Showing posts with label CFI. Show all posts
Showing posts with label CFI. Show all posts

Saturday, September 21, 2013

பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்கு நீதி வேண்டி மாணவர்கள் பேரணி!


புதுடெல்லி: பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர்.
 
முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

Saturday, May 4, 2013

ஹைதராபாத் : பல்கலைக்கழகங்களில் சிறுபான்மை - தலித் மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி, போலீஸ் தாக்குதல் - கேம்பஸ் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!



புதுடெல்லி : ஆந்திரமாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மற்றும் இஃப்லு பல்கலைக் கழக வளாகங்களில் சிறுபான்மை, தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் போலீஸுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இமாமுல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏ.பி.வி.பி) தாக்குதலுக்கு இரையாகும் தலித் மாணவர்களை கைதுச் செய்யும் நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டுள்ளது. இஃப்லு பல்கலைக் கழகத்தில் கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மாணவர் முதஸ்ஸிர் கம்ரானின் தற்கொலைக்கு காரணம் பல்கலைக் கழக நிர்வாகிகள், பாசிச மாணவர் அமைப்புகள், போலீஸ் ஆகியோரின் சதித்திட்டமாகும்.

Sunday, April 7, 2013

மியான்மர், இலங்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் கையெழுத்து சேகரிப்பு!

Campus Front begins signature campaign against oppression of Muslims in Myanmar, Sri Lanka
புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டுப்படுகொலை நடக்கும் மியான்மரையும், தமிழர்களை இனப்படுகொலைச் செய்துவிட்டு அடுத்து முஸ்லிம்களின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்தியா வலுவாக கண்டிக்கவேண்டும் என்று கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கையெழுத்து சேகரிப்பை நடத்தியது.டெல்லி பல்கலைக் கழகம், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

Monday, April 1, 2013

தாழ்த்தப்பட்ட, தலித் மாணவர்களுக்கு ‘ஏகலைவா’ விருது! – கேம்பஸ் ஃபிரண்ட் அறிவிப்பு!

campus front of india
சென்னை:தேசிய அளவில் செயல்படும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் மாணவர்களில் திறமையானவர்களுக்காக, “ஏகலைவா” விருதும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டில் ஏகலைவா விருதிற்கான அறிவிப்பை வெளியிட்டது கேம்பஸ் ஃப்ரண்ட்.  பிறப்பு ஏற்ற தாழ்வுகளால் திறமைகள் மறுக்கப்பட்ட ஏகலைவா என்ற தீரனின் நினைவாக, “ஏகலைவா” விருது வழங்குவதாக முன்மொழிந்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட ஒருவனின் திறமைகள் உயர் சாதி எனும் பிறப்பு ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகின்றது. அது அன்றும், இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

Wednesday, March 27, 2013

இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு முழு ஆதரவு- கேம்பஸ் ஃப்ரண்ட்


கேம்பஸ் ஃப்ரண்ட்!
சென்னை:தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்த குற்றத்திற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்தவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் நீர்த்துப்போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.ந அவையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை.எனவே ஐ.நா அவையே ஒரு தீர்மானம் எடுத்து இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான சர்வதேச குழுவை நியமிக்கவேண்டும். இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் முழு ஆதரவை அளிக்கும் என்று தேசிய செயற்குழு தெரிவித்தது.

Tuesday, January 22, 2013

பாசிசத்தை தடுப்போம்!குடியரசை காப்பாற்றுவோம்! – கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்தும் தேசிய பிரச்சாரம்!

campus front of india
சென்னை:ஃபாசிசத்தை தடுப்போம்! குடியரசை காப்பாற்றுவோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிற ஜனவரி 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் நடத்த உள்ளது.
இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பாசிச சக்திகள் இந்திய குடியரசை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தேசத்தின் ஆன்மாவின் மீது ஆர்.எஸ்.எஸ் நடத்திய முதல் தாக்குதல்தான் காந்தி படுகொலை. ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக மிரட்டல் விடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

Friday, January 4, 2013

பாலியல் குற்றங்கள் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்டின் கோரிக்கை


அண்மையில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இறந்தார். அதே போல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்ப்பு மாணவி புனிதா பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டங்களை நடத்தியது.

 தமிழகத்தில் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வழக்கு பதிவு செய்ய்யப்படாமலும் முறையாக விசாரணை செய்ய்ப்படாமலும் குற்றவாளிகள் தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்தது.

Sunday, November 25, 2012

சீறி எழுந்த "CFI" மாணவர் கூட்டம் : அடி பணிந்த "காலிகட்" பல்கலைக்கழகம்!

கேரளாவின் "காலிகட்" பல்கலைக்கழக "தொலைதூர கல்வி" பாட புத்தகத்தின் ஆட்சேபகரமான கட்டுரையை நீக்ககோரி "Campus Front of India" (CFI) மாணவர் அமைப்பினர் போராட்டத்தையடுத்து, அதனை நீக்க பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
B.A. (மலையாளம்) மூன்றாமாண்டு பாடத்தில், "மாப்லாஸ்"களுக்கு (மலப்புரத்தில் வாழும் "மலபார்" முஸ்லிம்கள்) எதிராக "கேரள சம்ஸ்காரம்" என தலைப்பிட்டு 31ம் பக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான 1921ல், 500 முதல் 600 ஹிந்துக்களை, மாப்லாஸ்கள் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது.

Thursday, November 8, 2012

மேலப்பாளையத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் தேசிய கல்வி தின விழா கொண்டாட்டம்



தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நான்காம் ஆண்டு துவக்க நாளான நவம்பர் 7 அன்று CAMPUS DAY மற்றும் நவம்பர் 11 தேசிய கல்வி தினவிழா இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு கலந்தாய்வு நிகழச்சி நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் K.S.தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார் . பள்ளியின் தலைமையாசிரியர் பரக்கத் உம்மா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

Tuesday, October 2, 2012

இயக்க சுதந்திரம்:கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்திய பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பு!

campus front of india
புதுடெல்லி:கல்வி கூடங்களில் இயக்க சுதந்திரம்(organisational freedom)  கோரி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பை நடத்தியது.
மதியம் 2.30 மணியளவில் துருக்மான் கேட்டில் இருந்து அணிவகுப்பை துவக்கிய உறுப்பினர்களை போலீசார் ஜந்தர் மந்தரில் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த கண்டனப் போராட்டத்தை தேசிய தலைவர் அனீசுஸ்ஸமான் துவக்கி வைத்தார்.

Friday, March 4, 2011

குடியுரிமை மீறல்களுக்கெதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி

புதுடெல்லி,மார்ச்.4:குடியுரிமைகளை பாதுகாப்பதற்கான டெல்லியில் நடந்துவரும் ஒருவார கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர்மந்தரில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பேரணி நடைபெற்றது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்தல், டாக்டர் பினாயக் சென்னை விடுவித்தல், கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறுதல், பாட்லா ஹவுஸ் போலி மோதல் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி, அலிகர், ஜாமிஆ மில்லியா ஆகிய பல்கலைக்கழகங்களில் கருத்தரங்கங்களும், இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்தியாவில் மக்களின் குடியுரிமைகளை பாதுகாப்பதற்காக மாணவர் சமூகம் களமிறங்க வேண்டுமென ஜந்தர்மந்தரில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்ட கேம்பஸ் ஃப்ரண்டின் டெல்லி மாநிலத் தலைவர் ஆலம் அஃப்தாப் உரைநிகழ்த்தினார்.

தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது அனீசுர் ரஹ்மான் இப்பேரணியில் பங்கேற்றார்.

Dua For Gaza