Wednesday, April 27, 2011

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்

france prayer
பாரிஸ்:பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.

இவரது இந்தக் கருத்தையொட்டி, ஒருபுறம் முஸ்லிம் மக்கள் பொது இடங்களில் தொழுவதற்கு அனுமதியும் உண்டு என்றும் வாதிடுகின்றனர்.அதே நேரத்தில்  மறுபுறம் பிரான்ஸ் மக்கள், பொது இடங்களை தொழுகை என்ற பெயரில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதோடு நாங்கள் எல்லை மீறுவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கருத்துக்கள் வெளியாவதை பிரெஞ்சின் சட்டமியற்றுனர் ஆக்ஸல்  அர்ஜின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பியாவிலே பிரான்சில் தான் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகாமாக உள்ளது. ஆனால் அவர்கள் தொழுவதர்க்கான மசூதி ஒன்று மட்டுமே உள்ளது, வெள்ளிகிழமை தொழுகைக்கு இடப் பற்றாக்குறையால் அவர்கள் தெருவில் தொழும் நிலை உள்ளது,  நாங்கள் தெருவில் தொழுகிறோம் என்றால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் மூஸா நியம்பேலே தெரிவித்துள்ளார்.

1905-ல் பிரெஞ்சு அரசியல்வாதிகள் தெரிவித்தக் காரணம் நாட்டின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், உரிமையியல் மாநகர தலைவரும் அதற்க்கான அனுமதியை மறுத்து விட்டார் என்பதையும் நினைவு படுத்தினார். வரி கட்டும் முஸ்லிம்களால், தங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத மசூதியை கட்ட அரசாங்கத்திற்கு உதவ முடியாதா என்றும்,. இப்பொழுது பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் கட்டப்பட்டு கொண்டு இருக்கும் இந்த மசூதியும் பற்றாகுறையாகவே இருக்கும் என்றும் பலரால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza