மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி பிஜேபி மகாத்மா காந்தியை தேச பிதாவாக ஏற்றுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இன்றளவும் பிஜேபி காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதற்கு பிஜேபி தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தின் முன்னால் முதலமைச்சர் ஹேமாவதியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு மதம் மற்றும் சாதீய அரசியலின் சவால்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் உலகம் முழுவதும் மகாத்மா காந்தியை சிறந்த ஒழுக்கமுடையவராகவும் அரசியல் தலைவராகவும் அங்கீகரித்துள்ளனர்.
காந்தி அவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஒப்புயர்வற்ற தலைவராக திகழ்ந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் தேச தந்தை என்று அழைக்கபட்டவர். ஆனால் ஹிந்துத்வ R .S .S . அமைப்போ சுதந்திர போராட்டத்தின் போதும் ஹிந்து ராஷ்ட்ரியம் வேண்டும் என்று கேட்டவர்கள்.
1939 ஆம் ஆண்டு எம்.எஸ். கோல்வல்கர் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டும் தான் அனைத்து உரிமைகளும் உண்டு இந்து அல்லாத பிற மதத்தவருக்கு இங்கு சம உரிமை இல்லை என எழுதியிருந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் ஜெயபால் கூறியதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவினையை R .S .S .அமைப்பும் ஆதரித்தது. ஆனால் காந்தியையும் நேஹ்ருவையும் இதில் குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனர் எனக் கூறினார்.
மேலும் பல வருடங்களாக பிஜேபி யும் R .S .S ம் ராபின்தரநாத் தாகூர் எழுதிய ஜன கன மனவை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்துள்ளனர் எனக் கூறினார். தில்லியிலும் உத்திர பிரதேசத்திலும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது மிகவும் துரதிஷ்ட வசமானது என கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment