ஸன்ஆ:யெமன் நாட்டில் புதிய அதிபராக தற்போதைய துணை அதிபர் அப்துற்றப் மன்சூர் ஹாதியை ஒருமனதாக தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
33 ஆண்டுகள் யெமனை ஆட்சிபுரிந்த ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகியபிறகு நடைபெறும் தேர்தலில் ஹாதியை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. ஆயினும் அதிகார ஒப்படைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்த அவருக்கு பெரும் மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஸன்ஆவிலும், இதர நகரங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் தேர்தலை ஆதரிக்கின்றன.
தேர்தலை யெமன் எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். யெமனில் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் காலம் முடிந்துவிட்டது என்று நோபல் பரிசு பெற்ற தவக்குல் கர்மான் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment