Friday, February 10, 2012

இந்தியா – ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கு அழுத்தம்

india europe union
பிரஸ்ஸல்ஸ்:புதுடெல்லியில் நடக்கப் போகும் ஐரோப்பிய யூனியன் – இந்தியாவிற்கு இடையிலான strategic (மூலோபாய) கூட்டுறவிற்கான உச்சி மாநாடு நடக்கும் பொழுது ஐரோப்பிய கவுன்சில் மற்றும் கமிஷன்களின் தலைவர்கள் இந்தியாவுடனான பேச்சு வார்த்தைகளில் மனித உரிமைகள் பற்றிய பேச்சிற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) கூறியுள்ளது.

பிப்ரவரி 3ஆம் தேதியிட்ட கடிதத்தில் மனித உரிமை தொடர்பான பரிந்துரைகளை ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பிக்கும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவல் பர்ரோசோ விற்கும் மனித உரிமை கண்காணிப்பகம் அனுப்பியுள்ளது.

“ஐரோப்பிய யூனியன் – இந்தியாவிற்கு இடையிலான strategic (மூலோபாய) கூட்டுறவு மனித உரிமைகளை மதிப்பதின் அடிப்படையில் இருக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய யூனியனின் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அட்வகசி டைரக்டர்  லோட்டே லெயிட்ஸ் கூறினார்.

“ஜனநாயக நாடு என்று தன்னைக் கூறும் இந்தியாவிற்கு அது மட்டும் போதாது. உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எப்படி ஐரோப்பிய யூனியனின் குரல் எழுப்புகின்றதோ அதே போல் இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் கட்டாயம் குரல் எழுப்பியே ஆக வேண்டும்.”

இந்தியாவில் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது என மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. அடுத்தடுத்து வரும் அரசுகள் சரியான திட்டங்களையும் சட்டங்களையும் ஏற்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களை குறிப்பாக தலித்துகள், ஆதிவாசிகள், மதச்சார்பான சிறுபான்மையினர்கள் (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்), பெண்கள், குழந்தைகள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

தொடர்ச்சியாக மிகவும் கொடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் பொழுது நடவடிக்கை எடுக்கத் தவறி வருகின்றது குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், சமூகத்திற்கு வன்முறைகளுக்கு எதிராகவும், பிரச்சனைக்குரிய(கஷ்மீர்) பகுதிகளில் காணாமல் போகும் நபர்கள் பற்றிய விசயத்திலும், சிறை மரணங்கள் விசயமாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் விசயத்திலும் இந்தியா மிகவும் மோசமான நிலையைக் கடைப்பிடித்து வருகின்றது என்று மனித உரிமை கண்காணிப்பகம் கூறியது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza