Tuesday, May 23, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுவலசை பள்ளியில் 99 சதவிகித தேர்ச்சி..!

கடந்த மே 19-ந்தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நமது பள்ளி  99% தேர்ச்சி பெற்றுள்ளது.
 நமதூர் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 85 மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில்  பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் மட்டும்  தோல்வி அடைந்துள்ளார். மேலும், கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும்  நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம்,புதுவலசை யூனிட் சார்பாக கடந்த மே 2 தேதி முதல் 12ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி வகுப்புகள், தனித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடற் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.

Sunday, February 15, 2015

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

சாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் பல கட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக கோப்பேரி மடம் முதல் ஆற்றங்கரை வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி  தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையிலான தார் சாலை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்துடன் இப்பகுதியை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது கடந்த பல வருடங்களாகவே மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்டது. அவ்வப்போது, தற்காலிகமாக போடப்படும் சாலைகள் போடப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போய்விடும் அவலமும் இருந்து வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.

Monday, November 24, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கன மழையால் கிணறுகள் உட்பட நீர்நிலைகளில் நீர்  மட்டம் உயர்ந்துள்ளது. உமர் ஊரணி, பள்ளிவாசல் ஊரணி  உள்ளிட்ட  ஊரணிகள் நிரம்பி வழிகின்றன.

காயிதே மில்லத் பகுதி உள்ளிட்ட பல குடியிருப்பு  இடங்களில் மழை நீர்  மிக அதிக அளவில் தேங்கியுள்ளதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், பொதுமக்கள் உட்பட பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள்1018 பேர் மீதான வழக்கு ரத்து- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து நீதிக்காக போராடும்! - மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் அதன் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 17 அன்று ஒற்றுமை பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவதென்று தீர்மானித்து அதற்கு முறையாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி 16.02.2014 அன்று பெறப்பட்டது. 

Monday, November 10, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி ரவிஸ் மஹாலில் நவ.08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம் ரஃபீக் அஹமது, மாநில பொதுச்செயலாளர்கள் M.நிஜாம் முகைதீன், A.அப்துல் ஹமீது, முகம்மது முபாரக், மாநில செயலாளர்கள் A.அமீர் ஹம்சா, T.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர். ஆவாத் ஷெரீப் கலந்துகொண்டார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முகம்மது பிலால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் A.அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.
இச்செயற்குழுவில் கட்சியின் இரண்டு வருட செயல்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Friday, October 31, 2014

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை,
  அக்டோபர் 29, 2014.

சென்ற அக்டோபர் 14 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை காவல் சரகம், எஸ்.பி. பட்டணம் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன் பட்டனம் காவல் நிலையத்தில் காட்டுவா எனபவர் மகன் செய்யது முஹம்மது (24) என்பவர் அந்தக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் (எஸ்.அய்) அ.காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது. அவ் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.அய்.டி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், காளிதாஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இராமநாதபுரம் தலைமைக் காவல் நிலையத்தில் உள்ளார் எனவும், கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு தந்துள்ளது என்பதும், பல்வேறு இயக்கங்களும் செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றன என்பதும், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் இருந்த ஆறு காவலர்களும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள்.

Saturday, October 25, 2014

புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!


இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!


ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.

Wednesday, October 22, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

 தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டதால்  கடும்  வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த  புதுவலசை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள்  முன் கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும், தொடர்  மழையால் நீர் மட்டம் வற்றியிருந்த ஊரணிகள்,கிணறுகள் தற்போது நிரம்ப தொடங்கியிருக்கின்றன. 

Dua For Gaza