கெய்ரோ:இஸ்ரேல் விதித்துள்ள தடையால் துயரத்தை அனுபவிக்கும் காஸ்ஸாவின் எகிப்திய எல்லையான ரஃபா உடனடியாக திறக்கப்படும் என எகிப்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் நபீல் அல் அரபு தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்தார்.
காஸ்ஸா மீதான தடையை நீக்குவதற்குரிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ரஃபா எல்லையை நிரந்தரமாக திறந்து விட தீர்மானித்துள்ளோம். எல்லையை மூடுவது மோசமான நடவடிக்கை என நபீல் அல் அறபி கூறினார்.
அதேவேளையில், எகிப்தின் நடவடிக்கை கவலையை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடக்கு சினாயில் ஹமாஸ் ஏற்படுத்தியுள்ள ராணுவ வசதிகள் எல்லையை திறப்பதன் மூலம் வலுவடையும். ஈரான், ஹமாஸ் ஆகியவற்றுடனான எகிப்தின் உறவை புனரமைப்பது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் அதிகாரி கூறுகிறார்.
2006-ஆம் ஆண்டு காஸ்ஸாவின் மீது தடையை ஏற்படுத்தியது இஸ்ரேல். தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த தடை வலுவடைந்தது. ரஃபா எல்லையில் சுரங்கத்தை அமைத்து பலஸ்தீன் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை சேகரித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment