Showing posts with label ஹிந்துத்துவா. Show all posts
Showing posts with label ஹிந்துத்துவா. Show all posts

Friday, June 20, 2014

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசுக்கு வேண்டுகோள்!



திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 18.06.14 அன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் K.P.S.சுரேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து விரைந்து தேடி வரும் நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள், கிருஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டும். கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. வழியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, June 19, 2014

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...

Sunday, June 15, 2014

சமூக அமைதியை கெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மத துவேச நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் வடக்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் இரு தினங்களாக நடைபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து இன்று(14.06.2014) மாலை தேவிப்பட்டிணத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கையில் உருட்டுக்கட்டை ,சீருடையுடன் வீதிகளில் பேரணியாக சென்றுள்ளனர்.

Friday, June 6, 2014

இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் கொலை: இந்து அமைப்புக்கு தடை?

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட இந்து அமைப்பினை தடை செய்ய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று புனே காவல்துறை ஆணையர் கூறினார்.
சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (வயது 24) என்பவர் புனேவில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் திங்கள்கிழமை மாலை தொழுகைக்குச் சென்று திரும்பினார். அப்போது, அவர் மீது திடீரென சிலர் சரமாரியாக ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Sunday, June 1, 2014

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 

Saturday, May 31, 2014

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

Saturday, May 3, 2014

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அட்டூழியம்: பெண்கள், குழந்தைகள் உட்பட 32 முஸ்லிம்கள் படுகொலை!

குவஹாத்தி: அஸ்ஸாமில் கடந்த இரண்டு நாட்களாக போடோ தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட முஸ்லிம்களின் பலி எண்ணிக்கை 11 லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு சமீபத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24–ந் தேதியுடன் 3 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடோ இன வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு போடோ தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

Monday, April 28, 2014

தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம்!



தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட வகுப்புக் கலவரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பெரிய கலவரங்கள் நடந்த உத்தரபிரதேச மாநிலம் கலவரங்களில் முன்னணியில் உள்ளது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 118 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு 247 ஆக கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Sunday, February 2, 2014

அஸிமானந்தா வெளியிட்ட புதிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின் படியே தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன!


RSS

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அனுமதியும், ஆசியும் வழங்கியதாக ஹரியானா மாநிலம் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளார். காரவன் மாத இதழுக்காக அதன் எடிட்டோரியல் மானேஜர் லீனாகீதா ரகுநாத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

Tuesday, January 21, 2014

சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார்

மதவெறி, இனவெறியை தூண்டி கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இன்று காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.(<http://www.youtube.com/watch?v=7rO7qPp0ps4>, <http://www.youtube.com/watch?v=jV9qVLRVMEY>, <http://www.youtube.com/watch?v=hxH0Ra-ap2Q>) இதனை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டுள்ளனர்.

Thursday, December 26, 2013

இளம்பெண்ணை கர்நாடகாவிலும் குஜராத் போலீஸ் கண்காணித்தது! – குலைல் டாட் காம்


spy

புதுடெல்லி: பெங்களூரைச் சார்ந்த கட்டிட கலை வல்லுநரான இளம்பெண்ணை குஜராத்தில் மட்டுமல்ல; கர்நாடகாவிலும் மோடியின் போலீஸ் கண்காணித்தது என்று குலைல் டாட் காம் இணையதளம் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்கால கணவர், உறவினர்கள், பெற்றோர் ஆகியோர் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கியதை தொடர்ந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் நோக்கம் இளம்பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை குறித்து அறியும் ஆவலே என்பது தெரிய வந்துள்ளது.

Sunday, December 15, 2013

ஹிந்துத்துவாவாதிகளின் பிடியில் மத்திய உள்துறை அமைச்சகம்!-சமூக ஆர்வலர்கள்!


shabnam

புதுடெல்லி: இந்தியாவில் அதிகாரமையங்கள் காவிமயமாக் கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், மத்திய அமைச்சகமும் கிட்டத்தட்ட ஹிந்துத்துவா சக்திகளின் பிடியில்தான் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்கில் கைதுச் செய்யப்படுவது தொடருவதற்கு காரணம் இதுவாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னாள் உள்துறமை செயலாளர் ஆர்.கே.சிங் பா.ஜ.க வில் சேர்ந்தது இதற்கான தெளிவான ஆதாரமாகும்.உள்துறை அமைச்சகம் தவிர இதர துறைகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.காவி உள்ளம் படைத்த அதிகாரிகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கின்றார்கள்.

Wednesday, December 11, 2013

முஸஃபர் நகர் கூட்டு பாலியல் வன்கொடுமை:வாக்குமூலம் அளித்த பெண்களின் வீடுகள் தீக்கிரை!


fire home

முஸஃபர் நகர்: உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் நடந்த கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.முன்னர் 6 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தனர்.

Saturday, December 7, 2013

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டவேண்டும்! – டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா


jantar

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில பிரிவு சார்பாக ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடந்தது.
தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான இ.எம். அப்துர் ரஹ்மான் தனது உரையில் கூறியது:
சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு சங்க் பரிவாரம் நிகழ்த்திய மிகப் பெரிய பயங்கரவாதச் செயலே பாபரி மஸ்ஜித் இடிப்பு. பாபரி மஸ்ஜிதின் இடிப்பை மறக்கடித்து விடலாம் என்று சங்க் பரிவாரம் கனவு காண வேண்டாம்.

Friday, November 22, 2013

கண்காணிப்பு விவகாரம்: சிக்கலில் பா.ஜ.க!



புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையிலும், நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள சூழலிலும் குஜராத் முதல்வரும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ரகசியமாக உயர் அதிகாரிகள், தனிநபர்களை கண்காணித்த விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் பா.ஜ.க தவித்து வருகிறது.
சாஹிபிற்காக(மோடி) உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, பெங்களூரைச் சார்ந்த ஆர்க்டிக்டான இளம்பெண்ணையும், குஜராத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்த செய்தியை இணையதள நியூஸ் போர்டல்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன வெளியிட்டது பா.ஜ.கவிற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

2011- ஆம் ஆண்டு கலவரம்:பா.ஜ.க எம்.எல்.ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!



ருத்ரப்பூர் (உத்தரகாண்ட்) : உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக ருத்ரப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ரப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்தக் கலவரத்தை தூண்டியதாக ராஜ்குமார் துக்ரால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சிபிசிஐடி போலீஸார் ருத்ரப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Wednesday, November 13, 2013

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் புதிய திருப்பம்!


patna

பாட்னா: பீகாரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சாட்டப்பட்ட இச்சம்பவத்தில் புதிய கைதுகளை தொடர்ந்து வழக்கு புதிய திசையை நோக்கி பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜார்கண்டில் தன்பாத் மாவட்டத்தில் ராஜு ஸாவு என்பவர் இவ்வழக்கில் புதியதாக கைது செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ.விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகார் போலீஸ் ராஜு ஸாவுவை தன்பாத்தில் ஜாரியாவில் வைத்து கைது செய்தது.

Sunday, November 10, 2013

சாதிக் ஜமால் போலி என்கவுன்ட்டர் வழக்கு: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் சாந்துவிடம் சிபிஐ விசாரணை!



குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சாதிக் ஜமால் வழக்கில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்துவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சாதிக் ஜமால் என்பவர் போலீசாரால் தீவிரவாதி எனக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஐ.பியில் இணை இயக்குநராக பணிபுரிந்தார் நேச்சல் சாந்து. தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

Saturday, October 12, 2013

முஸாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 2 பேர் பலி!



அண்மையில் வகுப்புக் கலவரம் நடந்த உ.பி மாநிலம் முஸாஃபர் நகரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் 2 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பசேந்திரோட் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் ஆபித் (வயது 28). தனது முடி திருத்தும் கடையில் இருந்து திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆபிதின் மீது துப்பாக்கியால் சரமாரி சுட்டார்கள். இதில் ஆபித் பலியானார். ஆபிதின் கொலையைத் தொடர்ந்து ஊர்மக்கள் கொந்தளித்தனர். நகரத்தில் துணை ராணுவப் படை நிறுத்தப்பட்டுள்ளது.

மோடி பிரதமரானால் கலவர வழக்குகள் மறக்கடிக்கப்படும்! - குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார்!



மோடி பிரதமரானால் குஜராத்தில் அவர் தலைமை வகித்த கலவரம் தொடர்பான வழக்குகள் காணாமல் போகும் என்று மோடிக்கு எதிரான சட்டரீதியான போராட்டங்களின் மூலம் பிரசித்திப் பெற்ற குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
கொச்சிக்கு வருகை தந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் அளித்த பேட்டியில் கூறியது:
வழக்குகளை அழித்தொழிக்கவே மோடியை பிரதமராக்க பா.ஜ.க படாத பாடு படுகிறது. மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் தற்போது அச்சத்தால் மெளனம் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

Dua For Gaza