திருச்சி:அரசியல் நாடகங்களை தற்போது நான் நம்புவதில்லை என்று தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகள் திருமணவிழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வருகை தந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.
அதன் விபரம்:
பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து உங்களின் கருத்து என்ன?
தற்போது நான் அரசியல் நாடகங்களை நம்புவதில்லை.
ம.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து…
வருந்தத்தக்கது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வீர்கள்?
ஆளும் கட்சியின் அராஜகம், அக்கிரமம். மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் அரசின் தேவையற்ற செயல்பாடுகள். தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றியது ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் மேற்கொள்வோம்.
இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவது ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையுமா?
மற்ற கட்சிகளும் இதுகுறித்து யோசித்தால், ஒருமித்த முடிவு எடுத்து போட்டியிடலாம்.
கொச்சியில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து?
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment