Sunday, February 19, 2012

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது – அமெரிக்கா

கச்சா எண்ணெய்

வாஷிங்டன்:ஈரானிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வாங்ககூடாது என்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகியநாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான தடையை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை குறித்து மேற்கண்ட நாடுகளுக்கு புரிய வைத்துள்ளதாக அமெரிக்க அரசு துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரான் விவகாரம் தூதரக ரீதியாக தீர்வு காணமுடியும் என்று நம்புவதாக தெரிவித்த நூலங், இக்காரியத்தை முன்னர் அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் விளக்கியுள்ளார் என்றும், ஈரான் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாரகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஈரான் – பாகிஸ்தான் இடையேயான எரிவாயு குழாய் திட்டம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுக்குறித்து கருத்து கூறிய நூலங், ‘இது ஒரு மோசமான கொள்கையாகும். ஆனால், பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்துமா? என்பது குறித்து முன்னரே அமெரிக்காவால் எதுவும் கூறமுடியாது’ என்று குறிப்பிட்டார்.

அணுசக்தியை பிரகடனப்படுத்திய ஈரானின் மீது புதிய தடையை அமெரிக்கா அமுல்படுத்தியுள்ளது. ஈரானின் ரகசிய புலனாய்வு-பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிரான தடையாகும். மனித உரிமை மீறலை நடத்த சிரியாவுக்கு ஈரான் உதவுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza