Showing posts with label NWF. Show all posts
Showing posts with label NWF. Show all posts

Sunday, September 14, 2014

புதுவலசையில் NWF நடத்திய மாதாந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி...!

சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

Monday, July 29, 2013

NWF நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

Thursday, June 27, 2013

புதுவலசையில் NWF சார்பாக இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

புதுவலசையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. NWF என்ற பெண்கள் அமைப்பு சர்பாக பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி புதுவலசையில் சென்ற 25.06.2013 செவ்வாய்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் கிழக்குத்தெருவில்  நடைபெற்றது.


Tuesday, March 12, 2013

தமிழகம் முழுவதும் NWF நடத்திய மகளிர் தின நிகழ்ச்சிகள்


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள் நடந்தன.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் NWF சார்பாக நடத்தப்பட்டன.

Monday, March 11, 2013

மகளிர் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு! – ஏ.எஸ்.ஸைனபா (NWF- தேசிய துணைத் தலைவர்)

secure women secure nation
சம உரிமை கோரியும், பாரபட்சத்திற்கு எதிராகவும் பெண்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றியையும், அவர்களின் திட உறுதியையும் நினைவுக் கூறுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.தேச எல்லைகளுக்கும், நிலப்பரப்புகளின் கலாச்சாரங்களுக்கும் அப்பால் மொழி, தேச, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளை மறந்து ஏராளமான வரலாற்று நிமிடங்களின் நினைவுகள் இத்தினத்தில் பின்னணியில் உள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சியில் காலூன்றிய பல நாடுகளும் குறைந்த சம்பளம் மற்றும் மோசமான தொழில் சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த பெண்களின் உயிர்த்தெழல் குறித்த செய்தியையும் அளிப்பதுதான் மகளிர் தினம்.

Saturday, February 16, 2013

வினோதினி மரணம் :குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி காரைக்காலில் NWF சார்பாக ஆர்ப்பாட்டம்


காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமை நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் பிப்ரவரி 12 அன்று மரணம் அடைந்தார்.

Wednesday, February 13, 2013

தமிழ்நாடு முழுவதும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய " பெண்களை பாதுகாப்போம் " விழிப்புணர்வு பிரச்சாரம்

 
 தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக " பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .இதில் பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களான பஸ் ஸ்டான்ட் , ரயில்வே ஸ்டேஷன் , பள்ளி , கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் " பெண்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பிட்ட நோட்டிஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
அதன் ஒரு அங்கமாக சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. 

Thursday, February 7, 2013

புதுவலசையில் NWF - ன் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


புதுவலசையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. NWF என்ற பெண்கள் அமைப்பு சர்பாக பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி புதுவலசையில் நேற்று (06.02.2013) மாலை நமதூர் மெயின் ரோட்டில் உள்ள  NWF சகோதரி ஒருவரின் இல்லத்தில் வைத்து  நடைபெற்றது.((மேலே உள்ள படம் தொடர்புடையது அல்ல. அடையாளத்திற்காக மட்டும் ))

இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "அன்றைய சமுதாயம்" என்ற தலைப்பில் சகோதர்.இமாம் நூருல் ஹஸன் பாகவி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அன்றைய சஹாபிய பெண்களின் வரலாறுகளையும் அதில் நமக்குள்ள படிப்பினைகளையும் அழகிய முறையில் எடுத்து கூறினார். அடுத்ததாக சகோதரர். ஃபைசல் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

Thursday, January 3, 2013

ஆதிவாசி பெண்கள் மற்றும் சிறுபான்மையின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும்-நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்


 கோழிக்கோட்டில் கடந்த டிசம்பர் 26,27-2012 அன்று நடந்த தேசிய கமிட்டி NWF-ன் தேசிய தலைவி ஷாஹிதா தஸ்லீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் இந்திய சமூகத்தில் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் சமூகமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று தான் கூறிக் கொண்டிருக்கிறது.பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வளவுதான் தண்டனைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு இழந்தது ஈடாகாது.பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்.

Thursday, December 13, 2012

மரணப்படுக்கையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் NWF நடத்திய மாபெரும் தர்ணா போராட்டம்


சென்னை : கோவை சிறைச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அபுதாஹிரை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக சென்னையில் 12.12.12 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ. ஃபாத்திமா ஆலிமா தலைமை தாங்கினார்.

கோவை மத்திய சிறையில் 15 ஆண்டுகாலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹிர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக‌ எஸ்.எல்.இ என்னும் அறியவகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோயாகும். இந்த நோய் தாக்கியவரின் ஒவ்வொரு உள் உறுப்புகளும் செயல் இழக்கச் செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருத்துவ வசதியின்றி பல சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப்பிடித்தார்.

Saturday, October 9, 2010

புதுவலசையில் NWF - ன் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் வீணான பேச்சுக்களிலும், தொலைக்காட்சிகளிலும் தனது நேரங்களை செலவழித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும், இறையச்சமும் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலை மாற மக்களிடையே அல்லாஹ்வின் கட்டளைகளையும், அண்ணல் நபியவர்களின் நல்லுபதேசங்களையும் கொண்டு போய் சேர்க்கவேண்டியது நம்மீது கடமையாகும். அந்த அடிப்படையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாதம்தோறும் பெண்களுக்கென மார்கக சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகலை நடத்தி வருகிறது. இந்த மாதம் 08-10-2010 வெள்ளிக்கிழமை மாலை 5:15 மணிக்கு நமதூர் காயிதேமில்லத் நகரில் நடைபெற்றது. இதில் " இறையச்சம் " என்ற தலைப்பில் NWF-ன் மாவட்டத்தலைவி சகோதரி ஜாஹிரா பானு ஆலிமா உரை நிகழ்த்தினார்கள். அந்த உரையில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும், சாஹாபி பெண்மணிகள் தனது வாழ்க்கையில் அல்லாஹ்வுக்கு அஞ்சிய விததையும் பற்றியும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்கள். இதில் திறலாக பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலிலாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.


செய்தி : அஸ்வர்

Tuesday, September 7, 2010

புதுவலசையில் நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF)ன் மார்க்க நிகழ்ச்சிகள்

புதுவலசையில் நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் "ரமலானும் நாமும்" என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் NWF-ன் மாவட்ட தலைவி சகோதரி ஜாஹிரா பானு ஆலிமா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார்கள். தனது உரையில் பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கம் பற்றியும், இஸ்லாதின் கடமைகளில் ஒன்றான நோன்பில் நமது அமல்கலை எவ்வாறு சரிசெய்து கொள்வது? ஜகாதின் சட்டதிட்டம் என்ன? அதனை கடைபிடிப்பதால் விளையும் நன்மைகள் என்ன? போன்ற பல பயன் தரும் தகல்வகளை சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளோடு தொடர்பு படுத்தி கூரியது மிகவும் சிறப்பாகவும் கேட்க கூடியவர்களை சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது அல்ஹம்துலில்லாஹ். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இன்ஷாஅல்லாஹ் வருகிற மாதம் மேற்க்குத்தெருவில் பெண்கலுக்கான பயான் நடைபெறும் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களையும் கலந்து கொள்ள ஏவுங்கள் உறுதியான விழிப்புணர்வுள்ள சமுதாயம் உருவாகிட உதவிடுங்கள்.

Dua For Gaza