Wednesday, April 27, 2011

சாயிபாபாவின் உதவியாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

sathyajith
புட்டபர்த்தி(ஆந்திரபிரதேசம்): சாயிபாபாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் சத்யஜித்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. சத்யஜித்தின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சத்யஜித்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாயிபாபாவுக்கு போதுமான உணவு வழங்கவில்லை எனவும், அதிகமாக வேதனஸம்ஹாரி அளித்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சாயிபாபாவின் உடல்நலம் சீர்கெட அதுதான் காரணம் என போலீஸ் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

ஆனால், சாயிபாபாவை மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு முன்பு வேதனஸம்ஹாரி வழங்கியதை உறுதிச்செய்யவோ, மறுக்கவோ அவருக்கு சிகிட்சையளித்த சத்யசாய் இன்ஸ்ட்யூட் ஆஃப் ஹயர் மெடிக்கல் சயன்ஸில் மருத்துவர்கள் தயாரில்லை. சத்யசாய் அறக்கட்டளைக்காக செயலாளர் கெ.சக்ரவர்த்தியுடன் கையெழுத்திட அதிகாரமுடைய நபர்தான் தமிழ்நாட்டை சார்ந்த சத்யஜித்.

ஆசிரமத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் சத்யஜித்திடம் பகைமை பாராட்டுபவர்கள் உண்டு எனவும், சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து சத்யஜித்தை கொல்ல முயற்சி நடக்கலாம் எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமை சாயிபாபாவின் இறந்த உடலுக்கு அருகில் சத்யஜித் சிறிது நேரமே இருந்தார்.

தனது அறையில்தான் அவர் பெரும்பாலும் செலவிட்டார். சாயிபாபாவின் இறுதிஸ் சடங்குகள் முடியும்வரை பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருக்க சத்யஜித்திடம் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza