Showing posts with label AIIC. Show all posts
Showing posts with label AIIC. Show all posts

Sunday, October 6, 2013

வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்!: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோரிக்கை


all

புதுடெல்லி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழு கூட்டம், டெல்லி ஜாமிஆ நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் அடுத்த இரண்டு (2013-2014) வருடத்திற்கான தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Monday, January 21, 2013

தஞ்சையில் இமாம் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் மீது தாக்குதல் - குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை!

தஞ்சாவூர்: மசூதி இமாம் மீதும் இன்னபிற முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் பட்டுக்கோட்டை அண்ணாநகர் மசூதி இமாம் மைதீன் அப்துல் காதர் பிலால் என்பவரையும் மற்றும் அவரது மாமனார் உள்ளிட்டோரையும்,   பாலா, சிற்றரசு, சிரஞ்ஜீவி உடபட குடிபோதையில் இருந்த 15 பேர் கொண்ட கும்பல் இமாமை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Saturday, January 12, 2013

சென்னையில் நடைபெற்ற ஏ.ஐ.ஐ.சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்


ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் தேசிய நிர்வாகிகளின் கூட்டம் நேற்றைய தினம் (08.01.2013) சென்னையிலுள்ள‌ மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி அவர்கள் தலைமை தாங்கினார்.

தேசிய தலைவர் தன்னுடைய தலைமை உரையில் வக்ஃபு நிலத்தில் கட்டப்பட்டிருந்த  கோஷியா மஸ்ஜித் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை டெல்லி டெவலப்மெண்ட் அதாரிட்டியினர் சமீபத்தில் இடித்தனர். இதனை ஆல் இந்தியா இமாம் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும் குடியிருப்பையும் மீண்டும் கட்ட வேண்டும் என ஆல் இந்தியா இமாம் கவுன்சில் அரசு முன் கோரிக்கை வைக்கின்றது. நாட்டில் உள்ள பல வக்ஃபு நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்றது. இதனை தடுத்திடும் வகையில் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க உரிய சட்டத்திருத்ததை கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது" என கூறினார்.

Monday, December 31, 2012

எழுச்சியுடன் நடந்த இமாம்களின் மாநாடு!


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் கடந்த டிசம்பர்-29ம் தேதி சனிக்கிழமை "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் நடைபெற்றது. 



காலை 9 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் இபுராஹிம் உஸ்மானி அவர்கள் கொடியேற்றி வைத்து இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுச்செயலாளர் ஆபிருதீன் மன்பஈ திறந்துவைத்தார். காலை 10 மணியளவில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜமாத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் மெளலானா மன்சூர் காஷிஃபி அவர்கள் காதியானிகளின் உருவாக்கம் தொடர்பான உரையை நிகழ்த்தினார். அடையாள் ஜூம்மா மஸ்ஜிதின் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் இஸ்லாமிய கல்வி என்ற தலைப்பிலும் இன்னும் பிற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.

Friday, December 28, 2012

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு

கலாச்சார பாரம்பரியமிக்க நம் நாட்டின் இன்றைய நிலை மிகவும்  வேதனையளிப்பதாக உள்ளது. தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப உறவு முறைகள், சமூக வாழ்வு என அனைத்தும் சிதைந்து வருகிறது. சுயநலம், பாலியல் வன்கொடுமைகள், தகாத உறவுகள், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம்,  பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துதல், கற்பழிப்பு போன்ற சமூக தீமைகள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
 நம் நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கின்ற இத்தகைய கலாச்சார சீரழிவுகளை முற்றிலும் களைந்து, களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக வருகின்ற 29-12-2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

Sunday, December 9, 2012

சென்னையில் இமாம் கவுன்சில் சார்பாக நடைபெற்ற தர்ணா போராட்டம்

சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு அகில இந்திய அளவில் இயங்கி வரும் ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் சார்பாக சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இப்போராட்டத்திற்கு சென்னையிலுள்ள பல மஸ்ஜிதுகளின் இமாம்கள் கலந்து கொண்டனர். பாபரி மஸ்ஜிதை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசம் முழுவதும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் போராட்டங்களை நடத்தியுள்ளது.

Dua For Gaza