நெல்லை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருடந்தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் (Healthy People Healthy Nation) என்ற முழக்கத்தோடு மக்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வருடம் பிப்ரவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை இப்பிரச்சாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டு இதனுடைய துவக்க விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கோவையில் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்தின் ஒருபகுதியாக நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி 10 முதல் 18 ஆம் தேதி வரை நடை, ஓட்டம், யோஹா மற்றும் உடல் பயிற்சிகளும் நடைபெற்றது . மேலும் பிப்ரவரி 19 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம், பேட்டை, சுத்தமல்லி, பத்தமடை, கல்லிடைக் குறிச்சி, வி.கே.புரம், ஏர்வாடி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, போன்ற பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளிவாசல் வளாகத்திலும் சுத்தம் செய்யப்பட்டது .
இப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .
0 கருத்துரைகள்:
Post a Comment