Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Saturday, May 10, 2014

மதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி-ஸ்டாலின்


Saturday, August 24, 2013

அஸ்மா பெல்தாகிக்கு தந்தை எழுதிய கடிதம் : துருக்கி பிரதமர் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார்


எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரி அமைதியான போராட்டம் நடந்துகொண்டிருந்த போது சர்வாதிகார ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தையும், இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் பொதுச் செயலாளருமான முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார்.தனியார் தொலைக்காட்சி சானலின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட எர்துகானிடம், அஸ்மாவுக்கு அவரது தந்தை எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது.கடிதத்தை படிப்பதை கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்துகான், பின்னர் கண்ணீரை துடைத்துவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார்.


முஹம்மது பெல்தாகி, தனது அஸ்மாவுக்கு எழுதிய கடிதம்:

நேசத்துக்குரிய என்னருமை மகளே!

எனக்கே ஆசானாக மாறிய ஷஹீதா அஸ்மா பல்தாஜியே!

நான் உனக்கு பிரியாவிடை வாழ்த்து சொல்ல வரவில்லை. நாளை நாம் சந்திப்போம் என்று சொல்லத்தான் வந்தேன்.
நீ அநியாயத்திற்கெதிராக தலைநிமிர்ந்து வாழ்ந்தாய். அதன் அனைத்து விலங்குகளையும் நிராகரித்தாய். எல்லையற்ற சுதந்திரத்தை காதலித்தாய்.

Wednesday, June 12, 2013

மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அதன் மக்களை உளவு பார்க்கும் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன் இப்போது ஹாங்காங்கில் புகலிடம் தேடியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய, ஈவு இரக்கமற்ற உளவு அமைப்பிற்கு எதிராக தனது குரலை எழுப்பத் துணிந்த அவரிடம்  கிளென் கிரீன்வால்டும் ஏவன் மெக்ஆஸ்கில்லும் எடுத்த பேட்டி இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் வெளியாகியிருக்கிறது.

Dua For Gaza