வாஷிங்டன்:தென் அமெரிக்காவில் பல நாட்களாக தொடர்ந்து வீசும் புயல் காற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. சூறாவளியினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ள அலபாமா மாநிலத்திற்கு செல்வேன் என அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவசர உதவி வழங்கப்படும் என அதிபர் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அலபாமா, மிசிசிபி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளோரிடாவில் எண்டோவர் ஸ்பேஸ் செண்டருக்கு செல்லும் வழியில் ஒபாமா அலபாமாவுக்கு செல்வார்.
அலபாமா ஆளுநர் உள்பட உள்ளூர் அதிகாரிகளையும் ஒபாமா சந்தித்து நிலைமைகளை குறித்து ஆராய்வார். அலபாமாவில் மொத்தம் 131 பேர் மரணித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ரோபர்ட் பென் தெரிவிக்கிறார். 60 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அவர் தெரிவிக்கிறார். மிசிசிபியில் 32 பேர், டென்னீஸில் 30 பேர், அர்கன்ஸாஸில் 11 பேர், ஜார்ஜியாவில் 14 பேர், விர்ஜீனியாவில் எட்டுபேர், லூதியானாவில் இரண்டுபேர் மரணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெருமளவிலான இழப்பை ஏற்படுத்திய கத்ரினா புயலுக்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவில் தற்போது கடுமையான புயல் வீசுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment