Sunday, September 30, 2012

ஆண்களின் கடமைகள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவு! அதனால தான் பின்ன, எப்பவும் இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பத்தியே பேசிட்டு இருக்கோம். அதில உள்ள ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும் தன்மகனையும் சமாளிக்குறதை பத்தி ரொம்ப பொலம்பிட்டு இருந்தாள் என் தோழி!  ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்.... என்னன்னா, பொலம்பினது  தன் தம்பிக்கிட்ட! அவன் உடனே "அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ்! இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்"!! அப்படின்னான்! மவனே! வந்துச்சு பாருங்க கோவம்!

ஒரே ஒரு கேள்வி தான் அவனை கேட்டேன். கப் சிப். புள்ளை அதுக்கப்புறம் வாயே திறக்கல. இப்ப அதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கலாம்னு இருக்கேன்!

இன்று உலக இதய நாள்!

World Heart Day
உணவும், ஓய்வும் இன்றி வேலையே கதி என்று ஓடி உழைக்கும் இளைஞர்கள் கவனிக்க. ஒரு தினம் யாரும் எதிர்பாராத வகையில் நீங்களும் ‘sudden attack’ ஆல் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 வயது ஆக குறைந்துள்ளது என்று புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது. இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கு கூட இதயநோய் பாதிக்க துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுக்குறித்து நாம் சிந்தித்திருக்க மாட்டோம். டெல்லி,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட மாநகரங்களில் தாங்கள் நடத்திய சர்வேயில் இதய நோய் வருவதற்காக வாய்ப்பு 20 வயதாக குறைந்துள்ளது என்று டெல்லி பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநரும் சீனியர் கன்ஸல்டண்டுமான டாக்டர் நீரஜா பாலா கூறுகிறார்.

ஈரானால் எங்களுக்கு ஆபத்து: இஸ்ரேல் பிரதமர் ஐ.நா.சபையில் புலம்பல்!


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மிரட்டலையும் மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஈரான் அணு குண்டு தயாரித்தால் அதை தங்கள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால், ஈரான் இதை மறுத்து வருகிறது. அணு சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் கூறுகிறது.


நியூயார்க்கில் நடந்த ஐ.நா சபை கூட்டத்திலும் இஸ்ரேல்  இதே புகாரை கூறியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ஐ.நா சபை கூட்டத்தில் பேசியதாவது:- 

கேம்பஸ் ஃப்ரண்டின் பாராளுமன்ற அணிவகுப்பு நாளை!

Campus-Democracy
புதுடெல்லி:மாணவர்களின் இயக்க சுதந்திரத்திற்கு பாராளுமன்றம் சட்டமியற்றக் கோரி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாளை பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பை நடத்த உள்ளது.
நிர்வாகங்களின் விருப்பத்தின் அடிப்படையில் கல்வி கூடங்களில் மாணவர்களின் இயக்க ரீதியான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் தடைவிதிக்கின்றது. சில கல்வி கூடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

Saturday, September 29, 2012

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் இன்று பதவியேற்பு!

Justice Altamas Kabir
புதுடெல்லி:நீதிபதி அல்டமாஸ் கபீர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
1948-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பிறந்த அல்டமாஸ் கபீர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றார்.

நுரையீரல்-மார்பக புற்றுநோயை தடுக்க வழிமுறைகள்!

இந்தியாவில் போதைபாக்கு சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை பயமுறுத்த மத்திய அரசு சிகரெட் பாக்கெட்டுகளில் மனித மண்டை ஓடு அச்சிடுமாறு கூறியது. இப்படி பல்வேறு படங்கள், எச்சரிக்கை வாசகங்கள் மூலம் மிரட்டினாலும் புகைபிரியர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டுதான் உள்ளனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் ஏராளமான இளைஞர்களுக்கு புற்று நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் ரத்தம் மற்றும் நுரையீரல் புற்று நோயால் அவதிப்படுகிறார்கள். புற்றுநோயை தொடக்க  நிலையிலே கண்டுபிடித்தால் அவற்றை எளிதாக குணப்படுத்த முடியும்.

ராமநாதபுரத்தில் ரெயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து மரணம்!

சென்னையை சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரகமத் நிஷா (வயது 40). கணவன்-மனைவியும் உறவினர்களுடன் ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கொடி ஏற்று விழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து இருந்தனர். பின்னர் அமானுல்லா, ரகமத் நிஷா சென்னை செல்ல ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தனர். அப்போது அங்கு ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

செல்ஃபோன் வெடித்து சிறுவன் படுகாயம்!


மனிதன் கண்டுபிடித்த அறிவியல் சாதனங்களால் எந்த அளவு நன்மைகள் ஏற்படுகின்றதோ அதே அளவு தீமைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அந்த அறிவியலின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பான கைப் பேசிகள் இன்று இந்த உலகையே சுருக்கி விட்டது என்று கூறலாம்.

இந்தியாவில் கழிவறையை உபயோகிப்பவர்களை விட கைப் பேசிகள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. அந்த அளவு இவை மனிதர்களின் அத்தியாவசிய பொருளாகிவிட்டது.ஆனால், இந்த கைப்பேசிகள் என்றாவது சில நேரங்களில் வெடித்து அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.இந்த செய்திகளை அவ்வப்போது பத்திரிக்கைகளிலும் காண முடிகிறது.

அக்டோபர் 1 முதல் பாஸ்போர்ட் கட்டணமும் உயர்கிறது!

திருச்சி: வரும் 1ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இனி ரூ.3,500 செலுத்த வேண்டும்.

 திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:
பாஸ்போர்ட் கட்டணங்கள் கடந்த 1993வது ஆண்டு முதல்முதலாக ரூ.60ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 9 ஆண்டுகளுக்கு பின் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. 

ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர்: வன்ஸாரா, பாண்டே மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை!

sadiq jamal
புதுடெல்லி:ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, பி.சி.பாண்டே மீது சி.பி.ஐ நாளை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்.
சொஹ்ரபுத்தீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் கொலைகளைப் போலவே ஸாதிக் ஜமால் கொலையும் போலி என்கவுண்டர் என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. ஜமாலின் போலி என்கவுண்டர் கொலைக்கு உத்தரவிட்டது குஜராத் க்ரைம் ப்ராஞ்சில் உயர் போலீஸ் அதிகாரியான வன்ஸாரா மற்றும் பாண்டே என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.

ஓடிப்போவது ஏன்? எதற்காக?

அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள்.  அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்....  இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை :(  கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்!

சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்....

முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள்,  குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!!   இதற்கு காரணங்கள்தான் என்ன?

உச்சநீதிமன்ற தீர்ப்பு:காவல்துறையை மதசார்பற்றதாக மாற்றுவதற்கான அழைப்பு – இ.எம்.அப்துற்றஹ்மான்!

இ.எம்.அப்துற்றஹ்மான்!
புதுடெல்லி:சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தீவிரவாத முத்திரைக் குத்தி சிறையில் அடைக்கும் நிரபராதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.
1994-ஆம் ஆண்டு அஹ்மதாபாத்தில் ஜகன்னாதபூரி யாத்ராவின் போது வகுப்புக் கலவரத்தை தூண்ட சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுதலைச் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத செயல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறாமல் இருக்கவியலாது. ஆனால், அரசியல் சாசனமும், சட்டமும் கூறும் நடவடிக்கைகள் அல்லாத தனி நபர் சுதந்திரத்தின் மீது அத்துமீற தீவிரவாதத்தை ஒரு திரையாக பயன்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Friday, September 28, 2012

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும் அரிய‌ வ‌கை க‌ட‌ல்வாழ் உயிர‌ன‌ங்க‌ள்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் ஏராளமான கடல்பசு, போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உயிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள், கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரபுலக புரட்சியை அரசியல் ஆதாயத்திற்காக ஒபாமா மோசடிச் செய்கிறார்! – ஜூலியன் அஸாஞ்ச்!


Julian Assange
ஐ.நா:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அரபுலக புரட்சியை தனது ஆதாயத்திற்காக மோசடிச் செய்வதாக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகளின் பிரதிநிதிகளிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக அஸாஞ்ச் உரையாற்றினார்.
அஸாஞ்ச் தனது உரையின் பெரும்பகுதியிலும் ஒபாமா கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நாவில் ஆற்றிய உரையை விமர்சித்தார்.அரபுலக புரட்சியை ஆதரித்த ஒபாமா, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை கருத்து சுதந்திரத்தின் பெயரால் நியாயப்படுத்துவதை அஸாஞ்ச் கண்டித்தார்.

தொடரும் தலைவலிக்கு தீர்வு!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தலைவலியை ஒரு முறையாவது சந்தித்து இருப்போம். சாதாரணமாக வரும் தலைவலி, வலி மாத்திரைகளாலும் ஓய்வு எடுப்பதாலும் சரியாகி விடுகிறது. அதுவே சிலருக்கு ஆபத்தானதாக அமைந்து வாழ்நாளில் பெருந்தொல்லையாக அமைந்து விடுகிறது. 

ஒரு வருடத்தில் தொண்ணூறு சதவீதம் மக்கள் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதில் தொண்ணூறு சதவீதத்தினருக்கு மேல் கண், காது, மூக்கு மற்றும் மூளைகளில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

கலைஞா் TV யில் SDPI மாநில தலைவர் அப்பாவி சிறுபான்மையினர் நிலைமை பற்றி நேர்காணல் கொடுத்த பொழுது!






அப்பாவி சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று வெறுமனே அவர்களின் பெயரை வைத்து சொல்லாதீர்கள்'-சுப்ரீம்கோர்ட இந்த தீர்ப்பு சம்பந்தமாக 27 .09 .12 இரவு 8 .30 மணிக்கு கலைஞா் டி.வி செய்திகளில் நேரடி நேர்கானல் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர்   K.K.S.M.தெஹ்லான் பாகவி  அவா்கள் கலந்துகொண்ட பொழுது

"கல்விக்கூட ஜனநாயகம் காப்போம்" - கேம்பஸ் ஃப்ரண்ட்


வலிமையான ஜனநாயக கட்டமைப்பிற்க்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. முhணவ அரசியல் மூலம் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களிலும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களிலும் உரிமைகளை போராடி வென்றெடுக்க இயலும்.


கேம்பஸ்களில் ஜனநாயகத்தை  அணுமதிப்பது மாணவர்கள் கல்விக்கூட அரசியல் மற்றும் தேசிய அரசியலில் ஈடுபட பெரிதும் உதவும். சிறந்த அரசியல் தலைவர்களுடனான மாணவர் சந்திப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை வலுப்படுத்தலாம்.

மேற்கத்தியர்கள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குகின்றனர்- அஹ்மத் நஜாத்!

Amadinejad
ஐ.நா:மேற்கத்திய நாடுகள் சர்வதேச அளவில் அணு ஆயுத பீதியை உருவாக்குவதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறினார். ஆயுதக் கடத்தல், பேரழிவு ஆயுதங்களின் பீதி ஆகியவற்றை பரப்புரைச் செய்வதே மேற்கத்திய நாடுகளின் முக்கிய பணி என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்துகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளை ஒரு பிடி பிடித்தார் நஜாத். நேற்று முன்தினம்(புதன் கிழமை) ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய முக்கிய நபர்களில் நஜாதும் ஒருவர் ஆவார்.

Thursday, September 27, 2012

அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவிலான பிரச்சாரம்!

PFI
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படும் அவதூறுப் பிரச்சாரங்களை அதன் தேசிய செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
அரசு மற்றும் போலீஸ்-உளவுத்துறை ஏஜன்சிகளைச் சார்ந்த சிலர் வகுப்புவாத சிந்தனையுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், இந்த பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் சில சுயநலவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதன் விளைவாகவே அவர்கள் இவ்வியக்கத்திற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

கூகுள் உயரதிகாரி இன்று கைது: YOU TUBE-ல் இருந்து வீடியோவை நீக்காததால்!


கூகுள் நிறுவன பிரேசில் நாட்டு கிளையின் அதி உயர் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோவை YouTube-ல் இருந்து நீக்காததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமை அவதூறு செய்து எடுக்கப்பட்டுள்ள அமெரிக்க திரைப்படத்தின் ட்ரெயிலரை தடை செய்துள்ள பிரேசில் நாட்டு கோர்ட், அந்தப் படத்தின் ட்ரெயிலரை அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என YouTubeக்கு நேற்று ஆர்டர் போட்டது. பிரேசில் நாட்டின் சாவோ போலோ நகரில் உள்ள மாநில நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது.

இரண்டு ரியால்கள் மட்டுமே வரதட்சணை பெற்று சவூதி பெண் புரட்சி !

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள் கல்யாணச் சந்தையில் விலைபோகாமல் வரதட்சணை என்பது இந்நாடுகளில் பெரும் சமுதாயத் தீமையாக உள்ளது.

சவுதி துபாய் பக்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இதற்கு மாற்றமாக மணப்பெண்ணுக்கு மணமகன் தட்சணை கொடுக்க வேண்டியுள்ளது. மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படவேண்டிய இந்த தட்சணை  (மணக்கொடை)  அரபு மொழியில் மஹர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம் ?


ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ  ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது. இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும்,  அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரிடம்  இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக்  கருத்தப்படுவதால் இன்றும் நடைமுறையில் உள்ளது.

ரகசிய சட்டம் (Official Secrets Act - 1923) என்ன சொல்கிறதென்றால், "இந்தியாவின் எதிரி நாட்டுக்கு உதவும் வகையில்,  பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அணுகுவது, ஆய்வு செய்வது, அப்பகுதி வழியாக ஊடுறுவுதல் ஆகியவையும் அவை  தொடர்பான வரைபடம், மாதிரிகள் மற்றும் ரகசிய குறியீடுகளை எதிரிநாட்டு உளவாளிகளுடன் பகிர்ந்து கொள்வது  ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்தியாவின் இறையான்மைக்கும் தேசிய ஒருமைப்பாடுக்கும்,உள்நாட்டு  பாதுகாப்புக்கு அல்லது அண்டை நாடுடனான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த  இந்த சட்டப்பிரிவின்படி தண்டிக்க முடியும்.

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!


Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.
புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.
1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் 1300 சில்லறை சிறிய வியாபார கடைகளை பூட்டவைக்கும்!

One Walmart supermarket can displace over 1300 Indian small retail stores
புதுடெல்லி:சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீடு இந்தியாவின் சமூக வாழ்க்கையில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் மட்டுமே 1300 சிறிய சில்லரை வியாபார கடைகளை பூட்டவைத்து விடும் என்று பிரபல பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ஒரு சூப்பர் மார்க்கெட் காரணமாக 3900 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால் 10 கோடி மக்கள் மரணம் அடைவார்கள் 20 நாடுகள் கூட்டு அறிக்கை!

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால், 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் மரணம் அடைவார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

20 வளரும் நாடுகள் இணைந்த ஒரு கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் காரணமாக, உலக சராசரி வெப்பநிலை உயர்கிறது. இதனால், பனிமலைகள் உருகுதல், மிதமிஞ்சிய சீதோஷ்ணநிலை, வறட்சி, கடல் நீர்மட்டம் உயருதல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்.

ஐ.நா பொது அவையில் ஒபாமாவின் உரைக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு!

Muslim leaders oppose Obama's UN speech
ஐ.நா:கருத்து சுதந்திரத்தின் பெயரால் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை ஆதரிக்கும் வகையில் ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவிற்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கருத்து சுதந்திரத்தின் பெயரால் ஒபாமா, மோசமான திரைப்படத்தை நியாயப்படுத்த முயன்றபொழுது முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும் மத அவமதிப்புகளை தடைச் செய்ய சர்வதேச அளவில் சட்டமியற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tuesday, September 25, 2012

பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்!


இராமநாதபுரம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக செப்டம்பர் 24 (24.09.2012) அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் Dr.பாலசுப்புரமனியன் அவர்கள் தலைமை தாங்கினார்.
 Dr.N. கருப்புசாமி MS(இரத்த வங்கி அலுவலர்,இராமநாதபுரம்) , Dr.A.நிலோஃபர் நிஸா MBBS(மருத்துவர், பெரியப்பட்டினம்) , K.கதிரேசன்(சுகாதார ஆய்வாளர்,பெரியப்பட்டினம்),  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுர மாவட்ட இரத்த தான பொறுப்பாளர் சகோ.நஜிம் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைவர் முகம்மது சலீம் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயள்லர் அசன் அலி , SDPI கட்சியின் பெரியப்பட்டினம் நகர செயலாளர் சேகுஇபுராகிம் மற்றும் SDPI கட்சியின் தொகுதி தலைவர் பைரோஸ்கான் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஐஸ், டீ குடித்தால் சிறுநீரக கல் உருவாகும்: அமெரிக்க பேராசிரியர் தகவல்!

Add caption
 தெம்பு தரும் குளிர்பானம் தானே... என்று ஐஸ், டீயை தொடர்ந்து விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்...? உங்கள் தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.சிறுநீரகங்களில் சாதாரண கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான, மோசமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் ரோமிங்க் கட்டணம் ரத்து! மத்திய அரசு திட்டம்!


அடுத்த ஆண்டில் இருந்து, வெளி மாநிலங்களில் போனை பயன்படுத்தினாலும், ரோமிங் கட்டணம் கிடையாது. இந்தியா முழுவதிலும் ரோமிங் கட்டணம் இல்லாமல் போனில் பேச முடியும். மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது, இந்தியாவில் பல மாநிலங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் மாநில எல்லையை கடக்கும் போது, செல்போன் பயன்படுத்தினால் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தொழில், படிப்பு என்ற பல்வேறு காரணங்களுக்காக, பல மாநிலங்களுக்கு செல்பவர்கள், அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை !

தமீம் அன்சாரி
சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி,  ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர்.  இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.  மேலும் ஊடகங்களும் தன் பங்கிற்கு பல கதைகளை புனைந்து தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.   இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை மேற்கொண்டு தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறியும் குழுவினர் வெளியிட்ட அறிக்கை:
சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!

Iran to block Google, Gmail over 'Innocence of Muslims'
டெஹ்ரான்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.
கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது.

Monday, September 24, 2012

பார்வையற்றோருக்கு வரப்பிரசாதம் : செயற்கை கண்கள் கண்டுபிடிப்பு!


கண் பார்வை  வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்பட்டோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்கவில்லை.
 
இந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ஸ் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க். பிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் என்கோடர் மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டி `சர்' என இரு பகுதிகளை கொண்டது.

சகிப்புத் தன்மையில்லா முஸ்லிம்கள் !

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ,இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருவது நியாயமா?

கருத்துச் சுதந்திரம் எதுவரை? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம்.

இந்தியாவில் சமீப காலமாக , ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக் எதையும் செய்யலாம் எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு
 எதிராகப் பரப்பப் படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் "கருத்துச் சுதந்திரம் போச்சே" எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

மின்வெட்டு: புதிய நிபந்தனைகள்!


தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மின்சாரம் பயன்படுத்துவது தொடர்பாக ஹை-என்ட் பாவனையாளர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நட்சத்திர ஹோட்டல்களில், மாலை 6 மணிக்கு மேல் ஜெனரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம் விதித்துள்ளது. 
அத்துடன், ஏ.சி.யின் வெப்ப நிலையை ஒரே சீராக 26 டிகிரியில் நிலை நிறுத்தி, மின்சாரத்தை  சேமிக்க வேண்டும் என்றும், மி்ன உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

இறைத்தூதருக்கு அவமதிப்பு: அமெரிக்காவில் கண்டனப் பேரணி!

Muslim's Rallies Against Anti-Islam Sentiment In Los Angeles
வாஷிங்டன்:இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப் படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அமெரிக்க முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரணிக்கு ஏற்பாடுச் செய்தது.
மதங்களை நிந்திப்பதை அங்கீகரிக்க இயலாது என்றும், அன்பும், அமைதியும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

மக்கள் விரோத கொள்கைகளை பிரதமர் வெட்கமில்லாமல் நியாயப்படுத்துகிறார்: இ.அபூபக்கர்!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:மக்கள் விரோத கொள்கை முடிவுகளை வெட்கமில்லாமல் பிரதமர் மன்மோகன்சிங் நியாயப்படுத்துவதாகவும், நொறுங்கிப் போன நம்பிக்கையை மீட்டெடுக்க அவர் முயல்வதாகவும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) தேசிய தலைவர் இ.அபூபக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:
“டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு(FDI) ஆகியவற்றை நியாயப்படுத்த வீணான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் மன்மோகன்சிங்.

Sunday, September 23, 2012

சுறுசுறுப்பாய் செயல்பட மருத்துவ குறிப்புகள்


சுறுசுறுப்பாய் செயல்பட வேண்டுமா? நின்றாய் சாப்பிடுங்க நறைய தண்ணீர் குடிங்க! நீங்கள் விரைவில் சோர்வு அடைகிறீர்களா? உங்களால் எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாமல் சலிப்பு தோன்றுகிறதா? இதற்கு காரணம் உணவு முறை மற்றும் சில பழக்க வழக்கங்கள் தான். இதோ உங்களுக்காகவே சில டிப்ஸ்:  
* தினசரி உணவில் தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்துள்ள தானியங்கள் உடலுக்கு சக்தி அளித்து, மன அழுத்தத்தை போக்குகிறது.

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு: பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு!

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன. 

பாகிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சினமா படம் தயாரித்த அமெரிக்கர் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி குலாம்அகமது பிலோர் ரூ.55 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார். பெஷாவரில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

இண்டலிஜன்ஸ் தீவிரவாத அறிக்கைகளின் பின்னணியில் ஹிந்துத்துவா ப்யூரோக்ரேட்ஸ்!

இண்டலிஜன்ஸ் தீவிரவாத அறிக்கைகளின் பின்னணியில் ஹிந்துத்துவா ப்யூரோக்ரேட்ஸ்!
கோழிக்கோடு:முஸ்லிம் இயக்கங்களின் மீது தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாடும் இண்டலிஜன்ஸ் அறிக்கைகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளான ப்யூரோக்ரேட்ஸ் (ஆட்சி, அதிகார மட்டங்களில் பணியாற்றியோர்) இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமை வகிக்கும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசனின் பணியாற்றும் முன்னாள் பீரோக்ரேட்டுகள் தாம் முஸ்லிம்களுக்கு எதிரான இண்டலிஜன்ஸ் மற்றும் அரசு நடவடிக்கைகளின் பின்னணியில் செயல்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இரயில் மறியல்!

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இரயில் மறியல்!
சென்னை டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும், மேலும் கூடங்குளம் அணுஉலையில் எரி பொருள் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும்  நேற்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  திருநெல்வேலியில் நடந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.

Saturday, September 22, 2012

கீழக்கரையில் மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற SDPI கட்சியினர் உட்பட பொதுமக்கள் 21 பேர் மீது வழக்கு பதிவு!

கீழக்கரை, : கீழக்கரையில், மின்வெட்டை கண்டித்து இரவில் போராட்டம் நடத்த மெழுகுவர்த்தியுடன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன் அனுமதியின்றி சாலையில் கூடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கீழக்கரை நகரில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் வழக்கமாக மின்சப்ளை நிறுத்தப்படும் தற்போது எந்த அறிவிப்பும் செய்யாமல் இரவு 8 மணி முதல் 9 மணி வரையும், 11 முதல் 12 மணி வரையும், நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரையும், அதிகாலை 4 முதல் 6 மணி வரையும், 7 முதல் 8 மணி வரையும் மொத்தம் 14 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது.

