Wednesday, November 30, 2011

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

imagesCAH12VU1
பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான்:பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்

imagesCA4CEZGF

டெஹ்ரான்:ஈரான் தலைநகரான டெஹ்ரானில் பிரிட்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அந்நாட்டின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் அங்கு நாட்டப்பட்டிருந்த பிரிட்டன் கொடியை எரித்துவிட்டு ஈரான் கொடியை ஏற்றினார்.

தூதரகத்தின் மீது மக்கள் கற்கள் வீசுவது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த காட்சி ஆகியவற்றை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

நார்வே:77 பேரை படுகொலை செய்த ப்ரெவிக்கிற்கு பைத்தியமாம் – அறிக்கை கூறுகிறது

brevik
ஓஸ்லோ:நார்வே கொலையாளி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் சித்த பிரமை பிடித்துள்ளது என மனோதத்துவ அறிக்கை கூறுகிறது.

ப்ரெவிக்கை பரிசோதித்த மனோதத்துவ நிபுணர்கள்தாம் இதனை தெரிவித்துள்ளனர். கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் கற்பனையான எண்ணங்களை கொண்ட ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் ப்ரெவிக் இருந்ததாக இரண்டு மனோதத்துவ நிபுணர்கள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நலப்பணியாளர்கள்: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? – உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி

dsc
டெல்லி:தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.

முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை எல்லாம் தற்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு முடக்கி வருகிறது.சட்டப்பேரவை கட்டிடம், சமச்சீர் கல்வி, கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றில் ஜெ.அரசின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் ஏற்றுவோம் என மிரட்டல் – சிகிட்சையை நிராகரித்தார் ஹஸன் அலி

hasan-ali-1_230_032411094006
புதுடெல்லி:கறுப்பு பண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ஹஸன் அலி கான் மருத்துவமனையில் சிகிட்சையை நிராகரித்துவிட்டார். அரசுக்கு சொந்தமான ஜே.ஜே மருத்துவமனையில் ஹஸன் அலி சிகிட்சை பெற்று வருகிறார்.

ஒரு கோடி ரூபாய் அளிக்காவிட்டால் உடலில் எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் ஏற்றிவிடுவேன் என டாக்டர்களில் ஒருவர் மிரட்டியதாக ஹஸன் அலி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையில் அமைந்துள்ள சிறை வார்டில் இவர் சிகிட்சை பெற்று வருகிறார். ஹஸன் அலி கான் எந்த டாக்டரையும் தன்னை சிகிட்சை செய்ய அனுமதிக்க மறுப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்பால்:மீண்டும் உண்ணாவிரதம் – ஹஸாரே மிரட்டல்

imagesCAOSOEL9
புதுடெல்லி:லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்ற குழு தயார் செய்த வரைவு அறிக்கை நாட்டு மக்களை ஏமாற்றுவதாகும் எனக் கூறியுள்ள அன்னா ஹஸாரே அடுத்த மாதம் 27-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை துவக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக அடுத்த மாதம் 11-ஆம் தேதி ஜந்தர்மந்தரில் தர்ணா நடத்தப்போவதாகவும் ஹஸாரே அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tuesday, November 29, 2011

ஈராக்:சிறைக்கு வெளியே குண்டுவெடிப்பு-19 பேர் மரணம்

A man who was wounded in a bomb attack is treated at a hospital in Baghdad.
பாக்தாத்:வடக்கு பாக்தாதில் சிறைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாக்தாதிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தாஜியில் ஹூத் சிறைக்கு அருகே வெடிப்பொருட்கள் நிரப்பிய கார் வெடித்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில தினங்களிடையே ஈராக்கில் நடக்கும் 3-வது குண்டுவெடிப்பாகும்.

சனிக்கிழமை அபூகரீப் மாகாணத்தில் நடந்த கண்ணிவெடித்தாக்குதலில் 10 பேரும், அதற்கு முந்தைய தினம் துறைமுக நகரமான பஸ்ராவில் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் 19 பேரும் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தை கைவிடும் தாலிபானுக்கு மாதம் 150$ நிதியுதவி: நேட்டோ அறிவிப்பு

untitled

வாஷிங்டன்:தாலிபான்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டால் மாதம் 150 அமெரிக்க டாலர் நிதியுதவி மற்றும் கொலை குற்றச்சாட்டுகளிலிருந்து பொது மன்னிப்பு வழங்கபடுமென நேட்டோ அறிவித்துள்ளதாக செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

அமெரிக்க, இங்கிலாந்து வீரர்களை குறிவைத்து தாலிபான்கள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தடுப்பதற்கு அமெரிக்க தலைமையிலான நேட்டோ இதனை அறிவித்துள்ளது எனத் தெரிகிறது.

குண்டுவைக்க பணம் – வாக்குமூலத்தை சிபிஐ மிரட்டி வாங்கியதாக பல்டி அடிக்கும் அசீமானந்த்

asimanand
டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்;’என்னை மிரட்டி வாங்கிய வாக்குமூலம் அதை, நான் பின்வாங்கிய பின்னும், எந்த நீதிமன்றமும் குறிப்பிடாதபோது எவ்வாறு அதை எடுத்துக்கொள்ளலாம்?, எப்படி தேசிய புலனாய்வு அமைப்பு மாலேகான் வழக்கில் முஸ்லிம் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொள்ளலாம், இந்த விவகாரங்களை எப்படி மத்திய அரசு அமெரிக்காவுடனும் ஐநாவுடனும் பகிர்ந்து கொள்ளலாம்?’ என கேட்டு எழுதியுள்ளார்.

Monday, November 28, 2011

முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்

வாஷிங்டன்:ஜான் பெநிதெஸ், மிச்சிகன் மகாணத்தில  சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்தார். அமெரிக்காவின் அதிக முஸ்லிம்களை கொண்ட மகாணத்தில் இதுவும் ஒன்று. அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் போதிலும், இங்கு செவிலியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.

உதவிக்காக வரும் முஸ்லிம் நோயாளிகளிக்கு எதிராக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். இருப்பினும் ஒரு முஸ்லிம் மேலதிகாரி, ஹிஜாபுடன் வரும் முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்கள் தொடுவதை விரும்பமாட்டார்கள் எனவே என்னிடம் அழைத்து வரும்படி கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு டெல்லி அருகிலேயே உள்ளது- இ.அபூபக்கர்

abu
புதுடெல்லி:அரசியலில் சக்திப் பெறுவதன் மூலமாகவே முஸ்லிம்களுக்கு சமூக நீதி கிடைக்கும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் ஸாஹிப் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். டெல்லி மிகவும் தொலைவில் உள்ளது என முன்பு ஒரு முகலாய மன்னர் கூறியது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்டிற்கு டெல்லி அருகிலேயே உள்ளது என அவர் கூறினார்.

தெருக்களில் வாழும் முஸ்லிம்களுக்கு போலீசாரை கண்டு பயம்: ஸய்யித் ஷஹாபுத்தீன்

vlcsnap-2011-11-28-08h54m09s247

புதுடெல்லி:இந்தியா முழுவதும் உள்ள தெருக்களில் முஸ்லிம்கள் போலீசாரை பயந்து வாழும் சூழல் நிலவுவதாக ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராவின் தலைவர் ஸய்யித் ஷஹாபுத்தீன் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூகநீதி மாநாட்டில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார் அவர். முஸ்லிம்கள் போலீசாருக்கு பயந்து வாழும் சூழலை முடிவுக்கு கொண்டுவந்தே தீரவேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் அதனை நிறைவேற்றாமலும் இருந்து வருகின்றனர். ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. முஸ்லிம்கள் மீது தீவிரமாக பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியம் நிறைவேறும் – மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்

Mahant Acharya Ayodya
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது: ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே போல நடத்தப்படவேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு

Social Justice conference Grand Public Meet. mulayam singh
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.

ஹிந்துத்துவா மிரட்டல்:ஹுஸைன் டாக்குமெண்டரி வெளியிடுவது ஒத்திவைப்பு

'Through The Eyes Of A Painter'1967

பனாஜி:பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுஸைன் தயாரித்த ஆவணப்படத்தை ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்கள் வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழாவின் நினைவு அஞ்சலி பிரிவில் இன்று வெளியிடப்படவிருந்த ஹுஸைன் கதை எழுதி இயக்கி தயாரித்த  ‘த்ரூ த அய்ஸ் ஆஃப் த பெயிண்டர்’  என்ற ஆவணப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sunday, November 27, 2011

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்

shahi-imam
புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

மொரோக்கோ தேர்தல்:இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி

morocco
ரபாத்:அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் மொராக்கோவில் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(பி.ஜெ.டி) பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.

முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானபோது 395 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாகும் என உள்துறை அமைச்சர் தய்யிப் ஷெர்காவி அறிவித்துள்ளார். இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

ImranKhan

பெஷாவர்:’எனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு பின்னணியில் எந்த ரகசிய சக்தியும் இல்லை’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

பெஷாவரில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் வளர்ச்சிக்கு தடைபோட முடியாது. இது இந்நாட்டில் உள்ள அனைவரது கட்சியாகும் என இம்ரான் கான் தெரிவித்தார். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் பின்னால் தேசவிரோத சக்திகள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார் அவர். வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்தால் முன்னரே தேர்தல் நடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என அவர் கூறினார்.

Saturday, November 26, 2011

ராம்லீலா மைதானம் தயார்: சமூக நீதி மாநாட்டிற்கு இன்று துவக்கம்

pfi sjc
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய சமூக நீதி மாநாட்டிற்காக டெல்லி ராம்லீலா மைதானம் தயாராகி உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கொடி ஏற்றி மாநாட்டை துவக்கி வைப்பார்.

சுதந்திரத்திற்கு பிறகு ஏராளமான அரசிய, சமூக மாநாடுகளுக்கு சாட்சியம் வகித்துள்ள ராம்லீலாவில் கேராளவிலிருந்து துவங்கி தமிழகம், கர்நாடகா என தென்மாநிலங்களில் ஆழமாக கால் பதித்து வட இந்தியாவை நோக்கி காலடி தடங்களை எடுத்துவைத்துள்ள பாப்புலர் ஃப்ர்ண்ட் என்ற நவீன சமூக இயக்கம் சமூக நீதிக்காக நடத்தும் இம்மாநாடு ஏராளமான எதிர்பார்ப்புகளை அளிப்பதாக அவ்வமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குவைத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

kuwait opposition

குவைத்:பாராளுமன்றத்தில் போலீசாருடன் நடந்த மோதலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 20 குவைத் எதிகட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத காவல் மற்றும் போலீசாரின் கொடூரமான நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சி ஆதரவாளர்கள் சோசியல் இணையதளமான ட்விட்டரில் கூறியுள்ளனர்.

குற்றவாளிகளை அடைத்துவைக்கும் சிறையில் எதிர்கட்சி தொண்டர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், உறவினர்களை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இம்மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 31 பேரின் காவலை நீட்டியதை தொடர்ந்து இவர்கள் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான எதிர்கட்சி தொண்டர்கள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அரசு அலுவலகத்திற்கு முன்பு திரண்டிருந்தனர்.

ஈரானில் 12 சி.ஐ.ஏ உளவாளிகள் கைது

imagesCAZ286ZI

டெஹ்ரான்:ஈரானின் ராணுவத்தைக குறித்தும், அணுசக்தி திட்டத்தை குறித்தும் உளவறிந்த அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏவின் 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானின் தேசிய-பாதுகாப்பு வெளியுறவு விவகார பாராளுமன்ற குழு உறுப்பினர் பர்வேஸ் ஸுரூரியை மேற்கோள்காட்டி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஹஸாரேயின் கிராமத்தில் என்.சி.பி போராட்டம்

NCP-clash-
ரலேகான் சித்தி:மத்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்தை தொடர்ந்து ஹஸாரே வெளியிட்ட மோசமான விமர்சனத்தை தொடர்ந்து அவருடைய சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் என்.சி.பி(தேசியவாத காங்கிரஸ்) தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பவாரை தாக்கியதை கண்டித்து முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள என்.சி.பி ஹஸாரே மன்னிப்பு கோரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. யாதவ் பாவா கோயிலை நோக்கி பேரணியாக சென்ற என்.சி.பி தொண்டர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

ஜே டே கொலை:மூத்த பெண் பத்திரிகையாளர் கைது

jede and vora
மும்பை:மிட் டே பத்திரிகையின் ரிப்போர்ட்டர் ஜோதிர்மயி டேயின்(ஜே டே) கொலைத் தொடர்பான வழக்கில் மூத்த பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிகையான ஏசியன் ஏஜின் டெபுட்டி பீரோ சீஃப் ஜிக்னா வோரா என்பவர்தாம் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஆவார். ஜே டேவை கொலைச்செய்ய நடந்த சதித்திட்டத்தில் ஜிக்னா வோராவுக்கு பங்கிருப்பதாக துணை போலீஸ் கமிஷனர்(க்ரைம்) ஹிமாம்ஷு ராய் கூறியுள்ளார்.

கிஷன்ஜி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டாரா?

kishenji2
புதுடெல்லி/கொல்கத்தா:மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.

கிஷன்ஜி கைது செய்த பிறகு அவரை சுட்டுக் கொன்றதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என சி.பி.ஐ கட்சியின் தலைவர் குருதாஸ்  தாஸ் குப்தா கூறியுள்ளார். இதுத்தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் சிதம்பரத்திடம் தொலைபேசி மூலமும் இக்கோரிக்கையை வைத்துள்ளார்.

Friday, November 25, 2011

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி மோதலில் படுகொலை

kishenji
கொல்கத்தா:மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஷ்வர் ராவ் என்ற கிஷன்ஜி மேற்கு வங்காள மாநிலம் ஜங்கல் மஹலில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜாம்பூனி பகுதியில் நடந்த மோதலில் நான்கு மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு மாவோயிஸ்ட் தலைவரான சுசித்ரா மஹோட்டாவிற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

லிபியாவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறையில் அடைப்பு – ஐ.நா

திரிபோலி:ஏழு ஆயிரத்திற்கும் அதிகமானோர் லிபியாவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

பெண்கள், வெளிநாட்டவர், குழந்தைகள் ஆகியோர் இவர்களில் அடங்குவர். லிபியாவின் நிலைமைகளை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் திங்கள் நடைபெறவிருக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. சில கைதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சிலருக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தயார் செய்த அறிக்கை கூறுகிறது.

சிரியாவில் மோதல்:ராணுவ நடவடிக்கையில் 41 பேர் மரணம்

கெய்ரோ:ராணுவ நடவடிக்கையில் சிரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி இச்செய்தியை அல்ஜஸீர்  வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை ரஸ்தானில் ஃப்ரீ சிரியன் ஆர்மியின் மையங்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதலை நடத்தியது. இப்பகுதியில் பல நாட்களாக எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய நெடுஞ்சாலையை மீட்டதாக ராணுவம் கூறுகிறது. இங்கு நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஷ்ரத்தை குறித்து அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கேட்க பிரமுகர்கள் கோரிக்கை

புதுடெல்லி:குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் மோடி போலீசாரால் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள சூழலில் பாலியல் ரீதியாக இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கோரவேண்டும் என ஜாமியா டீச்சர்ஸ் சோலிடாரிட்டி தலைமையில் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர் என உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் கூறிய ஜி.கே.பிள்ளை அவருக்கு எதிராக பாலியல் ரீதியான அவதூறையும் சுமத்தியிருந்தார். பல ஆண்களுடன் ஹோட்டலில் தங்கியிருந்தார் என இஷ்ரத்தை குறித்து அவதூறை கூறியிருந்தார் ஜி.கே.பிள்ளை.

ஹக்கானி பதவி பறிப்பு: அமெரிக்காவிற்கான புதிய பாக்.தூதர் ஷெரி ரஹ்மான்

sherry rehman

இஸ்லாமாபாத்:மெமோ சர்ச்சையை தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஹுஸைன் ஹக்கானிக்கு பதிலாக பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியின் பிரமுகரும், முன்னாள் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஷெரி ரஹ்மானை பாக்.அரசு நியமித்துள்ளது. ஷெரி ரஹ்மான் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் பாக்.பிரதமர் பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய தோழி ஆவார்.

Thursday, November 24, 2011

ஈராக் ஆக்கிரமிப்பு:புஷ்ஷும், ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசிய தீர்ப்பாயம்

AP0607280160191-460x307
கோலாலம்பூர்:ஈராக்கை ஆக்கிரமிக்கும் வேளையில் போர் குற்றங்களை புரிந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசியாவின் போர் குற்றத்திற்கான தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

இதுக்குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆக்கிரமிப்பிற்கு தலைமை தாங்கியதன் மூலமாக இருவரும் இனப் படுகொலையையும், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளனர். சட்டத்தையும், நீதியையும் பார்வையாளராக மாற்றிவிட்டு ஆக்கிரமிப்பு ராணுவம் ஈராக்கில் கூட்டுப் படுகொலையை நடத்தியுள்ளது.

Wednesday, November 23, 2011

பஸ் கட்டணம் உயர்வு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

imagesCAQH6BR7
சென்னை:பஸ் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டது ஏன் என்பது குறித்து 3 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் புகழேந்தி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  தனித்தனியே  மனு தாக்கல் செய்தனர். அதில்  கூறியிருப்பதாவது:

கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக் மக்கள் வழக்கு பதிவு

பாக்தாத்:சிவிலியன்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நடத்திய குற்றங்களின் பெயரால் அமெரிக்க அரசு மற்றும் ராணுவத்தின் மீது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈராக் மக்கள் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.

ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு முதல் நாட்டின் சாதாரண குடிமக்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை வழக்கறிஞர்களை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி கூறுகிறது.

எகிப்தில் நான்காவது நாளாக போராட்டம் தீவிரம்

egypt-7_2063377b
கெய்ரோ:சிவிலியன் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைக்க கோரி ராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் போராட்டம் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் தஹ்ரீல் சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவில் திரண்டுள்ளனர்.

புதிய சம்பவங்களை குறித்து ராணுவ தலைமை அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் பிரம்மாண்ட பேரணிக்கு எதிர்ப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நான்கு தினங்களிடையே 35 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான மோதல் நேற்றும் தஹ்ரீர் சதுக்கம், கெய்ரோவின் அண்மைப் பிரதேசங்களில் தீவிரமடைந்தது. இதனால் நிலைமை மோசமடைந்துள்ளதாக பி.பி.சி கூறுகிறது.

பணம் கொடுத்து செய்தி வெளியிடல்: ப்ரஸ் கவுன்சிலில் 30 புகார்கள்

paid newsபுதுடெல்லி:பணம் கொடுத்து செய்தி வெளியிட்டது தொடர்பாக இந்தியாவில் பத்திரிகைகள் மீது  2009-ஆம் ஆண்டு முதல் 30 புகார்கள் ப்ரஸ் கவுன்சிலுக்கு கிடைத்துள்ளதாக செய்தி ஒலிபரப்பு இணை அமைச்சர் ஜய்வந்த் ராவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா மீது மேலும் வழக்கு

imagesCAGTU0ZB

பெங்களூர்:நிலபேர ஊழல் வழக்கில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா மற்றும் இதர 2 பேர் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

க்ரிமினல் நடவடிக்கை தொடர்பான பிரிவின் படி விசாரணை நடத்தி வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்க போலீஸ் சூப்பிரண்டிற்கு லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதி என்.கே.சுதீந்தர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் போலீஸ் 2002-ஆம் ஆண்டு முதல் நடத்திய 20-க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகள்

Encounter_295
புதுடெல்லி:குஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது. இதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.

முன்னெச்சரிக்கை காவலை காலவரையற்று நீட்டுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம்

police custody
புதுடெல்லி:முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைப்பதை காலவரையற்று நீட்டுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நாட்டில் அதிகரிக்கும் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களின் வாழ்வதற்கான உரிமையை மீறும் செயலாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்வர்களின் சார்பாக புகார் அளிப்பதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் இருந்தால் ஹேபியஸ் கார்பஸ்(ஆள்கொணர்வு மனு) மூலமாக இவர்களை ஆஜர்படுத்தி மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாப்பது நீதிமன்றத்தின் தர்மம் ஆகும் என நீதிபதிகளான எ.கே.கங்கூலி, ஜெ.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

போலிஎன்கவுண்டர்:முன்னாள் ஐ.பி தலைவரையும் விசாரிக்க வேண்டும் – மனித உரிமை ஆர்வலர்கள்

புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் போலி என்கவுண்டர் நிபுணர் டி.ஜி.வன்சாராவுக்கும், அவரது கும்பலுக்கும் முஸ்லிம்களை கொலைச் செய்வதற்கு உதவியாக இண்டலிஜன்ஸ் அறிக்கையை தயார் செய்த குஜராத் இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) முன்னாள் இயக்குநர் ராஜேந்திர குமாரிடம் விசாரணை நடத்தவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரான ராஜேந்திரகுமார், வன்சாராவுக்கும் அவரது கும்பலுக்கும் தேவையான போலி இண்டலிஜன்ஸ் அறிக்கைகளை தயார் செய்து அளித்தார் என குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

பா.ஜ.க முன்னாள் எம்.பி உள்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு

ஜெய்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், பாஜக முன்னாள் எம்பி, 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வேலை தேடி ராஜஸ்தானுக்கு வந்துள்ளார். அங்கு அந்த பெண்ணை முன்னாள் ராஜஸ்தான் அமைச்சர் ஜோகிஸ்வர்கார்க், பாஜக முன்னாள் எம்.பி. நிகல்சந்த்மொவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமில் ராவ், மஹாவீர் உட்பட 17 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த 17 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, November 22, 2011

தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தீவிரம்: மரண எண்ணிக்கை 35 ஆக உயர்வு

1121-Egypt-protests-Tahrir-Square_full_380
கெய்ரோ:ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து விரைவில் அதிகாரத்தை சிவில் அரசிடம் ஒப்படைக்கக்கோரி எகிப்தில் துவங்கிய போராட்டம் மூன்றாம் நாளான நேற்று மேலும் தீவிரமடைந்துள்ளது.

முன்னர் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக காரணமாக இருந்த மக்கள் புரட்சியின் மையமான தஹ்ரீர் சதுக்கத்தில் போலீசாரும், எதிர்ப்பாளருகளும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 35 பேர் மரணித்துள்ளதாகவும், சதுக்கத்தில் போர் சூழல் நிலவுவதாகவும் அல்ஜஸீரா தெரிவிக்கிறது. 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கோத்ரா ரெயில் எரிப்பு: சதித் திட்டமாக இருக்காது – சஞ்சீவ் பட்

sanjeevbhatt-nov21-act
புதுடெல்லி:கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் சதித் திட்டமாக இருக்காது மோடி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

கோத்ரா ரெயில் திரும்பி வருவது குறித்து எவருக்கும் எந்தவொரு விபரமும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் புலனாய்வு ஏஜன்சிகளின் தோல்வியாகும். ரெயில் திரும்பி வருவது குறித்து அவர்களுக்கும் எத்தகவலும் கிடைக்கவில்லை என சஞ்சீவ் பட் கூறினார்.

ஜெ.வின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரும் உயர்நீதிமன்ற உத்தரவு

chennai high court

சென்னை:முந்தைய தி.மு.க அரசின் மீதான மக்கள் எதிர்ப்பலையில் ஆதாயம் பெற்று ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

பெரும்பாலான மக்களால் பாராட்டப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க நினைத்து உச்சநீதிமன்றம் வரை ஜெயலலிதா அரசு சென்ற பிறகும் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. சென்னை கோட்டூர் புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்ட முட்டாள்தனமான நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் கருத்து வெளியிட்டது.

பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

scourt

புதுடெல்லி:பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கிலில் நடந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆயுதங்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஊழல் புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஊழல் வெளியாகி 12 ஆண்டுகள் கழிந்த பிறகும் இதுவரை ஒருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசால் இயலவில்லை என இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது

imagesCAVTOL0V
புத்தூர்(கர்நாடகா):முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் சோஷியல் நெட்வர்க் இணையதளமான ஃபேஸ்புக்கில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்த மாணவன் பொன்னப்பா(வயது 19) என்பவனை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

போலி என்கவுண்டர் படுகொலை: மோடியின் ரத்த தாகத்திற்கு மேலும் ஒரு ஆதாரம்

Ishrat-fack-encounter
அஹ்மதாபாத்:மிகவும் சர்ச்சையை கிளப்பிய இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் சம்பவம் போலியானது என குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்ததை தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்களின் இரத்த தாகம் மீண்டும் ஒரு நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசத்தை பரப்பி தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ள நபர் என்ற இமேஜை உருவாக்கி தன் மீது பரிதாபத்தை உருவாக்க திட்டமிட்ட மோடியின் நரி தந்திரத்தின் ஒரு பகுதிதான் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம்.

புகுஷிமா:இஸ்ரேல் மீது ஜப்பான் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

Yoishi Shimatsu, a former editor of Japan Times Weekly

டோக்கியோ:பூகம்பம் மற்றும் சுனாமியினால் அணுக்கதிர்களின் கசிவு ஏற்பட்டுள்ள ஜப்பானின் புகுஷிமா அணுசக்தி நிலையத்தின் விபத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஜப்பானைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரபல ஜப்பான் பத்திரிகையான ஜப்பான் டைம்ஸ் வீக்லியின் முன்னாள் எடிட்டர் யோய்ஷி ஷிமாஸு இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

புகுஷிமா அணுசக்தி நிலையத்திற்கான அணுசக்தி எரிபொருளில் இஸ்ரேலிய அரசு மோசடி செய்துள்ளதாக ஷிமாஸு கூறுகிறார். அமெரிக்காவின் ஹுஸ்டனில் இருந்து 2007-ஆம் ஆண்டு புகுஷிமாவுக்கு அனுப்பப்பட்ட அணுசக்தி தயாரிக்க தேவையான உபகரணங்களில் மிகச் சிறந்தவற்றை எடுத்துவிட்டு பதிலாக பழைய உபகரணங்களை இஸ்ரேல் வைத்துள்ளது என ஷிமாஸு குற்றம் சாட்டுகிறார். ஜப்பானுக்கும்,அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி பரிவர்த்தனைகளில் மத்தியஸ்தர் என பொய்க்கூறி இஸ்ரேல் தலையிட்டுள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டே இதனை நடத்தியுள்ளது என அவர் கூறுகிறார்.

