டாக்கா:நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷ் கிராமீய வங்கி ஸ்தாபகர் முஹம்மது யூனுஸுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு சரியல்ல என அரசு நியமித்த விசாரணை குழு கண்டறிந்துள்ளது. கிராமீய வங்கிக்கான நார்வே நாட்டின் உதவியை யூனுஸ் அபகரித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டது.
யூனுஸை கிராமீய வங்கிய இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி இரண்டு மாதங்கள் முடியும் முன்பே விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.
வங்கியில் ஊழல் குறித்து கண்டறிய விசாரணை குழுவால் இயலவில்லை என பங்களாதேஷ் நிதியமைச்சர் எ.எம்.எ முஹித் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment