Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Monday, November 10, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி ரவிஸ் மஹாலில் நவ.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் ரஃபீக் அஹமது, மாநில பொதுச்செயலாளர்கள் M.நிஜாம் முகைதீன், A.அப்துல் ஹமீது, முகம்மது முபாரக், மாநில செயலாளர்கள் A.அமீர் ஹம்சா, T.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர். ஆவாத் ஷெரீப் கலந்துகொண்டார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முகம்மது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் கட்சியின் இரண்டு வருட செயல்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Friday, June 20, 2014

பாஜக அரசு இரயில் கட்டணத்தை உயர்த்தியது மக்கள் விரோத செயல்! எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கூறியதாவது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் பெரிதும் உபயோகிக்கும் இரயிலின் பயணக் கட்டணத்தை 14.2 சதவீதம் அளவிற்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மேலும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  

தேவாலயங்கள் மீது கல்வீச்சு:- எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கண்டனம்!


இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஸ் குமார் கடந்த 18.06.2014 அன்று இரவு 10:30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழி எங்கும் அதன் தொண்டர்கள் பேருந்துகள் மீதும், தொழில் நிருவனங்கள் மீதும் கற்களை எரிந்து பதட்டத்தை ஏற்படுத்தினர்.

மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், தேவாலய ஊழியர்களின் வாகனங்கள் மீதும் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர்.

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசுக்கு வேண்டுகோள்!



திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 18.06.14 அன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் K.P.S.சுரேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து விரைந்து தேடி வரும் நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள், கிருஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டும். கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. வழியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி இலங்கை தூதரகத்தில் கூட்டமைப்பு சார்பில் மனு

islamiya koottamaippu
இலங்கையில் கடந்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் பளிவாசல்களும், வீடுகளும், தொழில் நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

Wednesday, May 14, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்கள் தொடர்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 10, 2014 அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு துறை பொறுப்பாளர் ஷபியுல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் பி.கோயா அவர்கள் மக்கள் தொடர்பு என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். சமூக களத்தில் செயல்படும் இயக்கங்களுக்கு மக்கள் தொடர்பின் அவசியம் குறித்தும் குறிப்பாக ஊடகங்களுடன் கொள்ள வேண்டிய தொடர்புகள் குறித்தும் தன்னுடைய உரையில் எடுத்துரைத்தார். மக்கள் தொடர்பை எடுத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் விவரித்தவர் மக்கள் தொடர்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருக்க வேண்டிய குணநலன்களையும் விவரித்தார்.

Saturday, May 10, 2014

மதுரை வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணி-ஸ்டாலின்


Friday, May 2, 2014

சென்னை குண்டுவெடிப்புக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

 “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று எஸ்.டி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
01.05.2014 காலை 7.15 மணியளவில் பெங்களூரிலிருந்து கவுகாத்திக்கு சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடைக்கு வந்து நின்ற அடுத்த 10 நிமிடங்களில் இரயிலின் எஸ்4, எஸ்5 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடியது, கடும் கண்டனத்திற்குரியது.

Monday, April 28, 2014

பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம்! உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மனுதாக்கல்!



பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம் உள்ளது. எனவே உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, டாக்டர்கள் குழு வைத்து மறுபிரேத பரிசோதனை(Re-postmortem)செய்வதற்கும் அதை வீடியோகிராப் செய்வதற்கும் உத்தரவு பெற்றுள்ளது.

Wednesday, March 5, 2014

இராமநாதபுரம் தடியடியை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (04-03-2014) மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவக்க தினத்தை கொண்டாடும் விதமாக இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தது.
எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கிய பின்னர், பேரணி துவங்கவிருந்த நேரத்தில் மாலை 4 மணியளவில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பேரணியை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த சட்டவிரோதமான கொலைவெறித்தாக்குதலில் ஏராளமான முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டித்தும், முஸ்லிம் விரோதப்போக்கைக் கண்டித்தும் இன்று மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!



கோவையில் 02 - 03 - 2014 அன்று மாலை 06.00 மணிக்கு இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் K. ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Monday, January 27, 2014

சென்னை ராயபுரத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ.!

சென்னை ராயபுரத்தில் பத்திரிகையாளர்கள்  மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அப்பகுதியில் அந்நிகழ்ச்சி அன்று கலவரம் செய்வோம் என்று அப்பகுதி வி.ஹெச்.பி பொறுப்பாளர் பகிரங்கமாகவே பேசிய காரணத்தால் அதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் சமூக அமைதியை கட்டிக்காக்கும் விதத்தில் அந்நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கக் கோரியும், பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வி.ஹெச்.பி

Sunday, January 26, 2014

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

    எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இட ஒதுக்கீடு முறை அகற்றப்பட்டதன் காரணமாக இந்திய அளவிலும், தமிழக அளவிலும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதனை பல்வேறு ஆனையங்களும் புள்ளி விபரங்களுடன் தெரிவிதுள்ளன.

Tuesday, January 21, 2014

சிறுபான்மையினரை அவமதித்து பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா மீது SDPI கட்சி புகார்

மதவெறி, இனவெறியை தூண்டி கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இன்று காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.(<http://www.youtube.com/watch?v=7rO7qPp0ps4>, <http://www.youtube.com/watch?v=jV9qVLRVMEY>, <http://www.youtube.com/watch?v=hxH0Ra-ap2Q>) இதனை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டுள்ளனர்.

Thursday, December 26, 2013

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபயணம்.100 க்கும் மேற்ப்பட்டோர் கைது!

periyapattinam
 இராமாநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியபட்டிணத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் இன்று 24.12.2013 பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது.

பெரியபட்டினம் முதல் களிமன்குண்டு வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டியும், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர் நியமனம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுவர் அமைக்க கோரியும், இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை வந்து செல்லும் பேருந்து காலை, மாலை பள்ளிகளுக்கு செல்லும் மீனவ தொழில் செய்துவரும் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த 55 மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு வரை சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் நடைபயண போராட்டம் இன்று  பெரியபட்டினத்திலிருந்து துவங்கப்பட்டது. இதில்  மாவட்ட துணை தலைவர் பைரோஸ் கான், மாவட்ட செயலாளர்கள் அப்துல் ஜமீல், செய்யது இப்ராஹீம், தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Monday, December 23, 2013

நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி, இன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம்!




எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் இன்று(22.12.2013) சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி. அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.எம். ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர்கள் செய்யது அலி, அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், ரத்தினம், அபுதாகிர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொணடனர்.

Sunday, December 15, 2013

ஓரினசேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்,தீர்ப்பை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்!



ஓரினசேர்க்கை எனப்படும் இயற்கைக்கு மாற்றமான உறவை தண்டனைக்குரிய குற்றமாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை டிவிட்டர்,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் குறைகாண்பது ஆச்சர்யமாக உள்ளது. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகளை,எய்ட்ஸ் நோயின் முக்கிய காரணியான இந்த அசிங்கத்திற்கு எதிராக எடுக்க வேண்டும்.     'கடவுள் ஆதம் மற்றும் ஏவாளைதான் படைத்தார். ஆதம் மற்றும் ஸ்டீவை படைக்கவில்லை' என்று ஒரு செய்தியாளர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 11, 2013

நிதாஹத் சட்டத்தினால் சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவித்து வரும் தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!




இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத்தேடி பல்வேறு மாநில மக்கள் சென்றுள்ளனர். சவூதி அரேபியா நாட்டிலும் வேலை வாய்ப்பிற்காக தமிழகத்தை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் “நிதாஹத்” என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் வரையரைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் அடிப்படை வேலைகளுக்காக சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநில மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியாகியுள்ளனர்.

Wednesday, November 27, 2013

ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைத்து அகலபடுத்த கோரி தடையை மீறி நடைபயணம் எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

இராமநாதபுரம் ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ சார்பில் நடைபயணம் அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அழகன்குளத்தில் தடையை மீறி நடைபயணம் அன்று (26.11.2013)துவங்கியது. 

திருவாடனை தொகுதி தலைவர் ஜஹீருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான்,எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹிஜ்ரி, தொகுதி செயலாளர் ரியாஸ் அஹமது,இணைச்செயலாளர் கஜினி முஹம்மது,நூருல் ஹக்,பனைக்குளம் கிளைத்தலைவர் பாசித் அலி,செயலாளர் இஜாஸ் அஹமது,அழகன் குளம் கிளைத்தலைவர் அப்துல் ஜமீல்,செயலாளர் உமர்,சித்தார்கோட்டை கிளைத்தலைவர் ரைசுதீன்,தேவிப்பட்டிணம் கிளைத்தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டு தேவிப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

Friday, November 22, 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர்கள் J.ரசின், S.இல்யாஸ் மற்றும் பொருளாளர் A.அஹமது பைசல் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Dua For Gaza