Monday, November 24, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கன மழையால் கிணறுகள் உட்பட நீர்நிலைகளில் நீர்  மட்டம் உயர்ந்துள்ளது. உமர் ஊரணி, பள்ளிவாசல் ஊரணி  உள்ளிட்ட  ஊரணிகள் நிரம்பி வழிகின்றன.

காயிதே மில்லத் பகுதி உள்ளிட்ட பல குடியிருப்பு  இடங்களில் மழை நீர்  மிக அதிக அளவில் தேங்கியுள்ளதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், பொதுமக்கள் உட்பட பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள்1018 பேர் மீதான வழக்கு ரத்து- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து நீதிக்காக போராடும்! - மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் அதன் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 17 அன்று ஒற்றுமை பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவதென்று தீர்மானித்து அதற்கு முறையாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி 16.02.2014 அன்று பெறப்பட்டது. 

Monday, November 10, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி ரவிஸ் மஹாலில் நவ.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் ரஃபீக் அஹமது, மாநில பொதுச்செயலாளர்கள் M.நிஜாம் முகைதீன், A.அப்துல் ஹமீது, முகம்மது முபாரக், மாநில செயலாளர்கள் A.அமீர் ஹம்சா, T.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர். ஆவாத் ஷெரீப் கலந்துகொண்டார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முகம்மது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் கட்சியின் இரண்டு வருட செயல்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Friday, October 31, 2014

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,
  அக்டோபர் 29, 2014.

சென்ற அக்டோபர் 14 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை காவல் சரகம், எஸ்.பி. பட்டணம் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன் பட்டனம் காவல் நிலையத்தில் காட்டுவா எனபவர் மகன் செய்யது முஹம்மது (24) என்பவர் அந்தக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் (எஸ்.அய்) அ.காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது. அவ் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.அய்.டி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், காளிதாஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இராமநாதபுரம் தலைமைக் காவல் நிலையத்தில் உள்ளார் எனவும், கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு தந்துள்ளது என்பதும், பல்வேறு இயக்கங்களும் செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றன என்பதும், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் இருந்த ஆறு காவலர்களும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள்.

Saturday, October 25, 2014

புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!


இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!


ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

Wednesday, October 22, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

 தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டதால்  கடும்  வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த  புதுவலசை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள்  முன் கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும், தொடர்  மழையால் நீர் மட்டம் வற்றியிருந்த ஊரணிகள்,கிணறுகள் தற்போது நிரம்ப தொடங்கியிருக்கின்றன. 

Tuesday, October 21, 2014

S.P பட்டிணம் காவல் நிலைய படுகொலையை கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்..!

இராமநாதபுரத்தில் எஸ்.பி  பட்டிணம் காவல்நிலைய படுகொலையை  கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு  சார்பில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சந்தை திடல் அருகே கடந்த  20.10.2014 திங்கள் கிழமை அன்று காலை 11 மணியளவில்  நடைபெற்றது. 

இந்த கூட்டமைப்பில்  SDPI, CPM,CPI,INTJ,IUML, பாப்புலர் ஃப்ரண்ட், நாம் தமிழர், பெரியார் பேரவை, தமிழர் தேசிய முன்னணி,தமிழ் புலிகள் , விடுதலை சிறுத்தைகள்,புதிய தமிழகம், இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகள் இடம்பெற்றுள்ளன . 

Friday, October 10, 2014

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு விழா

புதுவலசையில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மின்னொளி கைப்பந்து மற்றும் கால்பந்து  ஆகிய  விளையாட்டு போட்டிகள் கடந்த 04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பனைக்குளம் செல்லும் சாலையை சீரமைக்க நடவ டிக்கை -மாவட்ட வருவாய் அதிகாரி

புதுவலசையில் நடை பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.38.88 லட் சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதி காரி விசுவநாதன் பயனா ளிகளுக்கு வழங்கினார். 

மக்கள் தொடர்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் ஆலோ சனையின் பேரில் மண்டபம் யூனியன் புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகா முக்கு மாவட்ட வருவாய் அதி காரி விசுவநாதன் தலைமை தாங்கினார். வருவாய் கோட் டாட்சியர் திருமால்சாமி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ரவீந்திரன், தாசில்தார் சுரேஷ்குமார், சமூக பாதுகாப்பு தாசில்தார் மாரி, குடிமைப்பொருள் வழங் கல் தனி தாசில்தார் கங்கா, சிறப்பு திட்ட அமலாக்க தனித்துணை ஆட்சியர் ராஜே சுவரன், ஊராட்சி தலைவர் கள் புதுவலசை சலீனாபானு ஜபருல்லாகான், தேர்போகி ஜெயக்கொடி ராதா கிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பஸ் வசதி, சாலை வசதி, மின் வசதி, விலையில்லா தையல் எந்திரம், சிறுதொழில் கடனு தவி, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொதுமக் கள் சார்பில் 360 மனுக்கள் அளிக்கப்பட்டன. 

Monday, October 6, 2014

புதுவலசையில் சிறப்பாக நடைபெற்ற திடல் தொழுகை

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு புதுவலசையில் முதன் முறையாக திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமதூரில் நபிவழி  திடல் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று நமதூர் ஜமாஅத் இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமது அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடத்த தீர்மானித்தது.

இதனையடுத்து நேற்று (05.10.2014) முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (06.10.2014) காலை சரியாக 7:30 மணியளவில் பெருநாள் தொழுகை ஆரம்பமாகியது. சகோ. அஹமது அமீன் ஆலிம் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

Friday, October 3, 2014

புதுவலசையில் இந்த வருடம் திடல் தொழுகை - முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு

புதுவலசையில் 2014-ம் ஆண்டிற்கான ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடைபெறும் என புதுவலசை முஸ்லிம்  ஜமாஅத் அறிவித்துள்ளது.

கடந்த பல நாட்களாகவே  நபிவழியில் திடல் தொழுகை நமதூரில் நடத்தப்பட வேண்டும் என நமதூர் இமாம்களும், புதுவலசை வாழ் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என அனைவரும் தொடர்ச்சியாக நமதூர் ஜமாஅத் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

Thursday, September 18, 2014

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: நிவாரணப் பணிகளில் களமிறங்குகிறது பாப்புலர் ஃப்ரண்ட்!

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலம் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செயல்படுத்தப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை துவங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயார் நிலையில் உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நிலவி வரும் நிலைமையை ஆராய்ந்துள்ளது.

Sunday, September 14, 2014

புதுவலசையில் NWF நடத்திய மாதாந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி...!

சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

Saturday, August 16, 2014

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் பேருந்து நிலையம் எதிரே தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் 68-வது சுதந்திர தினம் நேற்று (15.08.2014) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

தியாகிகளை  கெளரவப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள், பொதுக்கூட்டங்கள்   என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் பாப்புலர்  ப்ரண்டின் தேசியத் தலைவர் சரீப் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Wednesday, August 13, 2014

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய 2014-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களைப் போலவே  இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக 10.08.2014 அன்று நமதூர் மதரஸா வழாகத்தில் பொழிவுடன் நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Friday, August 1, 2014

புதுவலசையில் "இஃப்தார் கிட்" விநியோகம்

பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் கடந்த புனித ரமலான் மாதத்தில் அகில இந்திய அளவில் " இஃப்தார் கிட்" எனப்படும் நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நமதூரில் ஃபித்ரா விநியோகம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா எனப்படும் நோன்பு பெருநாள் தர்மம் நமதூரில் தகுதி உடையோருக்கு விநியோகிக்க பட்டு வருகிறது.

Monday, July 21, 2014

அரபு சமூகத்திற்கும் பொறுப்புண்டு!

வரலாற்றில் ஏராளமான போர்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் துவக்கி வைத்த இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன.போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் மதம், தீவிர தேசியவாதம், இன வெறி, ஏகாதிபத்தியம் ஆகியன இருந்துள்ளதை நாமறிவோம்.

காஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!

தோஹா: இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Saturday, July 19, 2014

உலகில் 3 இல் ஒரு பகுதி ஏழைகள் இந்தியாவில்!

புதுடெல்லி : உலகில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஐ.நா. 2014ஆம் ஆண்டின் “மில்லினியம் வளர்ச்சி இலக்குகள்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டெல்லியில் உள்ள ஐ.நா. தகவல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டார். 

Thursday, July 3, 2014

சீனாவில் நோன்பு நோற்கத் தடை

பெய்ஜிங் : சீனாவில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதைச் சீன அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் முஸ்லிம்கள் வசிக்கும் வடமேற்கு பிராந்திய ஸிங்ஜியாங் பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் இணைய தளங்கள் மூலமும் அரசு முகாமைகள் மூலமும் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரமலானில் உள்ளத்தை புதுப்பிப்போம்!

நம்பிக்கையாளர்களுக்கு ஆத்ம பரிசோதனைக்கும், சுய விமர்சனத்திற்குமான அபூர்வமான வாய்ப்பே ரமலான்.சுய விசாரணைகள் நம்பிக்கையாளரை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.வழி கேட்டிலிருந்து நேர்வழியை நோக்கியும், நேரான வழியில் மேலும் உறுதியுடன் செயல்படவும் ரமலான் மனிதனை வழி நடத்துகிறது.ஒரு நம்பிக்கையாளனின் வாழ்க்கை என்பது சுவனத்தை நோக்கிய பயணமாகும்.மறுமையில் விசாரணை வரும் முன்னர் அடிக்கடி தன்னை சுயமாக விசாரித்துக்கொள்ளவும், தனது செயல்களை நீதியின் தராசில் சீராக தூக்கிப்பார்த்து சரிச்செய்து கொள்ளவும் கற்பிக்கப்பட்ட சமூகமே முஸ்லிம்கள்.இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர்(ரலி) அவர்களின் பிரபலமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது:’நீங்கள் விசாரிக்கப்படும் முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்.நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்படும் முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்’. அருட்கொடைகளின் வசந்தகாலமான ரமலானில் நம்பிக்கையாளர்களின் விசாரணை பெரும்பாலும் தன்னைக் குறித்தே அமையும்.

Friday, June 20, 2014

ஏர்வாடிதர்ஹாவில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை


எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அலங்கார வாயில் அருகே பல ஆண்டுகாலமாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித  இடையூறு இல்லாமலும்,போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி  இவர்களது கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பாஜக அரசு இரயில் கட்டணத்தை உயர்த்தியது மக்கள் விரோத செயல்! எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கூறியதாவது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுபட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் பெரிதும் உபயோகிக்கும் இரயிலின் பயணக் கட்டணத்தை 14.2 சதவீதம் அளவிற்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மேலும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  

தேவாலயங்கள் மீது கல்வீச்சு:- எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கண்டனம்!


இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஸ் குமார் கடந்த 18.06.2014 அன்று இரவு 10:30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழி எங்கும் அதன் தொண்டர்கள் பேருந்துகள் மீதும், தொழில் நிருவனங்கள் மீதும் கற்களை எரிந்து பதட்டத்தை ஏற்படுத்தினர்.

மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், தேவாலய ஊழியர்களின் வாகனங்கள் மீதும் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர்.

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசுக்கு வேண்டுகோள்!



திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 18.06.14 அன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் K.P.S.சுரேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து விரைந்து தேடி வரும் நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள், கிருஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டும். கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. வழியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி இலங்கை தூதரகத்தில் கூட்டமைப்பு சார்பில் மனு

islamiya koottamaippu
இலங்கையில் கடந்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் பளிவாசல்களும், வீடுகளும், தொழில் நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இலங்கை முஸ்லிம்களின் மீது மீண்டும் இனவெறி தாக்குதல் - இலங்கை அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்!


இலங்கை களுத்துறை மாவட்டம் அளுத்காமாவில் பொதுபலசேனா என்ற சிங்கள இனவெறி அமைப்பு ஒன்று நடத்திய ஊர்வலத்தில் முஸ்லிம்களை குறிவைத்து ஏற்படுத்திய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை மூன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை தடுக்காத இலங்கை அரசை கண்டித்து இன்று (19-06-2014) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thursday, June 19, 2014

போராளிகளின் பார்வையில் நோன்பு

இன்றைய சூழ்நிலைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். ஒரு புறம் சமூகத்திற்கு பிரச்சனை, மற்றொரு புறம் சமூகத்திற்க்குள் பிரச்சனை. இந்த இரண்டையும் விவேகமாக கையாள்வதில் தான் இஸ்லாத்தின் வெற்றியும் நம்முடைய லட்சிய பயணத்தின் இலக்கும் அடங்கியிருக்கின்றது.
நம்முடைய (இஸ்லாத்தின்) எதிரிகள்  இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் துடைத்து எரிவதற்கு, முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்சியின் மூலம் இன்று ஆட்சிகட்டிலில் அமர்ந்து அவர்களுடைய நீண்ட நெடிய திட்டத்தை அடைந்திருக்கின்றனர்.

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...

Sunday, June 15, 2014

சமூக அமைதியை கெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மத துவேச நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் வடக்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் இரு தினங்களாக நடைபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து இன்று(14.06.2014) மாலை தேவிப்பட்டிணத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கையில் உருட்டுக்கட்டை ,சீருடையுடன் வீதிகளில் பேரணியாக சென்றுள்ளனர்.

Monday, June 9, 2014

துபையில் EPMA கலந்தாய்வு கூட்டம்..!

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களைப் போலவே  இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்துவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இவ்வருடம் முதல் நமதூரில் இருந்து  வெளியூர்களில் சென்று படித்து சாதனை படைக்கும் மாணவ,மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Friday, June 6, 2014

இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் கொலை: இந்து அமைப்புக்கு தடை?

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட இந்து அமைப்பினை தடை செய்ய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று புனே காவல்துறை ஆணையர் கூறினார்.
சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (வயது 24) என்பவர் புனேவில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் திங்கள்கிழமை மாலை தொழுகைக்குச் சென்று திரும்பினார். அப்போது, அவர் மீது திடீரென சிலர் சரமாரியாக ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Thursday, June 5, 2014

துபையில் EPMA சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி


கடந்த பலவருடங்களாக EPMA சார்பாக நமதூருக்கு பல்வேறு நலப்பணிகள் செய்துவருவது தாங்கள் அறிந்ததே. அதில் முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் நாம் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்கள் அதன் அடிப்படையில் நமதூர் வாழ் மக்களை கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அதன் பக்கம் உந்தி தள்ளுவது நமது கடமை. 

Sunday, June 1, 2014

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

க்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 

Saturday, May 31, 2014

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

Wednesday, May 28, 2014

தியாகத்தின் நிழலில் இஸ்லாம்! – வலசை ஃபைஸல்

புதிதான கொள்கையின் காற்று வீச தொடங்கிய காலம். சமத்துவமும், சகோதரத்துவமும் என்னவென்றே தெரியாமல் இன்று இந்தியாவில் ஆரிய பாசிச வர்க்கங்கள் கொலை, கொள்ளை, இனவாதத்தின் பெயரில் வீடுகளை சூறையாடுவது, சக மனிதன் என்பதை மறந்து மனிதாபிமானம் என்றால் அதன் நிறம் என்ன என்று கேட்கும் அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றை பிளந்தெடுத்து தீக்கிரையாக்கும் கோரர்களை போன்று கொடியவர்களை கொண்ட அரபு மண் அது.
அங்கே அடிமைகளுக்கு ஆனந்தமாய், உண்மையாளர்களுக்கு ஒளியாய், மனித நேயம் உடையவர்களுக்கு மணமாய் அழகிய கொள்கையுடன் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம், அமைதி என்ற தென்றல் காற்றை சுமந்து வந்தது வஹீ என்னும் நபித்துவம்.

Tuesday, May 20, 2014

நிரபராதிகள் தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்படுகின்றனர்! - உச்சநீதிமன்றம்!




புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக நிரபராதிகளை பொய்வழக்குகளில் சிக்கவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்ஷார்த்தம் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்ட 6 பேரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்து தீர்ப்பளித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

Wednesday, May 14, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 10, 2014 அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு துறை பொறுப்பாளர் ஷபியுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் பி.கோயா அவர்கள் மக்கள் தொடர்பு என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக களத்தில் செயல்படும் இயக்கங்களுக்கு மக்கள் தொடர்பின் அவசியம் குறித்தும் குறிப்பாக ஊடகங்களுடன் கொள்ள வேண்டிய தொடர்புகள் குறித்தும் தன்னுடைய உரையில் எடுத்துரைத்தார். மக்கள் தொடர்பை எடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் விவரித்தவர் மக்கள் தொடர்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருக்க வேண்டிய குணநலன்களையும் விவரித்தார்.

Saturday, May 10, 2014

மதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி-ஸ்டாலின்


கிரீஸில் தலையை மறைத்து அன்னா தேர்தலில் போட்டியிடுகிறார்!



ஏதன்ஸ்: ’முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தை தடுக்கவேண்டும்.கிரீஸில் அனைத்து முஸ்லிம்களுக்கும் பிறரைப் போலவே உரிமைகள் வழங்கவேண்டும்’- ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் கிரீஸுக்கான இடத்திற்காக போட்டியிடும் முஸ்லிம் பெண்மணி அன்னா ஸ்டாமோயு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன்னால் வைக்கும் கோரிக்கையாகும்.ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலையை மறைத்த உறுப்பினராக தான் இருப்பேன் என்று அன்னா கூறுகிறார்.இம்மாதம் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

Tuesday, May 6, 2014

மே - 4 ஷஹீத்.திப்பு சுல்தான் இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த நாள்...!


‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது."ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிஷ்டம்".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

Saturday, May 3, 2014

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அட்டூழியம்: பெண்கள், குழந்தைகள் உட்பட 32 முஸ்லிம்கள் படுகொலை!

குவஹாத்தி: அஸ்ஸாமில் கடந்த இரண்டு நாட்களாக போடோ தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட முஸ்லிம்களின் பலி எண்ணிக்கை 11 லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு சமீபத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24–ந் தேதியுடன் 3 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடோ இன வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு போடோ தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

Friday, May 2, 2014

சென்னை குண்டுவெடிப்புக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

 “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
01.05.2014 காலை 7.15 மணியளவில் பெங்களூரிலிருந்து கவுகாத்திக்கு சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடைக்கு வந்து நின்ற அடுத்த 10 நிமிடங்களில் இரயிலின் எஸ்4, எஸ்5 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடியது, கடும் கண்டனத்திற்குரியது.

Monday, April 28, 2014

ஸமீரா அலி நஜாத்:கருணையின் நிறைகுடமான அன்னை!

TOPSHOTS-IRAN-SOCIAL-EXECUTION-ISLAM
ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.

பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம்! உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மனுதாக்கல்!



பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம் உள்ளது. எனவே உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, டாக்டர்கள் குழு வைத்து மறுபிரேத பரிசோதனை(Re-postmortem)செய்வதற்கும் அதை வீடியோகிராப் செய்வதற்கும் உத்தரவு பெற்றுள்ளது.

எகிப்தில் சிறை இன்திஃபாழா துவங்குகிறது!



எகிப்திய சிறைகளில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களை கண்டித்து அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ‘சிறை இன்திஃபாழாவை’ சிறைக்குள் போராட்டம் துவங்க உள்ளனர்.
சதிப் புரட்சியின் மூலம் அநியாயமாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரையும், ஆட்சியையும் கவிழ்த்த சர்வாதிகார ராணுவ அரசு 18 ஆயிரம் பேரை அநியாயமாக சிறையில் அடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் சிறை இன்திஃபாழாவில் பங்கேற்பர்.

தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம்!



தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட வகுப்புக் கலவரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பெரிய கலவரங்கள் நடந்த உத்தரபிரதேச மாநிலம் கலவரங்களில் முன்னணியில் உள்ளது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 118 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு 247 ஆக கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டை ஆள பரந்த மனமே தேவை! – மோடிக்கு பிரியங்கா பதிலடி!

“நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகப் பெரிய மனமே தேவை. 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

Wednesday, March 5, 2014

இராமநாதபுரம் தடியடியை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (04-03-2014) மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவக்க தினத்தை கொண்டாடும் விதமாக இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தது.
எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கிய பின்னர், பேரணி துவங்கவிருந்த நேரத்தில் மாலை 4 மணியளவில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பேரணியை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த சட்டவிரோதமான கொலைவெறித்தாக்குதலில் ஏராளமான முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டித்தும், முஸ்லிம் விரோதப்போக்கைக் கண்டித்தும் இன்று மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!



கோவையில் 02 - 03 - 2014 அன்று மாலை 06.00 மணிக்கு இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் K. ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Dua For Gaza