Monday, November 21, 2011

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொலைச் செய்யப்பட்டது போலி என்கவுண்டரில் – எஸ்ஐடி அறிக்கை

Ishrat fack encounter
அகமதாபாத்:குஜராத்தில் முஸ்லிம் கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லபட்டது போலி என்கவுண்டரில் என்று சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) குஜராத் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முஸ்லிம் கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்கிற பிரனீஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் 2004ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி அகமதாபாத் அருகே குற்றப் பிரிவு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்துக் கூறிய குஜராத் காவல்துறை, இந்த நால்வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல வந்த படையினர் என்றும் தெரிவித்தது.

ஹைதராபாத்:போலீசில் சேரும் ஹிந்துத்துவாவாதிகளுக்கு பயிற்சி அளித்த ராஜாசிங்

ஹைதராபாத்:ஹைதராபாத் நகரில் கடந்த பக்ரித் பண்டிகை முதல் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜா சிங் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். அவரிடம் இருந்து காவல்துறை பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணையில் ஹிந்துத்வா வாதிகள் ஆந்திர காவல்துறையில் சேருவதற்கு தாம் பயிற்சி அளித்ததை ராஜா சிங் உறுதி செய்துள்ளார்.

இனி நான்கு தினங்கள்: சமூக நீதி மாநாட்டிற்கு வரலாற்று சிறப்பு மிக்க தலைநகரம் தயாராகிறது

sjc
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு இனி நான்கு தினங்களே மீதமுள்ள நிலையில், மாநாட்டை வரவேற்க வரலாற்று சிறப்பு மிக்க இந்திய தலைநகரமான புதுடெல்லி தயாராகி வருகிறது.

வருகிற 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாநாடு நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை துவக்கி வைப்பார். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும். 27-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் மாநாடு நிறைவுறும். கருத்தரங்குகளிலும், பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

கல்லறையை திறந்த வழக்கில் டீஸ்டா ஸெடல்வாட் முக்கிய குற்றவாளி – மோடி அரசு

imagesCAH2LXWF
புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் கல்லறையை திறந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.

வழக்கில் விசாரணையை சந்தித்துவரும் டீஸ்டாவும், அவரது உதவியாளரான ரஈஸ் கான் பத்தான் ஆகியோர் பந்தவாடாவுக்கு அருகே அனுமதியில்லாமல் கல்லறையை திறந்த சம்பவம் திட்டமிட்டு செயல்படுத்தியது என மோடி அரசு கூறியுள்ளது.

மும்பை தாக்குதல்:3-ஆம் ஆண்டு நிறைவு – ஹெட்லி இன்னமும் விசாரிக்கப்படவில்லை

mumbai-attack4_630
மும்பை:மும்பை தாக்குதல் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இச்சம்பவத்திற்கு முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் டேவிட் கோல்மான் ஹெட்லியை விசாரணை செய்ய மும்பை போலீசாரால் இயலவில்லை.

ஹெட்லியையும், தஹாவூர் ராணாவையும் விசாரணை செய்ய அமெரிக்காவின் பதிலுக்காக மும்பை போலீஸ் காத்திருக்கிறது. இவர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தூதரக ரீதியான கடிதத்திற்கு இதுவரை அமெரிக்க நீதிமன்றம் பதிலளிக்கவில்லை.

கட்கரி-மோடி மோதல்: பா.ஜ.கவில் மீண்டும் கோஷ்டி பூசல் களைகட்டுகிறது

imagesCANQS465
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கவே குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அம்மாநிலத்திற்கு பிரச்சாரம் செய்ய வரவேண்டாம் என முன்னரே கோரிக்கை விடுத்துள்ளார் பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி.

