ராமல்லா:இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஃபலஸ்தீன் விடுதலைப் போராளி காதர் அத்னானுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தி ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் மேற்கு கரையிலும், ராமல்லாவிலும் பேரணிகள் நடத்தினர்.
விசாரணை இல்லாமல் இஸ்ரேலின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 33 வயதான காதர் அத்னான் 63 தினங்களாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இருந்து அத்னானை இஸ்ரேல் ராணுவம் அநியாயமாக கைது செய்தது. அத்னானின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ஃபலஸ்தீனில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து அத்னானுக்கு தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பேரணியில் கலந்துகொண்டனர்.
“நாங்கள் அனைவரும் அத்னான்களே!” என்று முழக்கங்களை எழுப்பி மக்கள் பேரணியில் அணி திரண்டனர். ஹமாஸ் மற்றும் ஃபத்ஹின் கொடிகளை ஏந்தியிருந்த மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான முழக்கங்களை முழங்கினர். இதனிடையே இஸ்ரேல் சிறையில் அத்னானின் கைதை கண்டித்து இதர ஃபலஸ்தீன் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். அத்னானின் விடுதலைக்காக தலையிடாத பிராந்தியத்தில் முஸ்லிம் நாடுகளின் புறக்கணிப்பிற்கு எதிராகவும் ஃபலஸ்தீனில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாலும் அத்னானின் உயிரை காப்பாற்ற முடியாது என்று சிறையில் அவரை பரிசோதித்த தன்னாரவ தொண்டு குழு கூறுகிறது.
ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியான அத்னான் விடுதலையாகி ஃபலஸ்தீன் மண்ணின் விடுதலைக்காக தனது பங்களிப்பை தொடரவும், அவரது உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
0 கருத்துரைகள்:
Post a Comment