Monday, April 25, 2011

பாப்ரிமஸ்ஜித்:வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – முஸ்லிம் தனியார் சட்டவாரியம்

law
ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி மற்றும் பால்தாக்கரேவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிபதி லிபர்ஹான் கமிஷன் அறிக்கை, அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மவ்லானா ரபே ஹஸன் நத்வியின் தலைமையில் இரண்டு தினங்களாக நடைபெற்ற வாரியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அறிஞர்கள், மார்க்க தலைவர்கள், வாரியத்தின் 51 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 200 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வாரியத்தின் பிரதிநிதித்துவப்படுத்த நான்கு மூத்த வழக்கறிஞர்களை கண்டறிவதற்கான முயற்சிகள் தற்போது நடந்துவருவதாக வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி தெரிவித்தார்.

பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உள்பட ஏழுபேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் விசாரணை ராய்பரேலியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza