Wednesday, February 22, 2012

உ.பி:பா.ஜ.கவில் தலைவர்களுக்கு பஞ்சம் – திக்விஜய் சிங்

digvijay

கான்பூர்:உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநில தேர்தல் களத்தில் மத்தியபிரதேசத்தைச் சார்ந்த உமா பாரதியை முதல்வர் பதவி வேட்பாளராக பா.ஜ.க களமிறக்கியிருப்பதை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) கான்பூரில் கூறியது:

வெளிமாநிலத்தைச் சேர்ந்த நான் உத்தரப் பிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதாக பாபா ராம் தேவ் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாஜகவினர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து உமா பாரதியை உத்தரப் பிரதேசத்துக்கு தேர்தலுக்காக இறக்குமதி செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா, சூரிய பிரதாப் சாஹிப் ஆகியோரை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல்தானே பாஜக தலைமை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா பாரதியை இங்கு முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச பாஜகவில் தலைவர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza