Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, June 20, 2014

பாஜக அரசு இரயில் கட்டணத்தை உயர்த்தியது மக்கள் விரோத செயல்! எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கூறியதாவது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் பெரிதும் உபயோகிக்கும் இரயிலின் பயணக் கட்டணத்தை 14.2 சதவீதம் அளவிற்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மேலும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  

Sunday, June 1, 2014

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 

Saturday, May 31, 2014

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

Saturday, May 10, 2014

மதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி-ஸ்டாலின்


Monday, April 28, 2014

நாட்டை ஆள பரந்த மனமே தேவை! – மோடிக்கு பிரியங்கா பதிலடி!

“நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகப் பெரிய மனமே தேவை. 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

Thursday, December 26, 2013

இளம்பெண்ணை கர்நாடகாவிலும் குஜராத் போலீஸ் கண்காணித்தது! – குலைல் டாட் காம்


spy

புதுடெல்லி: பெங்களூரைச் சார்ந்த கட்டிட கலை வல்லுநரான இளம்பெண்ணை குஜராத்தில் மட்டுமல்ல; கர்நாடகாவிலும் மோடியின் போலீஸ் கண்காணித்தது என்று குலைல் டாட் காம் இணையதளம் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்கால கணவர், உறவினர்கள், பெற்றோர் ஆகியோர் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கியதை தொடர்ந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் நோக்கம் இளம்பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து அறியும் ஆவலே என்பது தெரிய வந்துள்ளது.

Friday, November 22, 2013

கண்காணிப்பு விவகாரம்: சிக்கலில் பா.ஜ.க!



புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையிலும், நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள சூழலிலும் குஜராத் முதல்வரும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ரகசியமாக உயர் அதிகாரிகள், தனிநபர்களை கண்காணித்த விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் பா.ஜ.க தவித்து வருகிறது.
சாஹிபிற்காக(மோடி) உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, பெங்களூரைச் சார்ந்த ஆர்க்டிக்டான இளம்பெண்ணையும், குஜராத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்த செய்தியை இணையதள நியூஸ் போர்டல்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன வெளியிட்டது பா.ஜ.கவிற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.11.2013) திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் அனைவரையும் வரவேற்றார். 

மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமிர் ஹம்சா, ரத்தினம், அப்துல் சத்தார், அபுதாகிர், செய்யது அலி, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Sunday, November 10, 2013

சாதிக் ஜமால் போலி என்கவுன்ட்டர் வழக்கு: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் சாந்துவிடம் சிபிஐ விசாரணை!



குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சாதிக் ஜமால் வழக்கில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்துவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சாதிக் ஜமால் என்பவர் போலீசாரால் தீவிரவாதி எனக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஐ.பியில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் நேச்சல் சாந்து. தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

Wednesday, October 2, 2013

கிரிமினல்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் பயம்! மோடி சிக்கவைக்கப்படுவதாக ஜெட்லி பிரதமருக்கு கடிதம்!



கிரிமினல் அரசியல்வாதிகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ மூலம் குஜராத் முதலமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளரிமான நரேந்திர மோடி குறிவைக்கப்படுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Tuesday, September 17, 2013

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது நாட்டிற்கே அவமானம்!: எஸ்.டி.பி.ஐ.


asayeed_sdpi2

புதுடெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது நாட்டிற்கே அவமானமும், தலைகுனிவும் ஆகும் என்று எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் ஏ. சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
“மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத், வல்லபாய் படேல், இன்னும் எண்ணற்ற சுதந்திரப் போராளிகள் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்த தேசத்தை மீட்டெடுத்தனர். அப்படிப்பட்ட நாட்டில் நரேந்திர மோடி போன்றோர் பிரதமர் ஆனால் தேசத்திற்கு அவமானமும், தலைகுனிவும், கண்ணியக் குறைவுமே ஏற்படும். ஏனெனில், வகுப்புவாத அரசியலை தங்கள் வாழ்க்கை வழியாகக் கொள்பவர்களுக்கு மோடி ஓர் உதாரணப் புருஷன்.

Thursday, September 12, 2013

உ.பி கலவரத்தில் அரசியல் சதி: ஷிண்டே!


muzafar nagar riots2

புதுடெல்லி:உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே சூசகமாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் முஸாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Monday, July 22, 2013

குஜராத்தில் குறைந்துபோன மக்களின் வாங்கும் சக்தி! - அம்பலமாகும் மோடியின் மோசடி!

டெல்லி: குஜராத் மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் செலவிடும் சக்தி குறைந்து போயுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் அனைத்து மாநில கிராமப் புற மற்றும் நகர்ப் புற மக்களின் செலவிடும் சக்தி தொடர்பாக நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசன் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.

1999-2000ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக மோடியால் மோசடியாக கூறப்படும் குஜராத் பின் தங்கியே இருக்கிறது. தேசிய அளவிலான தனிநபர் நுகர்வு செலவு சதவீதத்தை விட மிகக் குறைவாகவே குஜராத்தின் தனிநபர் நுகர்வு செலவு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநிலம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

Tuesday, June 25, 2013

வட சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய இலவச மருத்துவ முகாம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



எஸ்.டி.பி.ஐ கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் சார்பாக கொளத்தூர் தொகுதி ஆர்.கே மஹாலில் இலவச மருத்துவ முகாம் நேற்று (23.06.2013)நடைபெற்றது.


இம்முகாமிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொளத்தூர் தொகுதி தலைவர் கராத்தே யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் இம்ரான் அஹமது பெய்க் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

குஜராத் கலவர சம்பவங்களை முஸ்லிம்கள் மறக்கவேண்டும்- ராஜ்நாத்சிங்கின் பேச்சுக்கு அதே மேடையில் பதிலடி

 குஜராத்தில் கோத்ரா ரெயில் விபத்தைத் தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்திய வரலாறு காணாத அளவுக்கு நடத்திய கோரமான முஸ்லிம் இனப்படுகொலை சம்பவங்களை முஸ்லிம்கள் மறந்துவிடவேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியபோது, அதே மேடையில் வீற்றிருந்த ராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையர் பதில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘சிறுபான்மையினருக்கு எதிரான சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:–

Sunday, June 23, 2013

குஜராத் கலவரங்களை மறக்க கூடாதா? முஸ்லீம்களை கேட்கும் ராஜ்நாத் சிங்!

ஜெய்பூர் : முஸ்லீம் சமுதாயம் தம் மேல் நிகழ்த்தப்பட்ட குஜராத் கலவரங்களை மறக்க கூடாதா என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெய்பூரில் “சிறுபான்மையினர் பிரச்னைகள்” எனும் தலைப்பில் ஒரு செய்தி சானல் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முஸ்லீம்களுக்கு எதிராக சில சம்பவங்கள் நடந்திருப்பதை ஒத்து கொள்வதாகவும் ஏன் நாம் அதை மறக்க முயற்சிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். மேலும் 2002 க்கு முன்பு 12,000 மத கலவரங்களில் இந்தியாவில் நடைபெற்றுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்

Tuesday, June 18, 2013

வகுப்புவாத உணர்வை தூண்டி வாக்கு வங்கியை திரட்ட அயோத்திக்கு செல்லும் மோடி!


1849506

அயோத்தி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அயோத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தல் வரவிருக்கும் வேளையில் சமூகங்களிடையே பிளவை உருவாக்கி ஆதாயம் தேடும் நோக்கில் மோடி பா.ஜ.கவின் பிரச்சாரக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அயோத்திக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Sunday, June 16, 2013

சட்டவிரோத சுரங்கத்தொழில்: குஜராத் பா.ஜ.க அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை!

குஜராத்தில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல் வெட்டியெடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் மாநில அமைச்சர் பாபு பொக்கிரியா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் நீர்வளத் துறை அமைச்சர் பாபு பொக்கிரியா, காங்கிரஸ் எம்.பி. பரத் ஓடேதாரா, நிழல் உலக தாதா பீமா துலா, அவரது மகன் லட்சுமண் துலா ஆகியோர் சட்டவிரோதமாக சுண்ணாம்புக் கல்லை வெட்டியெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

Wednesday, March 23, 2011

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக  அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிதுவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகிவருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன. இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக ஆறு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அரசியலில்  நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிகல் முன்னேற ஆவன செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும் மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்று அறிவித்திருக்கிறது. இதே பொன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கினைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது. இனிமேல் அவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான்  புத்திசாலித்தனமாக இருக்கும். நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.
முஸ்லீம் லீக் – பல வருடங்கலாக அரசியலில் கூட்டனிவைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திர்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலைகும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில் நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெறும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திறகாக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுழையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது  என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக விற்கு துணைபுரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு  இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது.அதாவது திமுக வை தோறகடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக. எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குழைக்கும் விதமாக அமைந்துவிட்டது.
அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொறுந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும். இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையால்வோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டனி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகாம இருக்குமோ என்றும் கூறத்தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது.  அந்த அதிகாரம் பெற  என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்ககலை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை.ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான்  இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.
SDPI – இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே. தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட  வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட  வேண்டும்  அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு  ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.
இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வ்ட்டாரங்களிலும் சரி புது விதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவன செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலவாய்ப்பு, பொருளாதரத முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது. அத்தோடு தங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.
அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது.. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக ப்லமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.
கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின்  அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர்(நெல்லை மாவட்டம்),  பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும்  SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும்  சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.
இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி  தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….

Sunday, February 27, 2011

அரசியல் தொழில் அல்ல, சேவை - ஜவாஹிருல்லாஹ்

அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யப்படும் சேவை என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அந்தக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் 25.01.2011 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மனித நேய மக்கள் கட்சியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவி்த்தார்.

தங்களது கூட்டணியில் தேமுதிக இணைவது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்தார்.
செய்தி:இந்நேரம்  

Dua For Gaza