Saturday, February 25, 2012

எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் இந்தியா: ஒபாமா

Obama
வாஷிங்டன்:இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் எண்ணெய் உபயோகம் அதிகரித்ததுதான் விலை உயர்வுக்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் எண்ணெயின் விலை உயர்வுக்கு மேற்கண்ட 3 நாடுகளும்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பாரக் ஒபாமா, மேற்காசியாவின் ஸ்திரமற்ற நிலையும், ஈரான் பிரச்சனையும் விலை உயர்வுக்கு ஆக்கமளித்துள்ளது என்று தெரிவித்தார்.

மியான்மி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் கூறியது: மேற்காசியாவில் ஸ்திரமற்ற நிலை அதிகரிக்குமானால் வால்ஸ்ட்ரீட்டில் ஊக வர்த்தகர்கள் எண்ணெய் விலையை அதிகரிப்பார்கள். ஐந்து வருடங்களுக்கு இடையே சீனாவில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. அவ்வாறெனில் எவ்வளவு கச்சா எண்ணெய் தேவைப்படும் என்பதை சிந்தித்து பாருங்கள். மொத்தம் எண்ணெயின் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே அமெரிக்கா உபயோகிக்கிறது(?)பிரச்சனையை தீர்க்க புதிய திட்டங்களை தீட்டவேண்டியுள்ளது. என்று ஒபாமா தெரிவித்தார்.

ஈரானுடன் ஏற்பட்ட பிரச்சனையே எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்று ரிபப்ளிகன் கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் குற்றம் சாட்டினர். கடந்த வாரம், அமெரிக்கா கேஸோலின் விலையை ஒன்பது சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை இவ்வாண்டு கடுமையாக உயர்ந்தது. பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக ஈரான் அறிவித்த பிறகு தொடர்ச்சியாக எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza