Saturday, April 30, 2011

ஆப்கானில் நிலைமை மோசம்:அமெரிக்கா

afghanistan military
வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.

மக்கள் கொந்தளிப்பில் சிரியாவின் நகரங்கள்

friday protest
டமாஸ்கஸ்:தலைநகரான டமாஸ்கஸ் உட்பட சிரியாவின் நகரங்களில் அரசுக்கெதிரான போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட பொழுது வீதிகளெல்லாம் மனித வெள்ளத்தால் மிதந்தன. கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்காக ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பிரார்த்தனைக்கு பிறகு 1963-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் தொடரும் பஆஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் பெருமளவில் திரண்டனர்.

எகிப்து ரஃபா எல்லையை திறக்கிறது

border
கெய்ரோ:இஸ்ரேல் விதித்துள்ள தடையால் துயரத்தை அனுபவிக்கும் காஸ்ஸாவின் எகிப்திய எல்லையான ரஃபா உடனடியாக திறக்கப்படும் என எகிப்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் நபீல் அல் அரபு தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்தார்.

துனீசியா மீது கத்தாஃபியின் ராணுவம் தாக்குதல்

tunisia
துனீஸ்: கத்தாஃபியின் ராணுவம் துனீசியாவின் எல்லை நகரமான தஹிபாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு துனீசியா ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தில் தற்போது லிபியா நாட்டுக்கொடி பறப்பதாகவும், ஆனால், எந்த நேரத்திலும் துனீசியா ராணுவம் வலுவான பதிலடி கொடுக்கும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்தாஃபி ராணுவத்தின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் மத்திய தஹிபாவில் ஒரு பெண் கொல்லப்பட்டார். ஒரு ஆண் குழந்ந்தையின் காலில் குண்டடிப்பட்டது. எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து லிபியா ராணுவம் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது.

சூறாவளி:அமெரிக்காவில் மரணம் 313 ஆக உயர்வு

வாஷிங்டன்:தென் அமெரிக்காவில் பல நாட்களாக தொடர்ந்து வீசும் புயல் காற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. சூறாவளியினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ள அலபாமா மாநிலத்திற்கு செல்வேன் என அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர உதவி வழங்கப்படும் என அதிபர் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அலபாமா, மிசிசிபி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளோரிடாவில் எண்டோவர் ஸ்பேஸ் செண்டருக்கு செல்லும் வழியில் ஒபாமா அலபாமாவுக்கு செல்வார்.

இனப்படுகொலை:சஞ்சீவ் பட்டிற்கு அளித்த பாதுகாப்பு வாபஸ்

sanjeev pat
குஜராத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குஜராத் போலீஸ் திரும்பப பெற்றுக் கொண்டுள்ளது.

2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்த நடந்த வன்முறைகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கிருப்பதாக  உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அவர் தனது பிரமாண பத்திரத்தில், “2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரங்கள் குறித்து முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது-உச்சநீதிமன்றம்

mathaani
புதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.

இதனை புரிந்துக்கொள்ள வழக்கின் விளக்கமான விபரங்களுக்கு உள்ளே செல்ல வேண்டிய தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், இவ்விவகாரத்தில் தீர்மானம், இரு கட்சிதாரர்களின் வாதங்களை கேட்ட பிறகே அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வருகிற மே மாதம் நான்காம் தேதி ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு:யாஸ்மின் ஷேக்கும் பல்டி

best bakery
மும்பை: 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையுடன் தொடர்புடைய பெஸ்ட்பேக்கரி வழக்கில் ஒரே சாட்சியான யாஸ்மின் ஷேக் திடீரென பல்டியடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் தீஸ்தாவின் தூண்டுதலால் தவறான சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கின் ஒரே சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

மும்பை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தண்டணை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மின், “அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் கூறியதன் பேரில் பொய் சாட்சியம் அளித்தேன்.

பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ

pirajapathi
அஹ்மதாபாத்:துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது. சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது.பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்த சி.பி.ஐ ஐ.ஜி கந்தசாமி கூடுதல் விபரங்களை தெரிவிக்கவில்லை.

கிம் டேவியின் பேட்டியையடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

purulia arms drop
புரூலியா:புரூலியா ஆயுத மழை தொடர்பாக கிம் டேவியும், பீட்டர் ப்ளீச்சும் வெளியாக்கிய ரகசிய செய்திகள் இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக மூடி வைத்த ரகசியமாகும். புரூலியாவில் ஆயுதங்கள் கொட்டியது தொடர்பாக சில ஊகங்கள் நிலவின. இதுவெல்லாம் அரசு சமர்த்தாக பிரச்சாரம் செய்தவையாகும்.

பங்களாதேசுக்கு கொண்டுபோக விருந்த ஆயுதங்கள் தவறுதலாக புரூலியாவில் கொட்டப்பட்டதாக வதந்தி நிலவியது. பல்கேரியாவில் அரசு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 300 ஏ.கெ.47 துப்பாக்கிகள், 10 ராக்கெட் லாஞ்சர்கள், 100 பீரங்கி க்ரேனேடுகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் ஆகியவற்றை மரப்பெட்டியில் அடைத்து லாட்வியாவிலிருந்து ஆன்றோனோவ் விமானத்திலிருந்து மே.வங்க மாநிலம் புரூலியாவில் கொட்டப்பட்டது.

புரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது


புதுடெல்லி:1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.

Friday, April 29, 2011

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்

Afghan-air-force-shooting-007
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

Thursday, April 28, 2011

ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறவு தொடரும்-கலைஞர் மு.கருணாநிதி

MK
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெயரால் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் உறவை முறித்துக் கொள்ளமாட்டோம் எனவும், வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 சென்னையில் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் மு.கருணாநிதி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகளும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழியை குற்றவாளியாக சேர்த்திருப்பது கவலைக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இவ்வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் எனவும், மகள் மற்றும் கட்சி நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என கருணாநிதி தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார் கருணாநிதி.

வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஜெயலலிதா அல்ல என தெரிவித்த கருணாநிதி,சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா?. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

யெமன் நாட்டில் சட்டத்தை மீறும் பிரச்சாரம் துவங்கியது

Jan11YemenProtests_452
ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி 2 மாதங்களை தாண்டியுள்ள மக்கள் எழுச்சிப்போராட்டம் புதிய வழிமுறைகளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இதன் ஒரு பகுதியாக சட்டத்தை மீறும் போராட்டத்தை நேற்று எதிர்ப்பாளர்கள் துவக்கியுள்ளனர்.

இப்போராட்டத்தில் 18 நகரங்கள் பங்கேற்கும் என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசங்களில் கடைகள் திறக்கவில்லை. பள்ளிக்கூடங்களும்,அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.இரண்டுவாரம் நீண்ட போராட்டமாக இது அமையும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குவாண்டனாமோ:சிறைக்கைதிகளை சித்திரவதை- ஒத்துழைத்த அமெரிக்காவும், பிரிட்டனும்

kyantonoma
லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறைக்கைதிகளை சித்திரவதைச்செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் சி.ஐ.ஏவும், பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தைக்குறித்து பிரிட்டீஷ் அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

CFI
கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச்செய்யப்படுவர்.கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.

எண்டோஸல்ஃபான்:தடைச்செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ டெல்லியில் தர்ணா


SDPI

புதுடெல்லி:எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச்செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேரளாவிலும், கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை   செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து    கொண்டோர் குற்றஞ்சாட்டினர். எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக்கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்யவேண்டுமென அவர்கள் கோரினர்.

ஆ.ராசா பிரதமரை தவறாக வழிநடத்தினார் – பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கை

PMrajastorynew295
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. ஊழலில் பிரதமரை குற்றஞ்சாட்டாத அறிக்கையில் பிரதமரின் அலுவலகம் குறித்து கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல்புரிய ஆ.ராசாவுக்கு துணைபோகும் வகையில் பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது என அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பிரதமரை தவறாக புரியவைத்துள்ளார். ஊழலில் ஆ.ராசாவின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் உள்ளன எனக்கூறும் அறிக்கை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாத கேபினட் செயலாளரையும் குற்றஞ்சாட்டியுள்ளது.

காரியங்களை கவனமாக பரிசீலிக்காமல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாட்டாவின் பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாததுக் குறித்த முக்கிய ஆதாரமும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 27, 2011

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்

 
suliemanதாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.

2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுலைமான் சிறையிலடைக்கப்பட்டார். முதல் 7 மாதங்கள் குர்மா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுலைமான் பின்னர் தாயிஃப் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வலியுறுத்துகிறார் நிதின் கட்காரி

gadkari
அயோத்தி:பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது.

அவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களின் மசூதியை கட்டவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்

france prayer
பாரிஸ்:பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.

இவரது இந்தக் கருத்தையொட்டி, ஒருபுறம் முஸ்லிம் மக்கள் பொது இடங்களில் தொழுவதற்கு அனுமதியும் உண்டு என்றும் வாதிடுகின்றனர்.அதே நேரத்தில்  மறுபுறம் பிரான்ஸ் மக்கள், பொது இடங்களை தொழுகை என்ற பெயரில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதோடு நாங்கள் எல்லை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கருத்துக்கள் வெளியாவதை பிரெஞ்சின் சட்டமியற்றுனர் ஆக்ஸல்  அர்ஜின் சுட்டிக்காட்டியுள்ளார்.

குஜராத் இனப்படுகொலை:பிரதீப் சர்மா, சஞ்ஜீவ் பட் குற்றச்சாட்டுக்கு ஆதரவு

kuldeep sarma
கட்ஸ்:குஜராத் கலவரத்தின் போது கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து தொலை பேசி வந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவிடம் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். பிரதீப் சர்மாவின் புகார் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் இப்போது நில ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார்.

உல்பா அமைப்பினர்களுக்கு மத்திய அரசு உதவி

ulfa
புதுடில்லி:உல்பா அமைப்பின் செலவிற்காக மத்திய அரசு தினமும் ரூ.40 லட்சம் வழங்குகிறது.உல்பா அமைப்பினரின் அன்றாட செலவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உல்பா அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 400 பேரின் தேவைகளுக்காக அசாம் மாநில அரசின் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷ்ராத் ஜஹான் வழக்கு குஜராத்தின் 14 மூத்த காவலதிகாரிகள் கூட்டு

Gujarat_Riots_lnk
அஹ்மதாபாத்:இஷ்ராத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத்தில் பதினான்கு ஐ.பி.ஸ் அதிகாரிகளுக்குள்  பொறாமை மற்றும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இவ்வழக்கை சி.பி.ஐ அல்லது சிறப்பு புழனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

ஐ.ஜி சதீஸ் வர்மா மற்றும் ஐ.பி.ஸ் அதிகாரி ஜி,எல்.சிங்கால் உள்ளிட்ட பதினான்கு அதிகாரிகள் மூத்த அதிகாரிகளுடன் உள்ள காழ்புணர்ச்சி காரணமாக குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளனர். இஷ்ராத் ஜஹான் என்கவுன்டரின் போது சதீஸ் வர்மா சிறப்பு  புழனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

பி.ஜே.பி-யின் பார்வையில் காந்திஜி தேசபிதா அல்ல-ஜெயபால் ரெட்டி

jeyapal reddy
மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி பிஜேபி மகாத்மா காந்தியை தேச பிதாவாக ஏற்றுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இன்றளவும் பிஜேபி காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதற்கு பிஜேபி தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முன்னால் முதலமைச்சர் ஹேமாவதியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு மதம் மற்றும் சாதீய அரசியலின் சவால்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் உலகம் முழுவதும் மகாத்மா காந்தியை சிறந்த ஒழுக்கமுடையவராகவும் அரசியல் தலைவராகவும் அங்கீகரித்துள்ளனர்.

கறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்

black money
புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன. உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டெல்லி,மும்பை விமானநிலையங்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை

pay here
புதுடெல்லி: டெல்லி , மும்பை விமானநிலையங்களில் வளர்ச்சித் திட்டத்தின் பெயரால் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கன்ஸ்யூமர் ஆன்லைன் ஃபவுண்டேசன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

முன்னர் விமான நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தான் நீதிபதிகளான ஸிரியக் ஜோஷப், எ.கெ.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்துள்ளது.

சாயிபாபாவின் உதவியாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

sathyajith
புட்டபர்த்தி(ஆந்திரபிரதேசம்): சாயிபாபாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் சத்யஜித்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. சத்யஜித்தின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சத்யஜித்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாயிபாபாவுக்கு போதுமான உணவு வழங்கவில்லை எனவும், அதிகமாக வேதனஸம்ஹாரி அளித்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சாயிபாபாவின் உடல்நலம் சீர்கெட அதுதான் காரணம் என போலீஸ் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

இனப்படுகொலை குறித்த தொலைபேசி ஆவணங்கள்:விசாரணைக்கோரிக்கை தள்ளுபடி

phone
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்குமிடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சி.டியைக்குறித்து விசாரணை நடத்தவேண்டுமென கோரி சமர்ப்பித்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. 2002-ஆம் ஆண்டு குல்பர்க் சொசைட்டியில் நடந்த கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் இம்மனுவை சமர்ப்பித்தனர்.

எஸ்.ஐ.டி வழக்கை விசாரிப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாகவும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பி.ஜெ.தந்தா தெரிவித்தார். குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்களை எஸ்.ஐ.டி பதிவுச்செய்துள்ளது.

அரசியல் சட்டம் திருக்குர்ஆனின் அடிப்படையில் அமையவேண்டும்-எகிப்து நாட்டு மக்கள் விருப்பம்

கெய்ரோ:எகிப்தில் இயற்றப்படவிருக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை திருக்குர்ஆனாக இருக்கவேண்டும் என பெரும்பாலான எகிப்தியர்களும் வலியுறுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசு அமையவேண்டும் என எகிப்து நாட்டு மக்கள் விரும்புகின்றார்கள்.

ஏழு அமெரிக்க எண்ணெய் டாங்கர்களை தீவைத்துக் கொளுத்தியது தாலிபான்

oil tank attack
காபூல்:ஆப்கானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏழு எண்ணெய் டாங்கர்களை தாலிபான் போராளிகள் தீவைத்துக் கொளுத்தினர். ரோஸாவில் வைத்து டாங்கர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் தாலிபான்கள். வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.

சிரியா:ராணுவத்தின் அட்டூழியம் தொடர்கிறது

syria protest
டமாஸ்கஸ்:சிரியாவில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வரும் ராணுவம் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 பேர் கைதுச்செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் டாங்கர்களிலும், வாகனங்களிலும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பிரதேசங்களில் முகாமிட்டனர். மின்சாரம்-தொலைபேசி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட பிறகு ராணுவம் எதிர்ப்பாளர்களை சுற்றி வளைத்தது. ஆனால், நேற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ்ஸாருக்கு எதிரான போராட்டங்கள் நடந்தேறின.

மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

popular front
புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

Tuesday, April 26, 2011

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது

sri-lanka-2
வாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மோடியுடன் நடந்த சந்திப்பில் பட் கலந்துகொள்ளவில்லை – முன்னால் டிஜிபி

modi_meeting_chakravatiphono1a_271x181
அஹ்மதாபாத்:குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள குஜராத் காவல்துறையின் மூத்த அதிகாரி பட் கலவரத்திற்கு முன் 2002 பிப்ரவரி 27  ஆம் தேதி மோடியுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என முன்னால் டி ஜி பி தெரிவித்துள்ளார்.

மோடியுடன் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஹிந்துக்கள் தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியதாக பட் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குழப்பம் விளைவிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி வக்ப் நிலங்களை அபகரிக்க முயற்சி – முலாயம்

images
லக்னோ:சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த சனியன்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வக்ப் வாரிய நிலங்களை கையகப்படுத்த முயல்கிறது என குற்றம் சாட்டினார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் மத்திய அமைச்சரகம் தேசிய அளவிலான புதிய வக்ப் வாரியத்தை கட்டமைக்க உள்ளதாகவும் இந்த வாரியம் வெறும் 24 சதவீத வக்ப் நிலங்களை மட்டும் முஸ்லிம் சமூகத்திடம் கொடுக்கும் என்றும் மீதமுள்ள 76 சதவீத நிலங்களை தன்னுடைய  கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

லிபியா:கத்தாஃபியின் தலைமையகம் நேட்டோ தாக்குதலில் தகர்ந்தது

headquerters
திரிபோலி:அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் தலைமையகத்தின் மீது நேட்டோ ராணுவம் நடத்திய பலத்த தாக்குதல் நடத்தியது. இரண்டு தடவை நடந்த ஏவுகணை தாக்குதலில் பாப் அல் அஸீஸாவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கத்தாஃபியின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு அவர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுவரும் கத்தாஃபியின் படையினரை கீழ்படிய செய்வதற்கான தீவிர முயற்சியில் நேட்டோ ஈடுபட்டுள்ளது.

முஹம்மது யூனுஸ் ஊழல் புரியவில்லை-பங்களாதேஷ் விசாரணைகுழு

mohamed younus
டாக்கா:நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷ் கிராமீய வங்கி ஸ்தாபகர் முஹம்மது யூனுஸுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு சரியல்ல என அரசு நியமித்த விசாரணை குழு கண்டறிந்துள்ளது. கிராமீய வங்கிக்கான நார்வே நாட்டின் உதவியை யூனுஸ் அபகரித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.

ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் பார்வையில் தீவிரவாத அமைப்பு – கார்டியன்

லண்டன்:பாகிஸ்தான் உளவு அமைப்பான இண்டர் சர்வீஸ் இண்டலிஜன்ஸை (ஐ.எஸ்.ஐ) அமெரிக்க அதிகாரிகள் தீவிரவாத அமைப்பாக பரீசிலித்துள்ளனர்.

தாலிபான் மற்றும் அல்காயிதா போலவே ஐ.எஸ்.ஐ மூலம் உலகம் அச்சுறுத்தலை சந்திக்கிறது. இத்தகவல்களை கார்டியன் பத்திரிகை அமெரிக்க அதிகாரிகள் மட்ட ரகசிய மையங்களிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடைய சிறைக்கைதிகளை அல்காயிதா, ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய சிறைக் கைதிகளை போலவே தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெறச் செய்ய அதிகாரிகளுக்கு சிபாரிசுச் செய்யப்பட்டதாக கார்டியன் கூறுகிறது.

இத்தகைய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தீவிரவாத செயல்களிலும், கலவரங்களிலும் தொடர்புடையவர்கள் என்பதற்கான அறிகுறியாகும் என 2007-இல் ஒரு ஆவணத்தை மேற்கோள்காட்டி கார்டியன் கூறுகிறது.

சாயிபாபா:மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத கொலைகள்

police-shootings-sai-babas-bedroom

ஹைதராபாத்: 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்தி நிலையத்தில் நடந்த ஆறு கொலைகள் குறித்த மர்மம் சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் விவாதத்தை கிளப்பும்.

ஆரம்பத்தில் போலீசும்,பின்னர் சி.பி.ஐயும் இதனைக் குறித்து விசாரணை நடத்திய பொழுதும் இச்சம்பவத்தின் பின்னணியைக் குறித்து உண்மையை வெளிக்கொணர இயலவில்லை. மேல்மட்ட தலையீடுதான் உண்மை வெளிவர தடையாக மாறியது என குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

1993 ஜூன் 6-ஆம் நாள் 25 க்கும் 40 வயதுக்குமிடையேயான பருவமுடைய நான்கு மாணவ பக்தர்களும், ஆசிரமத்தில் வசித்த இருவரும் கொல்லப்பட்டனர். சாயிபாபாவுடன் மிக நெருங்கிய பிரசாந்திநிலையத்தில் வசித்து வந்தவர்கள்தாம் கொல்லப்பட்டவர்களாவர். கத்திகளுடன் பாபாவின் அறைக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை தடுக்க முயன்றபோது பாபாவின் அந்தரங்க உதவியாளர் ராதாகிருஷ்ணனும், ஆசிரமத்தில் வசித்த இன்னொரு நபரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ரகளையை கேட்ட சாயிபாபா பின்வாசல் வழியாக தப்பிவிட்டார் என கூறப்பட்டது.

குஜராத் இனப்படுகொலை:நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு புறக்கணித்தது – சஞ்சீவ் பட்

15472014-8467-43fc-a484-8a0a9bb083a9MediumRes
புதுடெல்லி:”குஜராத் இனப் படுகொலையில் பெரும் புள்ளிகளின் பங்கினைக் குறித்து நான் அளித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு அலட்சியம் செய்தது” என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

“நான் அளித்த ஆதாரங்களை பரிசோதிக்கக்கூட ஆர்.கே.ராகவன் தலைமையிலான புலனாய்வுக்குழு தயாராகவில்லை” என உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ்:நிரபராதிகளை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கும் அமெரிக்கா

1212
வாஷிங்டன்:சிறைக்கைதிகளை சித்தரவதைச் செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகிறது.

‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் குறைந்த அளவு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Monday, April 25, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம்:குற்றப்பத்திரிகையில் கனிமொழி

Kanimozhi_S_10_03_2011
புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் பெயர் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அதேவேளையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை.

ஆப்கானில் சிறையிலிருந்து தப்பிய 500 கைதிகள்

taliban-404_679055c
காபூல்: ஆப்கானிஸ்தான் காந்தஹாரில் 500 தாலிபான் போராளிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.

ஆனால், 476 பேர் சிறையிலிருந்து தப்பியதாக சிறை இயக்குநர் குலாம் தஸ்திர் மாயார் அறிவித்துள்ளார். சிறைக்குள்ளாக 360 மீட்டர் சுரங்கப் பாதையை உருவாக்கி இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

கல்மாடியை கைது செய்தது சி.பி.ஐ.

Kalmadi_571241e
புதுடெல்லி:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. விசாரணையில் பங்கேற்பதற்காக சி.பி.ஐ தலைமையகத்திற்கு வருகை தந்த கல்மாடியை முறைப்படி சி.பி.ஐ கைது செய்தது.

சிரியாவில் ரகசிய போலீஸின் கோரத் தாண்ட​வம்

article-1377676-0B91D1B600000578-128_468x346
டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பு மக்கள் எழுச்சி கிளர்ந்துவிட்டெரியும்சிரியாவில் ரகசிய போலீஸின் கோரத்தாண்டவம் அரங்கேறுகிறது.

டமாஸ்கஸின் அண்மை பிரதேசமான ஹரஸ்தாவில் நேற்று அதிகாலை வீடுகளில் போலீஸ் ரெய்டு நடத்தியது. இதேவேளையில் நாடுமுழுவதும் ரகசிய போலீஸின் ரெய்டுகள் நடத்தப்பட்டன. தெற்கு நகரங்களான ராகா, இத்லிப், ஹலப் ஆகிய இடங்களில் நிரபராதிகள் கைது செய்யப்பட்டனர். இங்குள்ள வீடுகளில் கதவை உடைத்துக்கொண்டு திடுதிப்பென்று நுழைந்த ரகசிய போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கியது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது

aimlb
ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர்.  அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக தன்னை இணைத்துக் கொள்ளவும் தீமானிக்கப்பட்டுள்ளது.

யெமன்:30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் – ஸாலிஹ்

shaleh yemen president
ஸன்ஆ:அரபு நாடுகள் முன்வைத்த ஒப்பந்தத்தின் படி 30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் என யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார். 32 வருடங்களாக பதவியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசுக்கெதிராக நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மேலும் இரத்தக்களரியை தடுப்பதற்கான முயற்சிதான் இது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான்:அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிரான போராட்டம் வலுவடைகிறது

imrankhan protest
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் நேட்டோ ராணுவம் நடத்திவரும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையில் நடைபெறும் போராட்டம் வலுவடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் நேட்டோ படையினருக்கு பாகிஸ்தான் எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கக்கோரி வடமேற்கு பாகிஸ்தானில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் தடையை ஏற்படுத்தியுள்ளனர். நேட்டோ படையினருக்கான 70 சதவீத பொருட்களும் பாகிஸ்தான் மூலமாகத்தான் ஆப்கானிஸ்தானிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக

121216298
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

தேசத்துரோக சட்டம் தொடர்பாக விவாதம் தேவை – டாக்டர்.பினாயக் சென்

sen2
போபால்:தேசத்துரோக சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென பிரபல மனித உரிமை ஆர்வலர்ம்,மருத்துவருமான பினாயக் சென் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என குற்றஞ்சாட்டி தேசத்துரோக குற்றம் சுமத்தி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பினாயக் சென்னுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

பாப்ரிமஸ்ஜித்:வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – முஸ்லிம் தனியார் சட்டவாரியம்

law
ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி மற்றும் பால்தாக்கரேவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்

imagesCADW5OA8
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம்:பா.ஜ.க பொருளாளர் ப்யூஷ் கோயலுக்கு தொடர்பு – சி.பி.ஐக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள்

 
2gபுதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பா.ஜ.கவின் தேசிய பொருளாளர் ப்யூஷ் கோயலின் பங்கினை நிரூபிக்கும் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளன.

சி.பி.ஐ கைது செய்த டி.பி ரியாலிட்டி ப்ரமோட்டர்ஸ் ஷாஹித் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோருடன் கோயலின் தொடர்பை நிரூபிக்கும் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயலின் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தப்போவதாக கூறப்படுகிறது.

Dua For Gaza