Tuesday, April 26, 2011

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது

sri-lanka-2
வாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் அனைத்து போர்விதிமுறைகளையும் இலங்கை அரசு மீறிவிட்டதாகவும்,போர் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்டது எனவும் ஐ.நா அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி தமிழ் மக்களை கொலைச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் என்பவர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. முழுமையாக விசாரணை நடத்திய இக்குழுவினர் 214 பக்க அறிக்கையை ஐ.நாவிடம் அளித்தனர்.

பொதுமக்கள் வசிக்கும் இடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிவிலியன் பகுதிகளில் வேண்டுமென்றே குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரில் உபயோகிக்க தடைச் செய்யப்பட்ட குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தப்பி ஓட முயன்றவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருதரப்பினருமே பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இருந்துக் கொண்டே ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்ப் பெண்கள் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளனர். ஒரு லட்சம்பேரை காணவில்லை.

இலங்கை ராணுவமும்,விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறி போர் குற்றம் புரிந்துள்ளனர்.ஐ.நா அறிக்கை வெளியாகியுள்ள சூழலில் இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே! ஏனெனில் ஃபலஸ்தீனில் காஸ்ஸாவில் வாழும் அப்பாவி முஸ்லிம்கள் இஸ்ரேலிய சியோனிச அரசால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட பிறகு ஐ.நா நியமித்த கோல்ட் ஸ்டோன் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கோல்ட் ஸ்டோன் இஸ்ரேலுக்கு ஆதரவாக அண்மையில் பல்டியடித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza