அபுதாபி:வெளிநாட்டினரை திருமணம் செய்த உள்நாட்டு பெண்களுக்கு பிறந்த 1117 குழந்தைகளுக்கு குடியுரிமையை வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குழந்தைகளுக்கு 18 வயதாகும் வேளையில் பூரண குடியுரிமை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.
தந்தையின் குடியுரிமையை கவனத்தில் கொண்டு பெரும்பாலானா அரபு நாடுகள் குடியுரிமையை வழங்கும். ஆனால், துனீசியாவில் இதுக்குறித்து பரிசீலிப்பதில்லை. அல்ஜீரியாவில், உள்நாட்டு பெண்கள் திருமணம் புரியும் வெளிநாட்டு கணவன்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் கடந்த 2005-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment