண்பதற்காக திவ்யயோக் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பாலகிருஷ்ணாவை காணவில்லை என அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

ப்ரெவிக்குடன் தொடர்பு:பிரிட்டீஷ் அமைப்பு ஒப்புதல்

 
Norway-Anders-Breivik-007லண்டன்:நார்வே கொலையாளி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்குடன் தொடர்பிருப்பதாக பிரிட்டனில் தீவிர வலதுசாரி அமைப்பான இங்கிலீஸ் டிஃபன்ஸ் லீக்(இ.டி.எல்) ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு வந்த ப்ரெவிக் நெதர்லாந்தை சார்ந்த வலதுசாரி அரசியல்வாதியான கீர்த் வில்டேர்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளான். அமைப்பு தலைவர்களுடன் ப்ரெவிக் பேச்சுவார்த்தை நடத்தியதாக இ.டி.எல் தலைவர் டாரில் ஹோப்ஸன் தெரிவித்துள்ளார். அமைப்பின் உறுப்பினர்களுடன் ப்ரெவிக் ஃபேஸ் புக் மூலமாக தொடர்பு கொண்டார் என அவ்வமைப்பின் இன்னொரு தலைவர் கூறியதாக டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.

சொஹ்ரபுத்தீன் ஷேக் வழக்கு:சி.பி.ஐ வழக்கறிஞர் விலகல்

புதுடெல்லி:சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் கெ.டி.எஸ்.துளசி வழக்கை வாதாடுவதிலிருந்து விலகியுள்ளார்.

சி.பி.ஐக்காக வாதாடுவதில் இருந்து சுயமாக விலக உச்சநீதிமன்றம் கோரியதைத் தொடர்ந்து துளசி விலகியுள்ளார்.

ப்ரெவிக்கின் யூனிஃபார்ம் பாட்ஜ் வாரணாசியில் டிசைன் செய்யப்பட்டுள்ளது

 
dce987a92e1ae925e1e4ee2104cf25a2_fullஓஸ்லோ:நார்வே கூட்டுப் படுகொலையை நடத்திய வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது இயக்கத்தின் யூனிஃபார்மில் அணியக்கூடிய பாட்ஜின் வடிவமைப்பை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து பெற்றுள்ளான்.

கடந்த ஆண்டு நார்வேயை சார்ந்த ஒருவருக்கு சாம்பிள்கள் அனுப்பிக் கொடுத்ததாக இந்தியன் ஆர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்லம் அன்ஸாரி கூறியுள்ளார். இஸ்லாம், கம்யூனிசம், நாசிஸம் ஆகியவற்றை குறிப்பிட பிறை நட்சத்திரம், சுத்தியல் அரிவாள், ஸ்வஸ்திக் ஆகிய சின்னங்களை நெற்றியில் அடையாளப்படுத்திய ஒரு மண்டை ஓட்டில் பொருத்திய சிலுவையில் கடாரி கத்தி குத்தியிருக்கும் வகையில் பாட்ஜ் அமைந்துள்ளது.

ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம்

8ef29476d6711aa5db7f247fb0f8eea3_fullபுதுடெல்லி:நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில்(manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080:ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

லிபியா:உணவுக்கிடங்கில் குண்டுவீசிய நேட்டோவின் அட்டூழியம்

திரிபோலி:லிபியாவின் கிழக்கு நகரமான ஸ்லிதானில் உணவு கிடங்கிலும், சுகாதார மையத்திலும் நேட்டோ படை குண்டுவீசி தாக்கியுள்ளது. இதில் எட்டுபேர் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராணுவ மையங்களில் தாக்குதல் நடத்தியதாக நேட்டோ கூறுகிறது.

கத்தாஃபி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபோலிக்கும், எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மிஸ்ரத்தாவுக்கும் இடையே உள்ள நகரம்தான் ஸ்லிதான்.

கத்தாஃபி பதவி விலகும் வரை தீவிர தாக்குதல் நடத்தப்படும் என நேட்டோ ராணுவத் தலைவர் கூறியுள்ளார்.

பாரபட்சமான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

IMG_2196புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்புக் குறித்த விசாரணையில் முஸ்லிம் அமைப்புகளை மட்டும் குறிவைக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் உள்பட அனைத்து சாத்தியக் கூறுகளை குறித்தும் விசாரணை நடத்தவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர்கள் கலந்துக்கொண்ட இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.

Tuesday, July 26, 2011

டாக்டர் ஃபஸலுர் ரஹ்மான் ஃபரீதி மரணம்

5973152469_6e5e489055_oபுதுடெல்லி:பொருளாதார துறை அறிஞரும், ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவருமான டாக்டர் ஃபஸலுர்ரஹ்மான் ஃபரீதி மரணமடைந்தார். அவருக்கு வயது 80 ஆகும்.

1932-ஆம் ஆண்டு ஜோன்பூரில் பிறந்த அவர் ராம்பூரில் இஸ்லாமிய கல்வி கலாச்சாலையிலிருந்து அரபி மொழியும், இஸ்லாமிய பாடங்களையும் கற்றார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், முனைவர்(டாக்டர்) பட்டமும் பெற்றார். சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள  கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பேராசிரியராக பணியாற்றினார்.

அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் – ஈரான்

டெஹ்ரான்:சனிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ஈரானின் அணு விஞ்ஞானி ரஸாயியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இச்சம்பவத்தை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லிர்ஜானி ’அமெரிக்க-சியோனிச தீவிரவாதம்’ என குறிப்பிட்டார். இத்தகைய செய்திகளின் எதிர்விளைவுகளை குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும் என அவர் கூறினார்.

யெமனில் குண்டுவெடிப்பு:மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் பலி

66-xmc7I_St_55யெமன்:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெற்று வரும் யெமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் மரணமடைந்தனர்.

இரண்டு அதிகாரிகள், மேஜர், லெஃப்டினண்ட் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். யெமனின் கடலோர பிரதேசமான ஏடனில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்காயிதா இயக்கம் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்யான் மாகாணத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெற இருக்கவே இத்தாக்குதல் நடந்துள்ளது.

பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் – ஆ.ராசா

raja_jpgபுதுடெல்லி:பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் என ஆ.ராசா டெல்லியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நீதிபதி ஷைனி முன்பாக அவர் இதனை தெரிவித்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கி ஆ.ராசா உள்பட 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றுவருகிறது.இவ்வழக்கில் சி.பி.ஐ ஆ.ராசா மீது மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா? – பொய் என கூறுகிறது ஆய்வு

untitledபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச்சத்துக் குறைப்பாட்டை போக்கவும் எப்பொழுதும் பாட்டில் தண்ணீரும் கையுமாக திரிந்து சிறந்த ஆரோக்கிய வாழ்வை கனவு காண்பவர்கள் ஏராளம். ஆனால் அத்தகையோர் தங்களது நேரத்தை வீணாக்குகின்றார்கள் என கூறுகிறது ஒரு ஆய்வு.

தினமும் ஆறு அல்லது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் உபதேசம் இன்னொரு நிபுணத்துவ பொய் என புதிய ஆய்வு கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

d973e17a-1c6c-4d91-8234-26f311de671f_S_secvpfபுதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை பா.ஜ.கவை மிரளச் செய்துள்ளது – ப.சிதம்பரம்

0புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை தீவிரமடைவதால் பா.ஜ.க சில அமைச்சர்களை தேடிப்பிடித்து தாக்குதல் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.டி.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது: வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெடிக்குண்டு நிர்மாணித்தது, இனப்படுகொலை நடத்தியது குறித்த ஒன்பது ஆதாரங்கள் என் வசம் உள்ளன. பாப்ரி மஸ்ஜித் தொடர்பான இரு வழக்குகளை விரைவுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கோரிக்கைதான் பா.ஜ.கவின் எங்கள் மீதான தாக்குதலின் மற்றொரு காரணமாகும்.

பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் நரசிம்மராவுக்கு பங்குண்டு – மணிசங்கர் அய்யர்

 
manisangariyarபுதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பர்-6ம் தேதி நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர் அன்றைய பிரதமராக பதவி வகித்த நரசிம்மராவ் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய இரண்டாவது புத்தகமான ’24, Akbar Road’ வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு ’காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் மணிசங்கர் அய்யர்.

சிரியாவில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கும் சட்டம்

 
syriaடமாஸ்கஸ்:ஆளுங்கட்சியான பாஅஸ் கட்சியை தவிர அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தின் வரைவை சிரியா அரசு தயாரித்துள்ளது. ஆனால் மதம், இனம், பிரதேசம் அடிப்படையிலான கட்சி உருவாக்கத்தை சட்டம் தடை செய்கிறது. மார்ச் மாதம் சிரியாவில் துவங்கிய அரசு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகிப்பவர்களின் முக்கிய கோரிக்கை பல கட்சி முறையை கொண்டுவர வேண்டும் என்பதாகும்.

கராச்சி கலவரம்:3 தினங்களில் 44 பேர் பலி


Supporters of political party Muttahida Qaumi Movement burn an effigy representing provincial minister Zulfikar Mirza during a protest in Karachiகராச்சி:பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் மூன்று தினங்களாக தொடரும் கலவரத்தில் 44 பேர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமை சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் கலவரம் துவங்கியது.

பாகிஸ்தானில் பிரபல அரசியல் கட்சியான முத்தஹிதா குவாமி மூவ்மெண்டும், அதிலிருந்து பிரிந்த முஹாஜிர் குவாமி மூவ்மெண்ட்-ஹகீகியும் கராச்சியின் மண்ணை இரத்தகளரியாக மாற்றியுள்ளன.

அரசியல் மோதல்கள் தொடர்கதையான கராச்சியில் ஜூலை மாதம் மட்டும் 339 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

மால்கம் எக்ஸ் கொலை:வாழ்க்கை வரலாறு புதிய விசாரணை வழி வகுக்கிறது

malcolm_x_0061நியூயார்க்:அமெரிக்காவின் குடியுரிமை ஆர்வலராக பணியாற்றிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அவருடைய மரணத்தைக் குறித்த மர்மங்களை வெளிப்படுத்துமா? – மால்கம் எக்ஸின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அவ்வாறு கருதுகின்றனர்.

1965-ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் உரையாற்றும் வேளையில் மால்கம் எக்ஸ் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். கறுப்பு இன முஸ்லிம்களின் தலைவரான எலிஜா முஹம்மதுடன் மால்கம் எக்ஸிற்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு மூலம் அவரது ஆதரவாளர்கள் மால்கம் எக்ஸை கொலைச் செய்ததாக போலீஸ் கூறுகிறது. கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தண்டனையை அனுபவித்துவிட்டனர். மர்மங்கள் நிறைந்த மால்கம் எக்ஸின் கொலைவழக்கின் மறுவிசாரணைக்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.

Monday, July 25, 2011

கேரளா:நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

freedom-paradeகோழிக்கோடு:சுதந்திர தினத்தையொட்டி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கேரள மாநிலத்தில் 4 இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச்செயலகம் தீர்மானித்துள்ளது.
புனலூர்,சாவக்காடு, மஞ்சேரி, தாமரச்சேரி ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு:புலனாய்வு ஏஜன்சிகள் இடையே கருத்து வேறுபாடு

 
33007-city-imageமும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர். புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக்குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பிவிட்டதாக கருதப்படுகிறது.

உயிர் பயம்:குஜராத்தில் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைகிறார்கள்

 
imagesCAVPUT45அஹ்மதாபாத்:தங்களுடைய பாதுகாப்பையும், சட்டத்தை அமுல்படுத்துவதில் மோடியின் அரசு காண்பிக்கும் அலட்சியத்தையும் கவனத்தில்கொண்டு யூனியனை உருவாக்க குஜராத் மாநில தகவல் உரிமை ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் தகவல் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் பரிதாபகரமான சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்

 
Bajrang-Dal1மங்களூர்:கர்நாடகா மாநிலம் மங்களூரில் வளச்சில் அருகே அட்யார் கண்ணூர் என்ற பகுதியைச் சார்ந்த மறைந்த இப்ராஹீம் என்பவரின் மகள் புஷ்ரா. இவர் ஓட்டுநராக பணிபுரிந்த பிரசாந்த் ஷெட்டி என்பவரை காதலித்து பின்னர் அவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றி திருமணம் புரிந்தார். பிரசாந்த் ஷெட்டி தனது பெயரை ஜாஃபர் என மாற்றிக்கொண்டார். இவர்களது திருமணம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இவர்களுக்கு இக்பால் (4), இர்ஃபான் (3), ஃபாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன்(ஒன்றரை மாதம்) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் வாழ்க்கை சுமூகமாகவே சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜாஃபர் என்ற பிரசாந்த் ரெட்டி சமீப வருடங்களாக பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலுடன் நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார். பின்னர் தாங்கள் வசித்துவந்த அட்யார் கண்ணூரில் உள்ள வீட்டிலிருந்து புஷ்ராவின் விருப்பத்தை பொருட்படுத்தாமல் உடுப்பியில் உள்ள சன்க காட்டே என்ற இடத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு மாறியுள்ளார்.

நார்வே:கூட்டுப்படுகொலை நடப்பதற்கு முன்பே திட்டத்தை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது


norwayattacker-125_072411125555ஓஸ்லோ:நார்வேயில் நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பே கிறிஸ்தவ வலதுசாரி பயங்கரவாதி ஆண்டேர்ஸ் ப்ரவிக் போலியான பெயரில் தனது திட்டத்தை விவரிக்கும் குறிப்புகளை விரிவாக விளக்கும் 1500 பக்கங்களை கொண்ட ஆன்லைன் புத்தகத்தை வெளியிட்டதாக நார்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு சற்று முன்பு இந்த புத்தகம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ ப்ரெவிக் என்ற போலி பெயரில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் முகத்திரைக்கு தடை அமுலுக்கு வந்தது

belgium-niqabப்ரஸ்ஸல்ஸ்:ஐரோப்பிய நாடுகளை வாட்டிவரும் இஸ்லாமியஃபோபியா பிரான்சை அடுத்து பெல்ஜியத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இதன் விளைவு அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பாதுகாப்பதற்காக அணியும் முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த சனிக்கிழமை அமுலுக்கு வந்தது.

இத்தடை மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சவால் எனக்கூறி இந்த உத்தரவிற்கு எதிராக இரண்டு பெண்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

Sunday, July 24, 2011

எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லா​ன் விளையாட்டி​ல் தங்கம் வென்றார்

Aya Medaniகெய்ரோ:எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டியில் தங்கம் வென்றார். இப்போட்டிகள் எகிப்தின் அலெக்ஸான்ட்ரியா நகரில் நடந்து வருகின்றது. இதன் மூலம் இலண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார் ஆயா.

லிபியாவில் நேட்டோவின் கோரத்தாண்டவம்

libya-nato-strike-killed-7-civilians.img.204.136.1308485470499திரிபோலி:அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறோம் என கூறி லிபியாவில் விமானத்தாக்குதலை துவக்கிய நேட்டோ அந்நாட்டில் குண்டுகளை வீசி கோரத்தாண்டவம் ஆடுகிறது. லிபியாவின் தலைநகரமான திரிபோலியில் பெரும் நாசத்தை விளைவிக்கும் குண்டுகளை நேட்டோ வீசியுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் இயங்கும் ஹோட்டலில் நான்கு குண்டுகள் வீசப்பட்டன. நகரத்தின் இன்னொரு பகுதியில் ஐந்தாவது குண்டுவீசப்பட்டது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பிறந்து ஒரு மாதத்தில் குழந்தையை ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற தந்தை


திருநெல்வேலி:குடும்பத்தின் செலவுகளுக்காக பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ள பெண் குழந்தையை வேலையில்லாமல் திரிந்த நபர் ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற தந்தையை போலீசார் கைதுச்செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலை சேர்ந்தவர் செய்யது யூசுப்(45). டீக்கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூன் 1 ல், நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. குடிப்பழக்கம் உள்ள செய்யது யூசுப் தமது நான்காவது குழந்தையை குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த காளிமுத்து(55) க்கு விற்றுவிட்டார்.

ராணுவத்தினர் முஸ்லிம் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த சம்பவம் – குல்காமில் முழு அடைப்பு

61519ஸ்ரீநகர்:தெற்கு கஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் தொழுகைக்காக அங்கசுத்தி(ஒழு) செய்ய வெளியே வந்த முஸ்லிம் இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவரை கைதுச்செய்ய கோரி அம்மாவட்டத்தில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.குல்காம் மாவட்டத்தில் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து முழு அடைப்பு நடத்தப்பட்டது.

72 கோடீஸ்வரர்களின் அசாதாராண மரணம்

secret-millionaire2003ஆம் ஆண்டில் இருந்து இந்த வருடம் வரை 72 சீன பெரும் கோடீஸ்வரர்கள் அசாதாரண மரணம் அடைந்துள்ளனர் அல்லது இளம் வயதில் இறந்துள்ளனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கின்றது.

இந்த 72 பேரும் தனித்தனியே ஏறத்தாழ 80கோடிக்களுக்கு மேல் சொத்துக்கள் உடையவர்களாக உள்ளனர். 2003ல் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இவர்களில் 15 பேர்கள் மற்றவர்களால் கொல்லப் பட்டுள்ளார்கள்; 17 பேர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்; 7 பேர்கள் விபத்தில் பலியாகியுள்ளார்கள்; 14 பேர்கள் தூக்கிலப்பட்டுள்ளார்கள்; 19 பேர்கள் இளம் வயதில் நோயினால் மரணித்துள்ளார்கள். இந்தத் தகவலை நியூ கல்டர் வியூ என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவிக்கின்றது.

ஈரானிய பல்கலைக்கழ​கத்தின் பேராசிரியர் தீவிரவாதிக​ளால் படுகொலை

 
minooie20110724123340640டெஹ்ரான்:ஈரானிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்று ஈரானிய போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தர்யூஷ் ரெஜயி நிஜாத்தும் (Daryoush Rezaienejad) (வயது 35) அவரது மனைவியும் அவர்களது குழந்தையின் பாலர் பள்ளிக்கு செல்லும் வழியில் துப்பாக்கி ஏந்திய இரண்டு நபர்கள் மோட்டார் பைக்கில் இருவரையும் அணுகினார்கள். அவர்கள் தர்யூஷ் ரெஜயி நிஜாத்தை பெயர் கூறி அழைத்ததும் தர்யூஷ் ரெஜயிநிஜாத் திரும்பிப் பார்த்த மறு கணம் அவரது கழுத்தில் சுட்டனர்.

Saturday, July 23, 2011

நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்

 
LON816_Norway_E_1300682cl-3ஓஸ்லோ:நார்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் சனிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்புகளில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.

ஓஸ்லோ நகரத்தின் இதய பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இரண்டாவது குண்டு ஓஸ்லோவுக்கு வெளியே ஆளுங்கட்சியான லேபர் கட்சியின் இளைஞர் முகாம் நடக்கும் இடத்தில் நடந்தது. முகாமில் 700க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 32 வயதான ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சிரியா:ஆஸாதிற்கு எதிராக பிரம்மாண்ட பேரணி

 
SYRIA-POLITICS-UNRESTடமாஸ்கஸ்:அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் அடக்குமுறை கொள்கைக்கு எதிராக நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சிரியாவின் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

தர்ஆ, லதாக்கியா, ஹம்ஸ், டமாஸ்கஸில் மிதான் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன.

சவூதிஅரேபியாவின் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக ஆம்னஸ்டி

 Amnesty-Internationalலண்டன்:சவூதி அரேபியா தயாராக்கி வரும் பயங்கரவாத தடுப்பு சட்டம் மக்களின் வாயை மூடுவதற்கான முயற்சி என ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கூறியுள்ளது. சட்டத்தின் வரைவை பி.பி.சி வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த சவூதிஅரேபியா அரசின் முயற்சி என ஆம்னஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. விசாரணை இல்லாமலேயே நீண்டகாலம் சிறையில் அடைப்பது, சட்ட உதவியை தடுத்தல், மரணத்தண்டனை அளிப்பதை அதிகரிப்பது ஆகிய பிரிவுகளை உட்படுத்தியுள்ளது இந்த சட்டம்.

முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பா?

15swamyபுதுடெல்லி:அமெரிக்க கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கர்நாடகா:லோகாயுக்தா அறிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை – ஆளுநர் உறுதி

h_r_bharadwaj_governor630பெங்களூர்:சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்பட அமைச்சர்களுக்கு பங்கிருப்பதாக நிரூபிக்கும் லோகாயுக்தாவின் அறிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

லோகாயுக்தா நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே சிபாரிசு செய்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் உறுதியளித்தார்.
லோகாயுக்தாவின் அறிக்கை வருகிற திங்கள் கிழமை அரசுக்கு அளிக்கப்படும் என கருதப்படுகிறது.

பிரஜாபதி:முக்கிய தகவல்கள் அடங்கிய கம்ப்யூட்டர்களை சி.பி.ஐ கைப்பற்றியது

tulsi-pirajapathio-200x170அஹ்மதாபாத்:சொஹ்ரபுதீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கின் சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் போலி என்கவுண்டர் கொலைவழக்கின் முக்கிய விபரங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்களை சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து சி.பி.ஐ கைப்பற்றியது.

முன்னர் இவ்வழக்கை விசாரணைச் செய்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான கீதா ஜொஹ்ரி மற்றும் அவரது தனி உதவியாளர் பயன்படுத்தியவையே இந்த கம்ப்யூட்டர்கள் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலபேர ஊழல்: எடியூரப்பாவை விசாரணைச் செய்ய அனுமதி

 
yeddyurappa111பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக அம்மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவின் பங்கினைக் குறித்து விசாரணைச் செய்யும் லோகாயுக்தா அறிக்கை வரவிருக்கும் வேளையில் உயர்நீதிமன்றத்திலும் பா.ஜ.கவின் தென்னிந்திய நாயகனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நிலபேர ஊழல் வழக்கில் எடியூரப்பாவையும், அவரது குடும்பத்தினரையும் விசாரணைச் செய்ய அனுமதிக்கவேண்டும் என ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ

indresh-kumar_l_1293083073ஜெய்ப்பூர்:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி ஜெய்ப்பூர் குஜராத்தி சமாஜத்தில் நடந்த சதி ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்தது இந்திரேஷ் குமார் என என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் வெறித்தனம்​: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு ​- கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

23TH_KULGAM_730872fஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி(தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

கஷ்மீரை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களின் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்திவருகிறது இந்திய ராணுவம். தெற்கு கஷ்மீரில் கல்காம் மாவட்டத்தில் 32 வயதான ருகையா பானு என்ற முஸ்லிம் சகோதரியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் இந்திய ராணுவத்தைச் சார்ந்த இரு வெறியர்கள்.

Dua For Gaza