Thursday, February 9, 2012

சார்லஸ் டிக்கன்ஸ்

FILE PHOTO - Charles Dickens Museum Re-Opens: A Look Back At Charles Dickens
சார்லஸ் டிக்கன்ஸின் 200-வது நினைவு தினம் உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1812-ஆம் ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதி பிறந்த டிக்கன்ஸ் 1870-ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

டிக்கன்ஸின் வாழ்வும், எழுத்தும் ஆச்சரியமானது. அசாதரணமான எழுத்தாளர் என அவரை அழைக்கலாம். தான் வாழ்ந்த காலத்தின் ஆன்மாவுடன் டிக்கன்ஸ் சஞ்சரித்தார். அக்கால சூழலின் தலையும், வாலும், உள்ளும், புறமும் எல்லாம் டிக்கன்ஸிற்கு தெரியும். உலகம் முழுவதும் என்றும் நினைவுக்கூற தக்கவகையில் டிக்கன்ஸ் அக்காலக்கட்டத்தில் தனது வாசகர்களுக்காக எழுதினார்.

1830 களில் பத்திரிகையாளராக டிக்கன்ஸ் தனது வாழ்வை துவக்கினார். அக்காலக்கட்டத்தில் அவர் எழுதிய பிக்விக் பேப்பர்ஸ் என்ற முதல் நாவல் டிக்கன்ஸை பிரசித்தி பெற வைத்தது. பின்னர் வந்த தசாப்தங்களில் டிக்கன்ஸின் ஒவ்வொரு படைப்பையும் வாசகர்கள் தங்களது மூச்சை அடக்கி காத்திருந்து வாசித்தனர்.

Oliver Twist, David Copperfield, Nicholas Nickleby,The Old Curiosity Shop  என எத்தனையோ நாவல்களை அவர் வாசகர் உலகிற்கு அளித்தார். டிக்கன்ஸிற்கு பிறகு அவரைப் போன்ற எழுத்தாளர் உருவாகவில்லை எனலாம்.

முதலாளித்துவம் தனது கோரமுகத்தை வெளிப்படுத்திய காலக்கட்டத்தில் டிக்கன்ஸ் வாழ்ந்தார். எழுதினார். காலனியிசம் தனது வெற்றியை உலகமெங்கும் ஸ்தாபித்த காலக்கட்டம். அதன் பயங்கர அனுபவங்களை டிக்கன்ஸின் எழுத்தில் காணலாம். திறமைசாலியான அந்த எழுத்தாளனின் நினைவுகள் இனிமையானவை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza