கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச்செய்யப்படுவர்.கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.
நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள்.ஏகாதிபத்தியமும், ஃபாசிசமும், அரச பயங்கரவாதமும், கறுப்புச்சட்டங்களும் கொடூரத்தை வெளிக்கொணரும் வேளையில் அதனை திருத்தவேண்டிய பொறுப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என அனீஸ்ஸூர்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment