Monday, April 25, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்

imagesCADW5OA8
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:”ஜோஷியின் மரணத்தை என்.ஐ.ஏ விசாரிக்காவிட்டால் உண்மை ஒருபோதும் வெளிவராது.
2008 ஆம் ஆண்டு பாட்லா ஹவுஸில் இரண்டுபேர் மரணத்திற்கு காரணமான சம்பவம் என்கவுண்டர் என போலீஸ் கூறுவதின் ஆதாரப்பூர்வ தன்மையைக் குறித்து சந்தேகிக்கிறேன். இதுத் தொடர்பான புகைப்படங்கள் என் வசம் உள்ளன.

மோதலின்போது யாருடைய தலையை நோக்கி ஐந்து முறை சுடமுடியுமா? இது என்கவுண்டர் அல்ல. இதனை நான் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இதுத் தொடர்பாக புகார் அளித்தவர்களை தேசிய மனித உரிமை கமிஷன் அழைத்து விசாரித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டாகும்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸம்கர் முஸ்லிம்களின் வீடுகளுக்கு சென்றபொழுது ஆர்.எஸ்.எஸ்ஸும், உலமா கவுன்சிலும் என்னை தடுத்தது. கல்விகற்ற முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக கிளப்பப்படும் தீவிரவாத குற்றச்சாட்டு என்னை நிம்மதியிழக்கவைத்தது. இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

விசாரணையை விரைவாக நடத்துவதை சாத்தியமாக்க மட்டுமே என்னால் இயலும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நான் தெரிவித்தேன்.” இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza