Tuesday, April 26, 2011

மோடியுடன் நடந்த சந்திப்பில் பட் கலந்துகொள்ளவில்லை – முன்னால் டிஜிபி

modi_meeting_chakravatiphono1a_271x181
அஹ்மதாபாத்:குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள குஜராத் காவல்துறையின் மூத்த அதிகாரி பட் கலவரத்திற்கு முன் 2002 பிப்ரவரி 27  ஆம் தேதி மோடியுடன் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என முன்னால் டி ஜி பி தெரிவித்துள்ளார்.

மோடியுடன் நடந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஹிந்துக்கள் தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியதாக பட் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குழப்பம் விளைவிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் பட் அந்த கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை எனவும் இதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மோடி ஆட்சியில் இருக்கும் வரை பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என காங்கிரஸ் தில்லியில் தெரிவித்துள்ளது.

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் கூறியுள்ளது. கலவரம் நடக்கும் சமயம் முஸ்லிம்களை பாதுகாக்கும் செயலில் ஈடுபட கூடாது என காவல்துறை அதிகாரிகளிடம் மோடி தெரிவித்துள்ளது தவறு என்றும் இது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

எல்லோரும் அறிந்தது போல பிஜேபி மோடியை பாதுகாக்கும் வேலையில் இறங்கியுள்ளது. மோடி கலவரத்தை ஆதரித்து இருப்பார் என்று கூறுவதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என பிஜேபி முன்னால் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பட் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் டிஜிபி அழைப்பினைத் தொடர்ந்து தான் மோடியுடன் கூடிய சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பட் கலவரம் நடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் உளவுத்துறையின் காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்தவர். எனினும் மோடி சிறப்பு புலனாய்வு குழுவில் பட் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். ஆனால் பட்டின் டிரைவர் தாரா சந்த் யாதவ்  டிஜிபியுடன் பட் முதலமைச்சர் வீட்டிற்கு சந்திப்பு நடந்த நாளில் சென்றதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza