
புதுடெல்லி : ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் என்ற அரசு சாரா அமைப்பு சமூக சேவை துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக மாஸ்டர் ஆஃப் சோசியல் வர்க் என்ற பட்ட மேற்படிப்பை பயில கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் 2-வது கட்டத்தை ரிஹாபின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் கூறியது :
ரிஹாபின் திட்டங்கள் அமல்படுத்தும் கிராமங்களைச் சார்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் சமூக சேவையில் பங்குபெறச் செய்வதற்கான ஒரு முன்னேற்றமான திட்டம் இது. ஒரு சமூக சேவகரின் ஈடுபாடு, அர்ப்பணத்தை ஒவ்வொரு மாணவரும் தனது படிப்புக் காலத்தில் பேணவேண்டும். சமூக சேவையில் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கினை நிறைவேற்றவேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.