உயிருக்கு உலை வைக்கும் கலர் பொடி கலந்த உணவுகள்


உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் கலர் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த கலர் கெமிக்கல்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
 
இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கலர் கெமிக்கல்களால் கேன்சர், ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி, நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி, மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்கிறார் சென்னையின் பிரபல  டாக்டர் திருத்தணிகாசலம்.

பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு: ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் நோட்டீஸ்!

press council of india
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தைக் குறித்து அவதூறான செய்தியை வெளியிட்ட ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அளித்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்தும் தவறான எண்ணத்துடன் அவதூறானச் செய்திகளை வெளியிட்ட 11 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஊடக கட்டுப்பாட்டு குழுவான ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு கே.எம்.ஷெரீஃப் புகாரை அளித்தார். முன்னர் இந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சானல்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், முறையாக அவை பதிலளிக்கவில்லை.

அஸ்ஸாமில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகள்

குவாஹாத்தி: அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான சீராங் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட நிவாரணப்பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா நேற்று (19.09.2012) அன்று துவக்கி வைத்தார். புதுடெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனத்தோடு இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அஸ்ஸாமில் பல்வேறு நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

லண்டனில் 6000 விசா ஸ்டிக்கர்களுடன் இந்திய தூதரக பைகள் திருட்டு


லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இந்திய தூதரகத்தின் பைகள், ஆல்ட்விச்சில் உள்ள இந்திய தூதரதகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தூதரகத்திற்கு சென்றதும் அவற்றை இறக்கி சரிபார்த்தபோது 4 பைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதில் 3 பைகளில் 6000 விசா ஸ்டிக்கர்கள் இருந்தன. ஒரு பையில் எழுதுபொருட்கள் இருந்தன.
 
இத்தகவலை கடந்த 3ம் தேதி தூதரக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டார். அன்றைய தினம் மொத்தம் 27 பைகள் தூதரகத்திற்கு வந்து சேர்ந்தன. அதில் 25 பைகளில் 50 ஆயிரம் விசா ஸ்டிக்கர்கள் இருந்தன.

சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வருடாந்திர கூட்டத்தில் ஈரான்-இஸ்ரேல் மோதல்!

Iran, Israel clash at IAEA meeting
ஜெனீவா:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின்(ஐ.ஏ.இ.ஏ) வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் – இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கு இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்காசியாவில் அணு ஆயுதத்தை தடைச்செய்ய சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்(என்.பி.டி) இஸ்ரேல் கையெழுத்திட வேண்டும் என்று ஈரான் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானி வலியுறுத்தினார். சுல்தானியின் கோரிக்கை இஸ்ரேல் பிரதிநிதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
சுல்தானி மேலும் கூறுகையில்: “மேற்காசியா பிராந்தியத்தில் என்.பி.டியில் கையெழுத்திடாத ஒரே நாடு இஸ்ரேல் ஆகும். பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள இஸ்ரேல் எழுப்பும் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவராமல் அமைதியும், பாதுகாப்பும் ஏற்படாது” என்று சுல்தானி தெரிவித்தார்.

ராமநாதபுரம்:மஸ்ஜித் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! பதட்டம்!

பெட்ரோல் குண்டு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் அப்துல் காதிர் ஆலிம் மஸ்ஜித் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாசிச கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டது. இதில் மஸ்ஜித் சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் பகுதியில் அப்துல் காதர் ஆலிம் பள்ளிவாசல் உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை அதிகாலையில்  மர்மக் கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தலைமறைவாகி விட்டது. இதில், பள்ளிவாசலின் முன்புறத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

Wednesday, September 19, 2012

இனவெறி!, இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறி!

ISLAMOPHOBIA
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்
தினமலர் வரை கேலி சித்திரங்களும், தகாத தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உச்சகட்டமாக இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக
விமர்சிக்கும் ‘innocence of Muslims’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில்
தர ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபியை அவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்...?

சமீபத்தில் இஸ்லாத்தின் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி ஒருவன் திரைப்படம் தயாரித்த விவகாரத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அரசாங்கமோ இது தொடர்பாக கூறும்போது "எங்களது நாட்டில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது.

 யார் வேண்டுமானாலும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடலாம். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் எனவே இது தொடர்பாக அமெரிக்க அரசு தலையிடாது எனவும் அவ்வாறு திரைப்படம் தயாரித்தவனை தண்டிக்கவியலாது" எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள அதே சமயம் உலகில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை மன்னிக்க மாட்டோம் எனவும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து தண்டிப்போம் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

நீரிழிவு மற்றும் புற்றுநோய் பற்றிய சிறப்பு மருத்துவ கட்டுரை!


ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமான நோய்கள் திடீர் திடீரென தாக்குகிறது. அதற்கு சரியான சிகிச்சை அளிக்கா விட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக திடீர் திடீரென வைரஸ் நோய்கள் நாடெங்கும் பரவி நம்மை பதற வைத்து விடுகின்றன. குறிப்பாக சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற அதிபயங்கர வைரஸ் காய்ச்சல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
இந்த வைரஸ் நோய் தாக்கிய பலர் உயிர் இழந்ததால் உலகம் முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சல் பரவும் தன்மை கொண்டதால் தங்களை காய்ச்சல் தாக்கி விடுமோ என்று எண்ணி முக கவசம் போட்டுக் கொண்டவர்கள் ஏராளம். இந்த கவசம் அணிந்தால் வைரஸ் தாக்காதா? நிச்சயம் தாக்கும். முக கவச துணியில் ஊடுருவும் அளவுக்கு மிகவும் சிறிய அளவுடையது தான் வைரஸ்கள்.

நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றத்தை அணுகுவோம் – நீதிபதி ராஜேந்திர சச்சார்!

Former Delhi High Court judge Rajinder Sachar
புதுடெல்லி:போலீசும், அரசும் தீவிரவாதிகளாக சித்தரித்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவோம் என்று நீதிபதி ராஜேந்திர சச்சார் கூறியுள்ளார். ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார் சச்சார்.
பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நிகழ்ந்து நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன்
அவர் தனது உரையில் கூறியது: “பா.ஜ.க ஆளும் கர்நாடகா மாநிலத்திலும், காங்கிரஸ் ஆளும் டெல்லியிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு கூட அவமானத்தை ஏற்படுத்திய தேசத்துரோக சட்டங்களை அரசு தீவிரமாக பிரயோகித்து வருகிறது” என்று சச்சார் கூறினார்.

இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!

சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!
சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனால் அமெரிக்க துணை தூதரகம்  3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது.  மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tuesday, September 18, 2012

அமெரிக்க அரசை கண்டித்து இராமநாதபுரத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம்!

 இறைவனின் இறுதி தூதர் நபி(ஸல்) அவர்களைஅவதூறாக சித்தரித்து சினிமா தயாரித்தது தொடர்பாக அமெரிக்க அரசை கண்டித்து கீழக் கரை, ஏர்வாடி, பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முகமது நபியை அவதூறாக சித்தரித்து அமெரிக்காவில் தயாரான சினிமாவின் 14 நிமிட முன்னோட்ட காட்சி ஜூலை மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்க அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரான் தயாரித்துள்ள நவீன தொழில்நுட்ப ட்ரோன்!


         டெஹ்ரான்:  

24 மணிநேரமும் நிற்காமல் பறக்கும் திறன் கொண்ட நவீன தொழில்நுட்ப ட்ரோன்(ஆளில்லா விமானம்) தயாரிப்பு வெற்றிக்கரமாக பூர்த்தியானதாக ஈரான் அறிவித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன், ராணுவத்தினரை சுமந்து செல்லவும், நீண்ட தூர தாக்குதல்களை நடத்தவும் திறன் படைத்தது என்று ஈரான் ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் முஹம்மது அலி ஜஃப்ரி கூறியுள்ளார். 

Dua For Gaza