Saturday, February 25, 2012

யூத தம்பதியர் இந்தியாவை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவு!

CAW2XHWV
கொச்சி:விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கிய யூத புரோகிதர் என கருதப்படும் ஷெனோர் ஸல்மான் மற்றும் அவரது மனைவி யோஃபா ஷெனோய் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்றும், உளவுத்துறை அதிகாரிகள் இவர்களுக்கு எதிராக அறிக்கையை அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.

யூத தம்பதியர் விசா சட்டத்தை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று மாவட்ட ஆட்சியர் பி.எ.ஷேக் பரீத் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி எஸ்.ஸிரி ஜகன் உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அனுமதியளித்தார்.

விசா சட்டத்தை மீறி கேரளாவிற்கு வந்த ஷெனோர் ஸல்மான் மற்றும் அவரது மனைவி யோஃபா ஷெனோய் ஆகிய யூத தம்பதியினர் துறைமுக கொச்சிப் பகுதியில் ரூ.50 ஆயிரம் மாத வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இவர்களை அடையாளம் தெரியாத பல நபர்கள் சந்திப்பதாக ஊர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தியது.

மல்டிபிள் விசாவில் வருகை தந்து இந்தியாவில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சாட்டப்பட்ட குற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் 15 தினங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல தினங்கள் கழிந்த பிறகும் யூத தம்பதியினரை நாடு கடத்த தயாராக போலீஸ் சட்டரீதியான வழிகள் மூலமாக அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க ஏற்பாடுச் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

கொச்சியில் மட்டாஞ்சேரி பகுதியில் உள்ள யூத வழிப்பாட்டுத் தலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனை ஆட்கள் குறைவதால் முடங்குவதாக கூறி கொச்சியில் தங்கியதாக யூத தம்பதியினர் கூறினர். ஆனால், மட்டாஞ்சேரியில் உள்ள யூத வழிப்பாட்டு தலத்தை இஸ்ரேலியர்களுக்கு தங்குமிடமாக மாற்றும் முயற்சிகளை இருவரும் மேற்கொண்டதாக உளவுத்துறை ஏஜன்சிகளுக்கு தகவல் கிடைத்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza