லக்னோ:சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த சனியன்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வக்ப் வாரிய நிலங்களை கையகப்படுத்த முயல்கிறது என குற்றம் சாட்டினார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் மத்திய அமைச்சரகம் தேசிய அளவிலான புதிய வக்ப் வாரியத்தை கட்டமைக்க உள்ளதாகவும் இந்த வாரியம் வெறும் 24 சதவீத வக்ப் நிலங்களை மட்டும் முஸ்லிம் சமூகத்திடம் கொடுக்கும் என்றும் மீதமுள்ள 76 சதவீத நிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

இது முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் அதனால் இது போன்ற நடவடிக்கையை சமாஜ்வாடி கட்சி முழுமையாக எதிர்பதாகவும் தெரிவித்தார். வக்ப் சொத்துக்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் அந்த உரிமையை பறிப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளார். வக்ப் சொத்துக்கள் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய முன்னோர்கள் விட்டு சென்றதாகும் எனவும் கூறினார்.
உத்திர பிரதேசத்தில் தான் ஆட்சியில் இருந்த பொழுது வக்ப் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டதாகவும் சில இடங்களில் வக்ப் நிலங்கள் சுற்று சுவர் எழுப்பப்பட்டு பாதுகாக்க பட்டதாகவும் தெரிவித்தார்.
நடுவண் அரசு தன்னுடைய முடிவை திரும்ப பெறாவிட்டால் முஸ்லிம் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். இன்னும் முஸ்லிம் தங்கள் சொத்துக்களுக்கு இனி இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment