வாஷிங்டன்:ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் இந்தியாவின் முடிவு அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அடி என்று முன்னாள் அமெரிக்க அரசியல் விவகார ஸ்டேட் அண்டர் செகரட்டரி நிக்கோலஸ் பேண்ஸ் கூறியுள்ளார்.
ஈரானை சர்வதேச தளத்தில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சி நடைபெறும் வேளையில் இந்தியாவின் தீர்மானம் நிராசையை ஏற்படுத்திவிட்டது என்று பேண்ஸ் ‘த டிப்ளமேட்’ என்ற மேக்சினில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் நல்லுறவை பேணும் அமெரிக்காவை பொறுத்தவரை இத்தீர்மானம் நிராசையை அளிக்கிறது. கடந்த மூன்று அதிபர்களின் பதவி காலத்தில் இந்தியாவுடன் முக்கியத்துவம் வாய்ந்த உறவை ஸ்தாபிக்க அமெரிக்கா முயன்றது. ஆனாலும், ஈரானுடன் வர்த்தக உறவை இந்தியா தொடருகிறது என்று பேண்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment