வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அந்நாட்டின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜூலை மாதம் ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறுவது துவங்கும் என முன்பு அமெரிக்கா அறிவித்திருந்தது.
அஹ்மதாபாத்:துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது. சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது.பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவித்த சி.பி.ஐ ஐ.ஜி கந்தசாமி கூடுதல் விபரங்களை தெரிவிக்கவில்லை.