Tuesday, January 31, 2012

கூடங்குளம் போராட்டக்கா​ரர்கள் மீது இந்து முன்ன​ணி தீவிரவாதிக​ள் தாக்குதல் – ​10 பேர் கைது

kudankulam-nuclear-plant-295
திருநெல்வேலி:இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை முறியடிக்க ராமர் பாலம் என்ற பொய்யை பரப்பி அத்திட்டத்தை சீர்குலைத்தார்கள்.

டெல்லி:சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களிடம் போலீஸ் கொள்ளையடிப்பது 360 கோடி

280917-rickshaw-in-delhi
புதுடெல்லி:நெரிசல் மிகுந்த தாயகத்தின் தலைநகராம் டெல்லியில் குளிரையும், வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குறைந்த வாடகையில் பயணிகளை அவர்களின் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இரத்தத்தை வியர்வையாக மாற்றும் சைக்கிள் தொழிலாளிகளுக்கு வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சிரமம்தான்.

பிச்சைப் பாத்திரத்தில் உள்ள காசை தட்டிப்பறிப்பது போல லஞ்சபேர் வழிகளான போலீசாரின் தொல்லை இவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 360 கோடி ரூபாயை கையூட்டு போலீசார் ரிக்‌ஷா தொழிலாளர்களிடம் இருந்து கொள்ளையடிப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

பங்களாதேஷ்:ராணுவ புரட்சிக் குறித்து கிளம்பியுள்ள சந்தேகங்கள்

Bangladesh
டாக்கா:அவாமி லீக் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவினர் முயற்சித்தார்கள் என்ற செய்தியைக் குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரதமர் ஹஸீனா வாஜிதின் முக்கிய ஆலோசகரான கவுஸர் ரிஸ்வி என்பவர்தாம், வெளிநாட்டில் புகலிடம் தேடியுள்ள இஷ்ராக் அஹ்மதின் தலைமையில் 14 ராணுவ அதிகாரிகள் நடத்திய ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ராணுவம் முறியடித்தது குறித்த செய்தியை ஊடகங்களுக்கு அளித்தார்.

சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் லெஃப்.கர்னல் இஹ்ஸான் யூசுஃப், மேஜர் ஸாக்கிர் ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் ரிஸ்வி கூறினார்.

வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்களை பலப்பிரயோகம் மூலம் அகற்ற முயற்சி

wall street occupy

வாஷிங்டன்:பொருளாதார சமத்துவம் கோரியும், கார்ப்பரேட் குத்தகை காரர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திவரும் ‘வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ இயக்க எதிர்ப்பாளர்களை பலப்பிரயோகம் மூலம் அகற்ற அமெரிக்க போலீஸ் முடிவுச் செய்துள்ளது.

வாஷிங்டனில் போராட்டம் மையங்களாக கருதப்படும் மக்ஃபேர்ல்சன் சதுக்கம், ஃப்ரீடம் ப்ளாஸா ஆகிய இடங்களில் போராட்ட எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த போலீஸ் திட்டமிட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் எதிர்ப்பாளர்கள் இச்சட்டத்திற்கு கட்டுப்படமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

அத்னான் பட்ரவாலா கொலை வழக்கு: நான்கு பேர் விடுதலை

Adnan_patrawala

மும்பை:அத்னான் பட்ரவாலா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரை மும்பை நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. அத்னானின் கூட்டாளிகளான சுஜித் நாயர், அமித் கவுசல், ஆயுஷ் பட், ராஜீவ் தாரியா ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்பதை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வியை தழுவியதை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

அமெரிக்கா கொந்தளிப்பை உருவாக்குகிறது – வடகொரியா

வடகொரியா

ப்யோங்கியாங்:தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்தவிருக்கும் ராணுவ ஒத்திகை வடகொரியாவிற்கு விடுக்கப்படும் சவால் என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

கொரியா துணைக் கண்டத்தில் அமைதியான சூழலை சீர்குலைப்பதன் மூலம் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பை நடத்த அமெரிக்கா துணிகிறது என வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
பிப்ரவரி 27, மார்ச் 9 ஆகிய தினங்களில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையை நடத்துகின்றன. தென்கொரியாவின் 20 ஆயிரம் படை வீரர்களும், அமெரிக்காவின் 2,100 படை வீரர்களும் ராணுவ ஒத்திகையில் கலந்துக்கொள்வர்.

அமெரிக்கா-தாலிபான்: பேச்சுவார்த்தையில் பின்னடைவு

தோஹா:கத்தரில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையே துவங்கிய பேச்சுவார்த்தையின் முதல் தினத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை ஒப்படைப்பது, ஆஃப்கானில் போரை நிறுத்துவது போன்ற விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட போதிலும் கைதிகளை விடுதலை செய்யும் முன்பு ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை தாலிபான் நிராகரித்துவிட்டது.

மக்கள் நலப் பணியாளர்:தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு வாபஸ்

dsc

புதுடெல்லி:மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசு திங்கள்கிழமை வாபஸ் பெற்றது.

மக்கள் நலப் பணியாளர்களை நீக்கி தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்துசெய்து, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி தீர்ப்பளித்தது.

குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்

குடல்வால்
சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.

அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.

யெமன்:பட்டினியால் வாடும் 5 லட்சம் குழந்தைகள்

500000 Yemeni kids face death UNICEF

ஸன்ஆ:ஆயுதக் குழுக்களின் தாக்குதலும், அரசு எதிர்ப்பு போராட்டமும் தீவிரம் அடைந்துள்ள யெமன் நாட்டில் ஐந்து லட்சம் குழந்தைகள் மரணத்தின் வாசலில் உள்ளதாக குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு(யுனிசெஃப்) கூறியுள்ளது.

பட்டினி, ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவற்றின் மூலம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தளர்ந்துபோய் உள்ளதாக யுனிசெஃபின் பிராந்திய இயக்குநர் மரியா காலிவிஸ் ஸன்ஆவின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிரியாவில் போராட்டம் தீவிரம்: தலைநகரை மீட்டது ராணுவம்

A Syrian army tank burns in Rastan in an image taken from video on YouTube
டமாஸ்கஸ்:இரண்டு தினங்களாக தொடர்ந்த கடுமையான போராட்டத்திற்கு பிறகு ராணுவம், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் சுற்று வட்டார பகுதிகளை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்றியது.

சனிக்கிழமை துவங்கிய போராட்டத்தில் டமாஸ்கஸின் சில பகுதிகளை எதிர்ப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். ஆனால், நேற்று காலை கவச வாகனங்கள், டாங்குகளுடன் நுழைந்த ராணுவம் எதிர்ப்பாளர்களை விரட்டியடித்தது. தலைநகரில் கூடுதலான ராணுவ வீரர்களை களமிறக்கி டமாஸ்கஸின் கட்டுப்பாட்டை முழுமையாக தங்கள் வசம் ராணுவம் கொண்டுவந்தது. பின்னர் ராணுவம் வீடுகள் தோறும் ஏறி மக்களை கைது செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கையூட்டு செய்தி(paid news): கடும் நடவடிக்கை – ப்ரஸ் கவுன்சில் எச்சரிக்கை

paid news.
புதுடெல்லி:பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது(paid news) குறித்த புகார்களில் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்படும் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நரோடா பாட்டியா:இனப் படுகொலைகள் நடந்த பகுதிகளை நீதிபதி பார்வையிட்டார்

imagesCANUNBC2

அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என்ற நிலையில் நரோடா பாட்டியாவில் முஸ்லிம்களை இனப் படுகொலைச் செய்த பகுதிகளை இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டார்.

2002-ஆம் ஆண்டு முஸ்லிம்களை மோடி தலைமையிலான சங்க்பரிவார பயங்கரவாதிகளை கொன்று குவித்த வேளையில் மிகவும் கொடூரமான கூட்டுப் படுகொலைகள் நிகழ்ந்த பகுதிகளில் ஒன்றுதான் நரோடா பாட்டியா. 95 முஸ்லிம்கள் இங்கு கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர்.

ருஷ்டியின் நாவல் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது – கட்ஜு

கட்ஜு
புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற நாவல் மூலம் இஸ்லாம் மற்றும் நபிகளார் மீது தாக்குதல் நடத்தினார் என்றும், இது முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது என்றும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய நாவல் மூலம் ருஷ்டி மில்லியன் கணக்கில் டாலர்களை சம்பாதித்து இருக்கலாம். ஆனால், இந்நாவல் முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தியது. தனிநபர் கருத்து சுதந்திரம் என்பது பொது நலனுக்கு பொருத்தமாக இருக்கவேண்டும்.

ஈரான் எண்ணெய்: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

India defies sanctions, won't cut Iran oil imports
ஷிகாகோ:ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் தடை அமுலில் இருந்தாலும், ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை இந்தியா குறைக்காது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரணாப் இதனை தெரிவித்தார்.

ஜோர்டான் மன்னருடன் ஹமாஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை

Tamim bin Hamad, Khaled Mashaal, King Abdullah II
அம்மான்:ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அல் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ்வுடன் சந்திப்பை நடத்தினார்.

1999-ஆம் ஆண்டு மிஷ்அலை ஜோர்டானில் இருந்து வெளியேற்றிய பிறகு அவருடைய முதல் சுற்றுப் பயணமாகும் இது. காலித் மிஷ்அல் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஹமாஸ் குழுவினர் ஜோர்டான் சென்றுள்ளனர்.

Monday, January 30, 2012

தகுதியற்ற வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வேண்டும் – தலைமை தேர்தல் கமிஷனர்

sy qureshi
புதுடெல்லி:வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை குறித்து பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி தெரிவித்தார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலுவையில் இருக்கும் தேர்தல் சீர்திருத்தங்களை விரைந்து அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் தகுதியான வேட்பாளர்கள் போட்டியிடவில்லை எனில் அவர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தத் திட்டத்தை முழுமனதுடன் வரவேற்றுள்ள குரேஷி, இதனை பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

ராணுவ தளபதியின் பிறந்த தேதி: மத்திய அரசு உறுதி

vksingh
புது டெல்லி: ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்தம் செய்யுமாறு ராணுவ அலுவலகத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் ராணுவ தளபதியுடன் சமரசமாகச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும், பேச்சுவார்த்தைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன என்பதையும் மத்தியஅரசு பகிரங்கமாக உணர்த்தியுள்ளது. இது ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் ஊதியம், ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை துணை ராணுவ தளபதி (அட்ஜுனண்ட் ஜெனரல்) அலுவலகம் பராமரிக்கிறது. வீரர்களின் பணித் தகுதி, பதவி உயர்வு ஆகியவை தொடர்பான ஆவணங்களை ராணுவ செயலகப் பிரிவு பராமரிக்கிறது. இந்த இரண்டு அலுவலகங்களிலும் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் பிறந்த தேதியில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன.

ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ்:விஞ்ஞானிகள் கருத்தைக் கேட்க தயார் – மத்திய அரசு

narayan swamy
புதுடெல்லி:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வி. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறியது: சர்ச்சைக்குரிய ஆண்ட்ரிக்ஸ் – தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அரசுப் பணிகளில் நீடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள மாதவன் நாயர், பாஸ்கர நாராயணா, கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, கே.என்.சங்கரா ஆகிய விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்க மத்திய அரசு தயாராக உள்ளது. அவர்கள் மீதான தடை நீக்கப்படுமா என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. அவர்கள் தங்கள் நிலை என்ன என்பதை முதலில் கூறட்டும். விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு ஆர்வமாய் உள்ளது என்றார் நாராயணசாமி.

மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வி – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

Indian human rights disappointing HRW

நியூயார்க்:மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் கஸ்டடி மரணங்களும், போலீஸ் சித்திரவதைகளும் அதிகரித்துள்ளது. சிறுபான்மை மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது என்று மனித உரிமைகளைக் குறித்த 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

சங்க்பரிவாருக்கு விசுவாசமான அரசு அதிகாரிகள் முஸ்லிம்களின் உரிமைகளை தடுக்கிறார்கள் – ராகுல் காந்தி

Raghul gandhi
புதுடெல்லி:அரசு பணிகளில் ஊருடுவியுள்ள சங்க்பரிவார்கள் மீது விசுவாசமுள்ள அதிகாரிகள்தாம் இந்தியாவில் முஸ்லிம்களின் மோசமான நிலைக்கு காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அரசாங்கத்திலும், அரசு அதிகாரிகளின் கூட்டத்திலும் ஊடுருவியுள்ள சங்க்பரிவாருக்கு விசுவாசமான சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டிய உரிமைகளை தடுக்கின்றார்கள் என உருது பத்திரிகை ஆசிரியருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அளித்த நேர்முகத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

முஸ்லிம் இளைஞரின் கஸ்டடி மரணம்: போலீஸ் தாக்குதலே காரணம் – குடும்பத்தினர்

கஸ்டடி மரணம்
சாவக்காடு(கேரளா):கேரள மாநிலம் மண்ணத்தலா என்ற இடத்தில் திருவிழா தொடர்பான தகராறில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் வைத்து மரணமடைந்தார். அவரது பெயர் ஷாஹு(வயது 34).

மலேகான்:ஏ.டி.எஸ் அதிகாரிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை

NIA
புதுடெல்லி:35 பேர்கள் கொல்லப்பட்ட 2006 முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) அதிகாரிகளிடம் விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கில் ஏ.டி.எஸ்ஸின் பங்கு மற்றும் அவர்கள் விசாரணையைக் குறித்து மீளாய்வு செய்வதற்கு என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் ஒரு பகுதியாக மலேகானுக்கு சென்ற என்.ஐ.ஏ புலனாய்வு குழு முன்னர் இவ்வழக்கை விசாரித்த ஏ.டி.எஸ், சேகரித்த ஃபாரன்சிக் ஆதாரங்களை பரிசோதனைச் செய்தது. ஏ.டி.எஸ் அதிகாரிகளான துணை கமிஷனர் கெ.பி.ரகுவம்சி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுபோத் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய ஏ.டி.எஸ் புலனாய்வு குழு இவ்வழக்கை முன்பு விசாரித்தது.

ஹினா ரப்பானி தாலிபானுடன் பேச்சுவார்த்தை

Hina Rabbani
காபூல்:ஆஃப்கானில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு அடுத்து பாகிஸ்தானும் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பேச்சுவார்த்தை நடத்த ஹினா ரப்பானி புதன்கிழமை ஆஃப்கானிஸ்தானிற்கு செல்வார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட், பஞ்சாபில் இன்று சட்டப்பேரவை தேர்தல்

உத்தரகாண்ட், பஞ்சாபில் இன்று சட்டப்பேரவை தேர்தல்

புதுடெல்லி:உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தன. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது.

பஞ்சாபில் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1087 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு காங்கிரசும், சிரோமணி அகாலிதளம்-பா.ஜ.க கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அபுதாபி:EIFF நடத்திய இரத்ததான முகாம்

OLYMPUS DIGITAL CAMERA
அபுதாபி:இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் சமூக சேவை அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் அபுதாபி இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாமை நடத்தியது.

கடந்த ஜனவரி 27-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அபுதாபி காளிதியாவில் உள்ள இரத்த வங்கி அலுவலகத்தில் இரத்த தான முகாமை நடத்தியது. இம்முகாமில் 125 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

அமீர்கான்:சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை

Amir after his release from Rohtak jail
புதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பொய் குற்றச்சாட்டை சுமத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் டெல்லி போலீசாரால் அமீர்கான் பிடித்துச் செல்லப்பட்டார். மைமூனாபீ அமீர்கானின் தாயார் ஆவார். மூளையில் இரத்த நாளம் உடைந்து தளர்வாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்போம் என கருதவில்லை.

Sunday, January 29, 2012

தடைக்கு பதில் தடை: ஈரான்

A handout picture obtained from the Iranian president's office shows Iranian President Mahmoud Ahmadinejad
டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

ஆஃப்கான்:மார்ச் மாதம் பிரான்ஸ் ராணுவம் வாபஸ்

France's President Nicolas Sarkozy, front right, and Afghanistan's President Hamid Karzai, second from left, sign a friendship and cooperation treaty at the Elysee Palace in Paris
பாரிஸ்:பிரான்ஸ் நாட்டு ராணுவம் ஆஃப்கானிலிருந்து ஒருவருடம் முன்பே வாபஸ் பெறும் என அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் ராணுவம் இவ்வாண்டு மார்ச் மாதம் வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களை ஆஃப்கான் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பிரான்சுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தை விரைவில் வாபஸ் பெறுவது குறித்து பிரான்ஸ் ஆலோசித்து வந்தது.

சாக்லேட் சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வராது: ஆய்வாளர்கள் தகவல்

chocalate

தினசரி சொக்லேட் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோயின் தாக்கம் குறைவு என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் குறித்து ஸ்பெயின் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சொக்லேட்களில் கோகோ கலக்கப்படுகிறது.

மாதவன் நாயருக்கு ஆதரவாக சி.என்.ஆர் ராவ்

C.N.R. Rao
பெங்களூர்:இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மீதான நடவடிக்கைக்கு பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி.என்.ஆர்.ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்-பேண்ட் ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்டிரிக்ஸ் மற்றும் தனியார் நிறுவனமான தேவாஸ் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியா:அரபுலீக் கண்காணிப்புக் குழுவின் பணி நிறுத்தம்

Arab League Secretary General
டமாஸ்கஸ்:அரசு ஆதரவு ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வலுத்துள்ள சிரியாவில் பரிசோதனை நடத்திவரும் அரபுலீக்கின் கண்காணிப்புக் குழுவின் பணியை முடித்துக் கொண்டதாக அரபு லீக் அறிவித்துள்ளது. இத்தகவலை அரபுலீக்கின் பொதுச் செயலாளர் நபீல் அல் அரபி தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக் குழு சிரியாவில் தொடர்ந்து இருக்கும். ஆனால், பரிசோதனை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பெருவில் தீ விபத்து:26 பேர் பலி

பெருவில்தீ விபத்து 26 பேர் பலி
லிமா:பெரு நாட்டில் தனியார் மறுவாழ் வுமையத்தில் நடந்த தீ விபத்தில் 26 பேர் பலியாகினர். போதைப் பொருள்,மது ஆகியவற்றிற்கு அடிமையானவர்களுக்காக தலைநகரான லிமாவில் செயல்படும் க்ரைஸ்ட் ஈஸ்லவ் என்ற மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து நிகழ்ந்தது. நேற்று உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்தது. கடுமையாக காயமுற்ற ஆறுபேர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

த.மு.மு.க-ம.ம.க தலைவராக மெளலவி ஜே.எஸ்.ரிஃபாயி தேர்வு

ஜே.எஸ்.ரிஃபாயி
சென்னை:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக மெளலவி ஜே.எஸ்.ரிஃபாயி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னை தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் வைத்து நடைபெற்றன. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடைபெற்றது.

ஃபலஸ்தீன் வீடுகளை இடிப்பதை இஸ்ரேல் நிறுத்த ஐ.நா கோரிக்கை

ஐ.நா:ஃபலஸ்தீன் மேற்குகரையில் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் ஐ.நாவின் துயர்துடைப்பு தலைவர் மாக்ஸ் வெல் கேலார்ட் வலியுறுத்தியுள்ளார்.

இதுக் குறித்துஅவர் கூறியது: மேற்குகரையில் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும். ஃபலஸ்தீன் மக்களை நடுவழியில் நிறுத்தும் வகையில் இஸ்ரேலின் நடவடிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் ஃபலஸ்தீனர்களின் பாதுகாப்பையும், நலத்தையும் உறுதிச்செய்யும் பொறுப்பு இஸ்ரேலுக்கு உண்டு என மாக்ஸ் கூறினார்.

அமைதி பேச்சுவார்த்தையின் எதிர்காலம் :விரைவில் முடிவு – ஃபலஸ்தீன்

ரமல்லா:ஜோர்டான் மத்தியஸ்தம் வகித்த ஃபலஸ்தீன் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் குறித்து சில தினங்களில் முடிவு செய்யப்படும் என ஃபலஸ்தீன் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைக்காக ஃபலஸ்தீன் ஒப்புக்கொண்ட கால அவகாசம் கடந்த வியாழக்கிழமை முடிவுற்றது. பேச்சுவார்த்தை தோல்வியடையாமல் இருப்பதற்கான கடைசி கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகிய நான்கு மத்தியஸ்த குழுவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு

recruitment-show-tawdheef-2012
அபுதாபி:தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.

ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.

நெதர்லாந்தில் நிகாபிற்கு தடை

நெதர்லாந்தில் நிகாபிற்கு தடை
ஆம்ஸ்டர்டாம்:பிரான்சிற்கு அடுத்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தும் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்திற்காக முகத்தை மறைக்கும் நிகாபை அணிவதற்கான தடையை அமுல்படுத்தப் போகிறது. அடுத்த ஆண்டு முதல் தடை அமுல்படுத்தப்படும் என்பது அரசின் முடிவாகும்.

முகத்தை மறைக்கும் விதமான ஆடைகளை அணிவதை தடுக்கும் சட்டம் பொது இடங்களில் ஹெல்மட் அணிவதையும் தடுக்கும் என துணை பிரதமர் மாக்ஸிம் வெர்ஹாகன் கூறியுள்ளார்.

ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை

untitled
வாஷிங்டன்:பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதற்கான மிக சக்தி வாய்ந்த வெடிக்குண்டை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா ராணுவத்தின் கைவசமிருக்கும் பங்கர் பஸ்டர் வெடிக்குண்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க முடியாது. இதனை புரிந்துக்கொண்ட அமெரிக்கா புதிய வெடிக்குண்டை தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனை குறிப்பிட்டு பெண்டகன் அமெரிக்க காங்கிரஸிற்கு ரகசிய அறிக்கையை இம்மாதம் அளித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.

உ.பி.தேர்தல்:சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் – டெல்லி இமாம்

Samajwadi Party supremo Mulayam Singh with the Shahi Imam of Jama Masjid Maulana Syed Ahmed Bukhari
லக்னோ:உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவேண்டும் என டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் மவ்லானா அஹ்மத் புஹாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் டெல்லி இமாம். அப்பொழுது அவர் கூறியது:
“நாட்டில் முஸ்லிம்கள் வறுமையில் உழல்வதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். அதனால் உத்தரப் பிரதேசத் தேர்தலில் முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக முலாயம் சிங் உத்தரவாதம் அளித்துள்ளார். அதனால் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும்.

உ.பி:தேர்தல் களத்தில் 109 கிரிமினல்கள்

up
லக்னோ:உ.பி சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் முதல் கட்ட தேர்தலில் 109 கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த 867 வேட்பாளர்களில் 287 பேரின் மனுவை பரிசோதித்த பொழுது இவர்களில் 109 பேர் மீது கொலை, கடத்தல், வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. உத்தரபிரதேச மாநில தேர்தல் கண்காணிப்பு குழு வேட்புமனுக்களை பரிசோதித்தது.

கிரிமினல் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு முதலிடம். 28 பேர் இக்கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பா.ஜ.க சார்பாக 24 பேர் வீதமும், காங்கிரஸிற்கு 15, பீஸ் கட்சிக்கு 12, ஜெ.டி.யு கட்சிக்கு 5 கிரிமினல் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை புரிய தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

மணிப்பூரில் 80 சதவீத வாக்குப்பதிவு: வன்முறைகளில் 7 பேர் மரணம்

Voters queue up to exercise their franchise at a polling booth in Thambal district during the Manipur Assembly Elections on January 28, 2012.
இம்பால்:மணிப்பூரில் நேற்று நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தகவலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.சி. லாம்குங்கா தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாவட்டங்களில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 17 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களில் 82 சதவீதம் பேர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்: சி.பி.எம்

prakash karat
புதுடெல்லி:நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான மொழி-மத சிறுபான்மையினருக்கான் தேசிய கமிஷனின் சிபாரிசின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நகல் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில் இந்திய 20-வது மாநாடு ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதனையொட்டி மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் அரசியல் நகல் தீர்மானத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட் வெளியிட்டு செய்தியாளர்களிடையே பேசினார்.

பாக்.அடுத்த பிரதமர் நானே – இம்ரான்கான்

imran khan
டாவோஸ்:’பாகிஸ்தானில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் எனது கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும். பாகிஸ்தானின் புதிய பிரதமராக நான் தேர்வுச் செய்யப்படுவேன்’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான்கான் கூறியுள்ளார்.

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண் பார்வை தெரியாத மாணவன்

Ramiz Vohra
நாதியாத்(குஜராத்):இறைவன் நாடினால் எதுவும் சாத்தியமே! ஒருவர் தனது நோக்கத்தை அடைய இடைவிடாது தொடர்ந்து உறுதியான மனதுடன் போராடினால் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக 16 வயது மாணவன் ரமீஸ் வோரா திகழ்கிறார்.

இவர் தனது 13-வது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி 3 ஆண்டுகளில் முழுமையாக மனனம் செய்துவிட்டார். ஆச்சரியதக்க விஷயம் என்னவெனில், இவருக்கு பிறவியிலேயே கண் தெரியாது.

Saturday, January 28, 2012

போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்

போஜ்சாலா
போபால்:மத்தியபிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் போஜ்சாலா தொடர்பான பிரச்சனையை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மீண்டும் கிளப்புகின்றன. இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் நோக்கத்துடன் தடை உத்தரவை மீறி பல்கி யாத்ரா நடத்துவதற்கு தயாராகி வருகிறது ஒரு ஹிந்துத்துவா அமைப்பு. இன்று நடைபெறும் பசந்த் பஞ்சமியையொட்டி இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

அகழ்வாராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போஜ்சாலாவில் அமைந்துள்ள கமால் மவ்லா மஸ்ஜிதிற்கு எதிராக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இம்மஸ்ஜித் சரஸ்வதி கோயில் என்ற பொய் பிரச்சாரத்தை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

குஜராத்தில் மோடியை புகழ்ந்து காங்கிரஸ் விளம்பரம்

Congress advertisement in Gujarat praises Modi!
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை புகழ்ந்து மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் விளம்பரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தினத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் விநியோகித்த பத்திரிகையுடன் அளித்த இரண்டு பக்க விளம்பரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு புகழாரம் சூட்டியுள்ளது காங்கிரஸ்.

பகவத் கீதை வாழும் நெறி: ம.பி உயர்நீதிமன்றத்தின் மதவாத தீர்ப்பு

mphc
ஜபல்பூர்(ம.பி):இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை மறந்துவிட்டு தீர்ப்பு கூறுவது நீதிமன்றங்களின் வாடிக்கையாக மாறிவிட்டது.

பகவத் கீதை மத நூல் அல்ல; அது வாழும் நெறி எனவும் சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.

அணுசக்தி:பேச்சுவார்த்தைக்கு தயார் – அஹ்மத் நஜாத்

நஜாத்

டெஹ்ரான்:அணுசக்தி தொடர்பாக உலகின் வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டி சமாதானத்திற்கான சாத்தியக்கூறுகளின் வாசல்களை அடைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக நஜாத் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒரு வருடத்திற்கு முன்பே ஈரான் பேச்சுவார்த்தையை துவக்கியிருந்தது. கடைசியாக 2011 ஜனவரி மாதம் துருக்கியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.

ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை

(From left) Kalraj Mishra, SP Shahi and Uma Bharti of the BJP release the manifesto in Lucknow on Friday
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாரதீய ஜனதா கட்சி ராமர்கோயில் கட்டும் கோஷத்தை மீண்டும் துவக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாம் – ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது

ram madav
வதோதரா:அரசியல் சாசனத்தையும், நீதிபீடங்களையும் மீறிச் செயல்படுவதில் பிரசித்திப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு 4.5 உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறியது :பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

வரதட்சணைக்காக காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்து

dowry
வேலூர்:வரதட்சணை வாங்குவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் குற்றத்தை தடுப்பதற்காக நிறுவப்பட்டுள்ள காவல்நிலையத்தில் வைத்து வரதட்சணை தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளது காவல்துறையினரின் குற்றத்தை தடுக்கும் லட்சணத்தை பறைசாற்றுகிறது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்தகோணம் பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26-ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4.30 மணிக்கு மணப் பெண்ணுக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களை கைது செய்ய நடவடிக்கை: போலீஸ் அச்சுறுத்தல்

கூடங்குளம் அணு மின் நிலையம்
கூடங்குளம்:கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் உதயகுமார், அவருடன் தொடர்புடைய பாதிரியார்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை மிரட்டல், தேசவிரோத செயல் உட்பட அனைத்து சட்டப் பிரிவுகளிலும் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா முதல்வர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் வாலண்டியர் ஆனார்

CM DV Sadananda Gowda, few ministers of Karnataka govt attended the event in Sangha Ganavesh
பெங்களூர்:கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில் ஆதரவு தேடி முதல்வர் டி.வி.சதானந்தாகவுடா ஆர்.எஸ்.எஸ் முகாமில் சீருடை அணிந்து கலந்துக்கொண்டார்.

வடக்கு கர்நாடகாவில் ஹுப்ளியில் மூன்று தினங்களாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘ஹிந்து சக்தி சங்கம’த்தில் முதல்வர் சதானந்தாகவுடா மீண்டும் சங்கின் வாலண்டியராக கலந்து கொண்டார்.

Dua For Gaza