புதுடில்லி:உல்பா அமைப்பின் செலவிற்காக மத்திய அரசு தினமும் ரூ.40 லட்சம் வழங்குகிறது.உல்பா அமைப்பினரின் அன்றாட செலவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உல்பா அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 400 பேரின் தேவைகளுக்காக அசாம் மாநில அரசின் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்பான உல்பாவிற்காக மேலும் பல நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்க உள்ளது. ஜனவரி மாதம் முதல் முறையாக உல்பா அமைப்பு தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
உல்பா தலைவர்கள் மற்றும் மத்திய அரசு உடனான அடுத்தக்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜூன் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய மற்றும் மாநில அரசு, உல்பா அமைப்பினர்களுக்கு நலப்பாரி மாவட்டத்தில் நிலம் வழங்க ஒப்பு கொண்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment