Thursday, April 28, 2011

யெமன் நாட்டில் சட்டத்தை மீறும் பிரச்சாரம் துவங்கியது

Jan11YemenProtests_452
ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி 2 மாதங்களை தாண்டியுள்ள மக்கள் எழுச்சிப்போராட்டம் புதிய வழிமுறைகளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இதன் ஒரு பகுதியாக சட்டத்தை மீறும் போராட்டத்தை நேற்று எதிர்ப்பாளர்கள் துவக்கியுள்ளனர்.

இப்போராட்டத்தில் 18 நகரங்கள் பங்கேற்கும் என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசங்களில் கடைகள் திறக்கவில்லை. பள்ளிக்கூடங்களும்,அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.இரண்டுவாரம் நீண்ட போராட்டமாக இது அமையும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி போராடும் மக்களின் கோரிக்கையை புறக்கணித்து ஆட்சியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹை கண்டித்து ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமாச்செய்துள்ளனர்.

அதேவேளையில், நேற்று யெமனின் பல இடங்களிலும் மோதல்கள் நடந்தேறின.ஏடனில் அரசு எதிர்ப்பாளர்களும், ராணுவமும் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.

 டாங்குகளும், ஆயுதங்கள் நிரப்பிய வாகனங்களுடன் ராணுவத்தினர் வந்தனர்.அபியானில் ராணுவ பாதுகாப்பு முகாமை தாக்கிய ஆயுத ஏந்தியவர்கள் இரண்டு ராணுவத்தினரை கொலைச்செய்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza