காபூல்:ஆப்கானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏழு எண்ணெய் டாங்கர்களை தாலிபான் போராளிகள் தீவைத்துக் கொளுத்தினர். ரோஸாவில் வைத்து டாங்கர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் தாலிபான்கள். வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.
இத்தாக்குதலுக்கு பின்னணியில் போராளிகள் செயல்பட்டுள்ளதாக மாகாண போலீஸ் அதிகாரி ஸொராவர் ஷாஹித் தெரிவித்துள்ளார்.தாக்குதல் நடந்த பிரதேசத்தை போலீஸ் சுற்றிவளைத்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைதுச்செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடல் வழியாக பாகிஸ்தானின் கராச்சிக்கு வரும் நேட்டோ படையினருக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தரை மார்க்கமாக ஆப்கானுக்கு கொண்டுசெல்லப்படுவது வழக்கம்.நேட்டோ வாகனங்கள் மீது தாக்குதல் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது
0 கருத்துரைகள்:
Post a Comment