பா.ஜ.க தலைவர்களிடையே நடைபெற்றுவரும் கோஷ்டி பூசல் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னர் பிரதமர் பதவியை குறிவைத்து மோடி நடத்திய நாடகங்களுக்கு எதிராக அத்வானி கும்பல் களமிறங்கியிருந்தது. அத்வானியின் மங்கிப்போன ரத யாத்திரை நேற்று டெல்லியில் களை இழந்து முடிவுற்ற வேளையில் கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ban

ஸ்ரீநகர்:ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு தடைவிதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்த வருகிறது. இணையதளத்தின் உள்ளடக்கம் கஷ்மீரில் மீண்டும் பிரச்சனையை உருவாக்கும் எனவும், ஆதலால் ஃபேஸ்புக்கை தடைச் செய்யவேண்டும் என போலீஸ் மாநில அரசிற்கு பரிந்துரைச் செய்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சைபர் குற்றங்கள் போலீசாருக்கு பெரும் சவாலாக திகழ்வதாக டி.ஜி.பி குல்தீப் கோதா அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார். இத்தகைய குற்றங்களை கண்டறிய ஸ்ரீநகர், ஜம்மு க்ரைம் தலைமையகம் ஆகியவற்றில் மூன்று சைபர் போலீஸ் ஸ்டேசன்களை நிறுவப்போவதாக அவர் தெரிவித்தார். தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோடை காலத்தில்தான் கஷ்மீர் அமைதியாக இருந்துள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்

images
ராமல்லா:இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பிய ஃபலஸ்தீன் இளைஞரின் வீடு மீது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் சட்ட விரோதமாக வசிக்கும் இஸ்ரேலிய யூதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெற்கு மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் உள்ள ஃபலஸ்தீன் இளைஞர் ஹானி ஜாபிரின் வீடு மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஸைஃபுல் இஸ்லாமிற்கு நீதியான விசாரணையை உறுதிச்செய்வோம் – என்.டி.சி

saif
திரிபோலி:நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மூத்த மகனும், கத்தாஃபி ஆட்சியில் முக்கிய நபருமான ஸைஃபுல் இஸ்லாமிற்கு நீதியான விசாரணையை உறுதிச்செய்வோம் என தற்காலிக அரசான தேசிய இடைநிலை குழு(என்.டி.சி) அறிவித்துள்ளது.

சவூதியில் வாகன விபத்து:14 பேர் மரணம்

sau_hail
ரியாத்/ஹைல்:மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த மினி பஸ் இன்னொரு வாகனத்துடன் மோதியதில் 12 பல்கலைக்கழக மாணவிகள் உள்பட 14 பேர் மரணித்துள்ளனர். நேற்று காலை ஹைலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மரீஃபகில் இவ்விபத்து நடந்துள்ளது.

கலீஃபத்து ஸுஹ்லா கிராமத்தில் இருந்து ஹைல் பல்கலைக்கழக மாணவர்களுடன் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஜீப் ஒன்றுடன் மோதியது. விபத்தில் பலியான மாணவர்கள் 18 வயதிற்கும் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.

சமூக நீதி மாநாட்டை வெற்றிபெறச் செய்ய கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை

புதுடெல்லி:இம்மாதம் 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு அனைத்து மாணவர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென இந்தியாவின் பிரபலமாகி வரும் துடிப்பு மிக்க மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பான அறிக்கையை அமைப்பின் தேசிய தலைவர் அனீஸுஸ்ஸமான், பொதுச்செயலாளர் சி.எ.ரவூஃப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Sunday, November 20, 2011

முன்னாள் அமைச்சர் மத்திய தொலைத் தொடர்புத் துறை சுக்ராமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை

sram_841197e
புதுடெல்லி:தொலைத்தொடர்பு ஊழல் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுக்ராமிற்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு ரூ.30 கோடி ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில்தான், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

ஸர்தார்புரா:கூட்டுப் படுகொலையை நிகழ்த்த தெருவிளக்கை நிறுவிய மின்சார வாரிய ஊழியர்கள்

imagesCA3LTKTU

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல் நடந்த ஸர்தார்புராவில் சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம் வீடுகளை அடையாளம் காண தெருவிளக்கு கம்பத்தில் ஹாலோஜன் விளக்கை மாட்டி உதவியவர்கள் குஜராத் மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆவர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரில் மூன்றுபேர் மின்சார வாரிய ஊழியர்களாவர். மதுர் பட்டேல், ஜயந்த் பட்டேல், கணேஷ் பிரஜாபதி ஆகியோர் ஆவர்.

Dua For Gaza