வரலாற்றில் ஏராளமான போர்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் துவக்கி வைத்த இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன.போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் மதம், தீவிர தேசியவாதம், இன வெறி, ஏகாதிபத்தியம் ஆகியன இருந்துள்ளதை நாமறிவோம்.
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
Monday, July 21, 2014
Saturday, July 19, 2014
உலகில் 3 இல் ஒரு பகுதி ஏழைகள் இந்தியாவில்!
புதுடெல்லி : உலகில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஐ.நா. 2014ஆம் ஆண்டின் “மில்லினியம் வளர்ச்சி இலக்குகள்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஐ.நா. தகவல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
Thursday, July 3, 2014
ரமலானில் உள்ளத்தை புதுப்பிப்போம்!
நம்பிக்கையாளர்களுக்கு ஆத்ம பரிசோதனைக்கும், சுய விமர்சனத்திற்குமான அபூர்வமான வாய்ப்பே ரமலான்.சுய விசாரணைகள் நம்பிக்கையாளரை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.வழி கேட்டிலிருந்து நேர்வழியை நோக்கியும், நேரான வழியில் மேலும் உறுதியுடன் செயல்படவும் ரமலான் மனிதனை வழி நடத்துகிறது.ஒரு நம்பிக்கையாளனின் வாழ்க்கை என்பது சுவனத்தை நோக்கிய பயணமாகும்.மறுமையில் விசாரணை வரும் முன்னர் அடிக்கடி தன்னை சுயமாக விசாரித்துக்கொள்ளவும், தனது செயல்களை நீதியின் தராசில் சீராக தூக்கிப்பார்த்து சரிச்செய்து கொள்ளவும் கற்பிக்கப்பட்ட சமூகமே முஸ்லிம்கள்.இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர்(ரலி) அவர்களின் பிரபலமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது:’நீங்கள் விசாரிக்கப்படும் முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்.நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்படும் முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்’. அருட்கொடைகளின் வசந்தகாலமான ரமலானில் நம்பிக்கையாளர்களின் விசாரணை பெரும்பாலும் தன்னைக் குறித்தே அமையும்.
Thursday, June 19, 2014
போராளிகளின் பார்வையில் நோன்பு
இன்றைய சூழ்நிலைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். ஒரு புறம் சமூகத்திற்கு பிரச்சனை, மற்றொரு புறம் சமூகத்திற்க்குள் பிரச்சனை. இந்த இரண்டையும் விவேகமாக கையாள்வதில் தான் இஸ்லாத்தின் வெற்றியும் நம்முடைய லட்சிய பயணத்தின் இலக்கும் அடங்கியிருக்கின்றது.
நம்முடைய (இஸ்லாத்தின்) எதிரிகள் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் துடைத்து எரிவதற்கு, முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்சியின் மூலம் இன்று ஆட்சிகட்டிலில் அமர்ந்து அவர்களுடைய நீண்ட நெடிய திட்டத்தை அடைந்திருக்கின்றனர்.
Sunday, June 1, 2014
அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
லேபிள்கள்:
அரசியல்,
இந்தியா,
கட்டுரை,
ஹிந்துத்துவா
Saturday, May 31, 2014
யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
லேபிள்கள்:
அரசியல்,
இந்தியா,
கட்டுரை,
ஹிந்துத்துவா
Wednesday, May 28, 2014
தியாகத்தின் நிழலில் இஸ்லாம்! – வலசை ஃபைஸல்
புதிதான கொள்கையின் காற்று வீச தொடங்கிய காலம். சமத்துவமும், சகோதரத்துவமும் என்னவென்றே தெரியாமல் இன்று இந்தியாவில் ஆரிய பாசிச வர்க்கங்கள் கொலை, கொள்ளை, இனவாதத்தின் பெயரில் வீடுகளை சூறையாடுவது, சக மனிதன் என்பதை மறந்து மனிதாபிமானம் என்றால் அதன் நிறம் என்ன என்று கேட்கும் அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றை பிளந்தெடுத்து தீக்கிரையாக்கும் கோரர்களை போன்று கொடியவர்களை கொண்ட அரபு மண் அது.
அங்கே அடிமைகளுக்கு ஆனந்தமாய், உண்மையாளர்களுக்கு ஒளியாய், மனித நேயம் உடையவர்களுக்கு மணமாய் அழகிய கொள்கையுடன் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம், அமைதி என்ற தென்றல் காற்றை சுமந்து வந்தது வஹீ என்னும் நபித்துவம்.
Tuesday, May 6, 2014
மே - 4 ஷஹீத்.திப்பு சுல்தான் இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த நாள்...!
‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது."ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிஷ்டம்".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
Monday, April 28, 2014
ஸமீரா அலி நஜாத்:கருணையின் நிறைகுடமான அன்னை!
ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.
Wednesday, February 5, 2014
இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?
இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 11, 2013
மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!
விலை குறைத்து விற்கவேண்டிய மருந்தகள் என அரசு பிறப்பிக்கும் உத்தரவானது அது பற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளி யான உடனேயே அமலுக்கு வரும்.அத்துடன் இந்த உத்தரவை 15 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் .மேலும் இந்த அவகாச காலத்தில் விற்காத இருப்புகளை உயர் விலையில் விற்கக்கூடாது என்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tuesday, September 10, 2013
‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘
1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது. அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.
லேபிள்கள்:
இந்தியா,
கட்டுரை,
ஹிந்துத்துவா
Saturday, September 7, 2013
அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !
நிகழ்வு 1 : கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சவுராசி பரிக்ரமா யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது விசுவ இந்து பரிசத் அமைப்பு. சரயு நதிக்கரையில் துவங்கி அயோத்தி நகரைச் சுற்றி 250 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவிருந்த இந்த யாத்திரை, இந்துக்களை தட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வி.எச்.பி அறிவித்திருந்தது. சுமார் 40,000 பேர் கலந்து கொள்ளக்கூடும் என்று அதிகார மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த யாத்திரைக்காக சுமார் 200 பேர்கள் வரையே கூடியிருந்தனர். அவர்களைக் கைது செய்ததோடு யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை. 144 தடையுத்தரவைத் தொடர்ந்து வி.எச்.பி அறிவித்திருந்த ஆர்பாட்டங்களும் பிசுபிசுத்துப் போயுள்ளன.
லேபிள்கள்:
கட்டுரை,
ஹிந்துத்துவா
Wednesday, September 4, 2013
வறுமை மூளையை பாதிக்கும்! - இந்திய, அமெரிக்க விவசாயிகளிடம் நடத்திய ஆய்வில் தகவல்!

வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சயன்ஸ் (science) விஞ்ஞான இதழில் வெளியாகியுள்ளன.
முன்னர் வெளியாகியிருந்த தகவல்களின்படி, வறுமைக்கும் தவறான முடிவுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான மூல காரணங்கள் சரியாக தெளிவில்லாமல் இருந்தன.
லேபிள்கள்:
கட்டுரை
Saturday, August 31, 2013
பாலியல் சம்பவங்களில் முதல் இடம் பிடிக்கும் சென்னை!
பாலியல் சம்பவங்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை முதலிடம் பிடிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநில குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013ல் பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. 2013ல் தற்போது வரை 436 வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மொத்தம் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.
லேபிள்கள்:
கட்டுரை
Thursday, July 11, 2013
ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்!
'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்கவேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமலான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீளவேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.
Friday, June 28, 2013
சித்திரவதைக்கு ஆளானோருக்கு சர்வதேச ஆதரவு தினம்! சமூக ஆர்வலர் மீனா கந்தசாமியின் பேட்டி!
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் மீண்டும் வரும்போது ஒரு ‘சித்திரவதை கட்டமைப்பு’ என்ற நிலையில் ஆட்சி பீடங்களைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைகின்றன.திட்டமிட்ட ஆட்சியாளர்களின் மொழியின் அடித்தளத்தில் தான் உலகமெங்கும் அரசு ரீதியான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன.
பொதுவாக ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை கற்பனையில் உருவாக்குவார்கள்.அதற்கு எதிரான கொள்கைகளை உருவாக்குவார்கள்.கற்பனை எதிரிக்கு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வரலாற்றை வளைப்பார்கள்.அந்த மர்ம உலகில் மனிதர்களையும், மதங்களையும், சித்தாந்தங்களையும் சாத்தானிய சக்தியாக சித்தரிப்பார்கள்.அறிவுக்கு முற்றிலும் பொருந்தாத அந்த உலகில் அசாத்தியங்கள் எல்லாம் சாத்தியமாகும்.
லேபிள்கள்:
கட்டுரை
Sunday, June 23, 2013
உலக வெப்பமயத்தால் இந்தியாவில் கடும் பஞ்சம்:வறட்சி ஏற்படும்- உலக வங்கி எச்சரிக்கை!
உலக வெப்பமயமாவது -இன்று, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, உலகத்தையே உலைகளமாக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தின் சராசரி வெப்பத்தை விட 1 .7 % வெப்பம் அதிகமாகிவிட்டதாகவும், இதனை 2020 வரை 2 % க்கு மேல் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் இணைந்து ஒருமித்த ஒப்பந்தங்களை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு , அதற்கான பிரச்சாரத்திலும், தேவையான முன் எச்சிரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன.
Saturday, June 22, 2013
UAPA சட்டம் ஒரு விரிவான பார்வை..!

நவம்பரில் (2009)மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் (UAPA) பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத அரசாக காங்கிரஸ் அரசு மாற்றியமைத்துள்ளது.
Monday, May 20, 2013
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி!
தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமுல்படுத்த முடிவு செய்திருக்கிறது; இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு விசயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டும் அளிக்கப்படப் போவதில்லை; தமிழ்வழிக் கல்வி, ஆங்கில வழிக் கல்வி இரண்டுமே அளிக்கப்படவிருக்கின்றன. தற்போது வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பணம் கட்டி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து வருகின்றனர். ஏழைகளின் பிள்ளைகள் மட்டும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று வருகின்றனர். இனி அவர்களும் விரும்பினால், இலவசமாக ஆங்கில வழிக் கல்வி பயில முடியும். தமிழக அரசின் இந்த முடிவு ஒரு பாராட்டுக்குரிய விசயம்.
















