Monday, April 25, 2011

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக

121216298
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

ஹஸாரேவை புதிய காந்தியாகவும்,லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகவும் சித்தரிப்பதன் மோசடியை வெளிச்சம் போட்டு காட்டி ஹாஷ்மியுடன் வரலாற்றாய்வாளர் டாக்டர் கே.என்.பணிக்கர், பிரபல திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் ஆகியோரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தை துவக்கம் முதலே நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ஆகும் என ஷப்னம் ஹாஷிம் தெரிவிக்கிறார். லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின் மூலம் ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் முயன்றனர். ஹஸாரேவுடன் லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தில் பங்கேற்ற பலரும் ஆர்.எஸ்.எஸ் விரித்த வலையில் சிக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

லோக்பால் மசோதாவிற்கான போராட்டத்தின் உடலுழைப்பு ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவாதிகள் எடுத்துக்கொண்டனர். அவர்கள் விநியோகித்த மடக்கோலைகள் அனைத்து சிறுபான்மையினருக்கு எதிரானவையாகும். நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தாம் ஆனால் சமூகத்தை அழிவை நோக்கி வழிநடத்துபவர்களை ஆதரிக்கவியலாது  என ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.

ஹஸாரேயை மகாத்மா காந்தியுடனும், ஜெயபிரகாஷ் நாராயணனுடனும் ஒப்பீடுச் செய்ததைக் குறித்து வரலாற்றாய்வாளர் டாக்டர் கே.என்.பணிக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரலாற்றில் ஒரேயொரு காந்தி மட்டுமே இருந்துள்ளார். ஆனால், அவர் ஒருபோதும் ஜனநாயக கட்டமைப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. ஹஸாரேவின் போராட்டம் முழுவதும் ‘நானும்!நீங்களும்!’ என்ற பார்வைதான் தென்பட்டது. ஆனால், காந்தியின் போராட்டத்தில் ஒருபோதும் எதிரி மனப்பான்மை இல்லை என தெரிவித்த கே.என்.பணிக்கர் குஜராத் முதல்வர் மோடியை பாராட்டிய ஹஸாரேவை கடுமையாக விமர்சித்தார்.

குஜராத்தில் தற்போதும் சிறுபான்மையினர் வேட்டையாடப்படுகின்றனர் என்பது நாடு முழுவதும் தெரியும். இதனை ஹஸாரே அங்கீகரிக்கிறாரா?  என கே.என்.பணிக்கர் கேள்வி தொடுக்கிறார்.

தற்போதைய ஜனலோக்பால் மசோதா ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பாக உள்ளது. இது அதிகார மையப்படுத்தலுக்கும் அவசர நிலைக்கும் காரணமாகும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஃபாசிசத்திற்கு ஆதரவான, அவசரநிலைக்கு சமமான சூழலைத்தான் இது உருவாக்கும் என கே.என்.பணிக்கர் தெரிவித்துள்ளார்.

லோக்பால் மசோதா ஊழலை தடுக்க போதுமானதல்ல. உலகமயமாக்கலின் ஒரு பகுதியான கொள்கைரீதியான தலையீடுகளும் ஊழலாகும். லோக்பால் மசோதா தப்பிப்பதற்கான சட்டமாகும். அரசுக்கு இது பாதுகாப்பு அளிப்பதாகும்.

ஹஸாரேவின் போராட்டம் பெரும் நகரங்களில் மட்டுமே நடந்தது. ஊடகங்கள்தாம் இப்போராட்டத்தை ஊதிப் பெருக்கியது. மணிப்பூரில் இரோம் ஷர்மிளாவும், ஆந்திரபிரதேசத்தில் போற்றி ஸ்ரீராமலுவும் நடத்தும் போராட்டங்களுக்கு ஹஸாரேயின் போராட்டத்திற்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை. வெறும் ஐந்து தினங்கள் மட்டுமே ஹஸாரே போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால், ஸ்ரீராமலுவோ தனது வாழ்க்கையையே போராட்டமாக ஒதுக்கிவைத்துள்ளார். ஷர்மிளா கடந்த 10 ஆண்டுகளாக போராட்டத்தை தொடர்கிறார் என தெரிவித்த கே.என்.பணிக்கர் அரசியல்வாதிகளுக்கெதிரான ஹஸாரேயின் நிலைப்பாட்டினையும் விமர்சித்துள்ளார்.

தான் அரசியல்வாதிகளுக்கு எதிரானவன் என ஹஸாரே கூறுகிறார். அரசியல் இல்லாமல் ஜனநாயகம் எவ்வாறு நிலைபெறும் என கே.என்.பணிக்கர் கேள்வி எழுப்புகிறார். லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இவர்கள் பதில் கூறவில்லை என கே.என்.பணிக்கர் குற்றஞ்சாட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza