Sunday, February 19, 2012

குழந்தைகளின் டாப்லெட் மோகம்!

குழந்தைகளின் டாப்லெட் மோகம்!
விரும்பிய விளையாட்டு சாதனங்களை வாங்கி தர பெற்றோரிடம் அடம்பிடிக்கும் குழந்தைகளின் காலம் மலையேற துவங்கிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் விளையாட்டுப் பொருட்கள் என்பது பழைய நினைவுகளாக மாறிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பெண் குழந்தைகள் என்றால் பொம்மைகள் மீதும், ஆண் குழந்தைகள் பந்துகள் மற்றும் வாகனங்கள் மீதும் தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்துவர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் நமது விருப்பங்களும் மாறுகிறது அல்லவா?

புதிய தலைமுறையின் விருப்பமும் சற்று வித்தியாசமானதுதான். பொம்மைகள், பந்துகளுக்கு பதிலாக டாப்லெட் கம்ப்யூட்டர்கள் தாம் பிஞ்ச் உள்ளங்களில் தற்பொழுது ஆதிக்கம் செலுத்துகிறதாம். ஆய்வு மையமான நீல்சன் நடத்திய சர்வேயில் 70 சதவீத குழந்தைகளும் டாப்லெட்டுகளை உபயோகிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த முறை நடத்திய சர்வேக்கு மாற்றமாக தற்பொழுது 7 சதவீதம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும்பாலான குழந்தைகள் கேம் விளையாடுவதற்காக டாப்லெட்டுகளை உபயோகிக்கின்றன. அதேவேளையில் கல்விக்காக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 57 சதவீதமாகும். 43 சதவீதம் பேர் டி.வி, சினிமா ஆகியவற்றை பார்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக சர்வே கூறுகிறது.

டாப்லெட்டுகள் எல்லாம் வசதியான குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கே சாத்தியம். டாய்லெட் வசதிகள் கூட இல்லாமல் 60 சதவீதம் பேர் வெளிப்புறங்களை பயன்படுத்தும் இந்தியாவில் ஏழை குடும்பங்களால் டாப்லெட்டுகளை குறித்து யோசிக்க முடியுமா?

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza