டெஹ்ரான்:அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஈரான் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன. அதிபர் அஹ்மத் நஜாதின் மக்கள் ஆதரவு மதிப்பீடு செய்யப்படும் என கருதப்படும் இந்த தேர்தலில் 3400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்கு மத்தியில் வலுவான நிலைப்பாட்டை மேற்கொண்ட அஹ்மத் நஜாதிற்கு ஆதரவு கூடும் என்று கருதப்படுகிறது.
2009-ஆம், ஆண்டு 2-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின் நஜாதின் மக்கள் ஆதரவை அளவிட இத்தேர்தல் உதவும் என கருதப்படுகிறது. 290 பாராளுமன்ற இடங்களுக்கான தேர்தலில் 4.1 கோடி பேர் தங்களது வாக்குகளை பதிவுச் செய்வார்கள். நஜாதின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடும் வேளையில், எதிர்தரப்பில் நஜாத்தின் பொருளாதார கொள்கைகளை விரும்பாதவர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் யார் வெற்றிப் பெற்றாலும் ஈரான் அரசுக்கு ஆபத்து இல்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment