டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பு மக்கள் எழுச்சி கிளர்ந்துவிட்டெரியும்சிரியாவில் ரகசிய போலீஸின் கோரத்தாண்டவம் அரங்கேறுகிறது.
டமாஸ்கஸின் அண்மை பிரதேசமான ஹரஸ்தாவில் நேற்று அதிகாலை வீடுகளில் போலீஸ் ரெய்டு நடத்தியது. இதேவேளையில் நாடுமுழுவதும் ரகசிய போலீஸின் ரெய்டுகள் நடத்தப்பட்டன. தெற்கு நகரங்களான ராகா, இத்லிப், ஹலப் ஆகிய இடங்களில் நிரபராதிகள் கைது செய்யப்பட்டனர். இங்குள்ள வீடுகளில் கதவை உடைத்துக்கொண்டு திடுதிப்பென்று நுழைந்த ரகசிய போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கியது.
காணாமல் போன 18 நபர்களைக் குறித்த விபரங்களை சிரியன் அப்ஸர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கொலைச் செய்து, சித்திரவதைகளில் ஈடுபடும் சிரிய அரசுக்கெதிராக தடை ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சுமார் 800 பேர் மரணமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களின் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கடந்த 2 தினங்களில் மட்டும் 112 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த 38 போலீஸ்காரர்களின் விபரங்களை நேற்று அதிகாரிகள் வெளியிட்டனர்.
அதிகமான மக்கள் கொலைச் செய்யப்பட்ட தராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமாச் செய்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை அடக்கி ஒடுக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து பதவியை ராஜினாமாச் செய்வதாக நஸீர் அல் ஹரீரி, கலீல் அல் ரஃபீரி ஆகியோர் தெரிவித்தனர்.
அதேவேளையில், சிரியாவில் வசிக்கும் தங்களது நாட்டு குடிமக்கள் உடனடியாக நாடு திரும்ப பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment